ஓர் தனிப்பிறவிகள் ...!


யாவரும் செல்லும்
சாலையில் ஓர்
மூவருலா ஓலைகள் ...

கந்தல் மேனியில்
கலர்கலர் ஆடைகள்
குளித்தும் குளிக்கா
கோரப் பற்களுடன் ....

தலைவிரி கோலத்தில்
தனித்தனி பின்னல்கள்
எண்ணையில்லா காற்றில்
எகிறி பறக்கும் நாணல்கள் ...

கைகோர்த தட்டினிலே
கந்தல் நோட்டு சில்லரைகளுடன்
பசிக்கு பண்ணும் டீயும்
படுக்கைக்கு கோயில் மடமும்

வருகை பதிவுமில்லை
வாக்கெடுப்புமில்லை
இதயம் திறந்து வாழ்கிறார்கள்
இந்திய மண்ணில் இவர்களும்
ஓர் தனிப்பிறவிகள் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...