ஜாதிகள் இல்லையாட ...!


நிலா ...!
இரவின் கண்கள் - ஆம் 
இரு இதயங்களை சேர்த்துவைக்கும் 
உலா ...!
சொல்கிறேன் கேள் ....

நீயின்றி நான் வாழ்வது 
நிஜமில்லை .....
உன் நிழலின்றிபோனால் 
நான் நீந்துவது நிஜமில்லை 
பின் ஏனடா ஜாதி வெறி 

ஜடலங்கள் கொடுக்கும் 
நாற்றத்தை யாரும் 
சாக்கடையில் கலக்குவதில்லை 
அப்போது ஜாதி தெரிகிறதா ...
சொல் இல்லையே ...

அதுமட்டுமா ?
மயிரை எடுக்கும் 
மன்னவன் முதல்
உயிரை கொடுக்கும் 
மருத்துவர் வரை 
ஊற்றாய் உருமாறுவது 
குறிதியடா அது 

இல்லாமல் போனால் 
இறுதியடா ....
இதை தெரிந்தபின்பும் 
புரியலடா ....
இன்னும் ஜாதிவெறி அடங்கலடா 
இடையில் இருப்பது 
நாட்களடா இதை 
மறந்து விட்டால் 
நாயிகள் கூட குரைக்கும்மடா

நன்றி கெட்ட நாட்டினிலே 
பேய்கள் கூட மாறியதால் 
பிள்ளை பேர்கள் இங்கு 
பிறக்குதடா ...

இளைய தலை முறையை 
திருத்தவே எங்கள் 
இதயச் சுரங்கம் 
வெடிக்குதடா ....

ஜாதியொன்று இல்லையடா 
ஜோதி ஒன்றே போதுமடா 
என்று நாதம் சொல்லி 
பாடுங்கட நாமெல்லாம் 
ஒன்றே குலம்மென்று போற்றுங்கடா
அப்போது தானடா சுதந்திரம் ....!

4 comments:

  1. சாதிய வெறிகள் மறையட்டும்! நல்ல கவிதை!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    ReplyDelete
    Replies
    1. நானும் வழிமொழிகிறேன்
      பாராட்டுக்கு அன்பு நன்றிகள் பல

      Delete
  2. வீரமிகு வரிகள்... அருமை...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145