மாமன் உன் கைபிடிக்க...!


சுட்டும் விழியால் என்னை
கட்டி போட்ட காதலியே
பட்டும் படாமலும் என்னை
தொட்டு செல்வது நாயமா

அன்பே
விட்டுக் கொடுக்காமல் உன்னை
தட்டி எழுப்புகிறேன் தினமும்
முட்டித் தவிக்கும் இதயத்தை
எட்டிப் பார்க்காமல் போவது நாயமா ...!

சொல்லடி ....
கொட்டி பார்த்தும் கோவப்படுகிறேன்
வட்டி கட்டிய அன்பை
போட்டிபோட்டு மறைத்துவிடதே

பூட்டிப் போட்ட இதயத்தால்
மாட்டிகிட்டு தவிக்கிறேன்
மாமன் உன் கைபிடிக்க ...!

2 comments:

 1. அழகான வரிகள்...  கோபுரவாசலிலே...!
  தேவதை ...!
  காற்றில் கரைக்கவே ...!
  நமது முகமாய் ....!
  வாசமுள்ள மலருக்காக...!
  காற்றாய் நுழைகிறேன்...!
  நம் சுற்றமேல்லாம் வாழ்த்தவே ....!
  இல்லற உலாவில் நல்லறம் படைக்க ...!
  அகதியானேன் அனாதையின் ஆசிரமத்தில் ...!
  இன்னொரு வாய்ப்பைதேடி ...!
  தக்கவைத்துக்கொண்டேன்...!
  காதல் உருவமே ...!

  அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)