காதல் கிளி ...!


உன் அன்பு கிளி
ஆசை மொழி பேசும்
போது

மஞ்சக் கிளியானவள்
அங்கம் சிவக்கும் போது

தங்கக் கிளியாய் தரை
பார்க்கும் நாணத்தில்

பண்புப் கிளியாய் பறக்கிறாள்
உன் பக்கம் வந்து
சொர்க்கம் காட்டும்
சொர்ணக் கிளியானவள்

காதல் வெப்பத்தில்
கரையும் காம ராகங்களை
இசைக்கும் இதயப் பறவையாய்

உன் இதயக் கோவிலில்
இடம் பெயர்க்கிறாள் இந்த
காதல் கிளி ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145