அசையாதா அரசியல் தேர்?


நெனச்சதை எல்லாம் நடத்தி வச்சது
அந்த காலம் கலவரத்தை
மூட்டி விட்டு உயிரை எடுப்பது
இந்த காலம்

பயிரை விதைத்தவன் பசியை மறந்தது
அந்தக் காலம் விலையின்
பஞ்சத்திலே பாடை தேடுவது
இந்தக் காலம் ...!

அணையைகட்ட ஆருயிரை அற்பணித்தது
அந்தக் காலம் அந்த ...
அணையை பூட்டி ஆதாயம் தேடுவது
இந்தக் காலம் ...!

கப்பம் கட்ட வாணிகம் தந்தது
அந்தக் காலம் அதை
கருப்பு பணமாய் சொத்தாய் குவித்தது
இந்தக் காலம் ....!

விதியைக் கூட விரட்டியடித்தது
அந்தக் காலம் இன்று
விஞ்ஞானத்தையே விலைக்கு வாங்கி
விஷமாய் மாற்றுவது இந்தக் காலம் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)