விதியில் நானும்
விளக்கேற்றினேன்
விடியலில் சில நாள்
விரதத்தில் பல நாள்
இந்த சில பல நாட்கள்
சேர்ந்து வேர்களாய் வித்திட்டது
என் தலைமுறையில் ....
உருஞ்சிய இரத்தங்கள்
உருகிய நிலையிலும்
ஓடாய் மாடாய்
ஓயாமல் உழைத்தேன்
விலை தொட்ட மாற்றத்தில்
வீடு வீடாய் பத்து பாத்திரம்
தேய்த்து என் பகல் பொழுதை
கழித்தேன் ...
எங்கள் இரவு மாளிகையில்
ஈரத்துணியால் ஒட்டிய வயிறு
ஓசை நயத்துடன் உளறுவதை
கண்டு உறங்காமல் விழித்த
கனவை வெறுத்தேன் ...
கடலா மருந்தா
என குழம்பும் நேரத்தில்
விதி தொடாமலே
விடை பெறுகிறேன்
நீண்ட உறக்கத்தில் என்
உயிர் பெற்ற மண்ணில்
உடல் பற்றும் விதைகளாய்...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...