நீ நிஜமோடு வருவாயா ...?


உள்ளமோடு பள்ளி கொள்கிறேன்
உன்னை நினைத்து கள்ளி
கள்ளமோடு கண் மறைகிறாயே ஏன்...?

என் எண்ணமோடு கலந்தவளே
கலை வண்ணமோடு காட்சி
தந்து கனவோடு மறைகிறாயே ஏன் ...?

நினைவோடும் மனதோடும்
நீங்கா இடத்தை பெற்று
என் நிழல் கண்டு ஓடுகிறாயே ஏன் ?

உனதோடு நானாகி நமதோடு
விளையாட கருவோடு பிறந்த
காதலை கற்று தருகிறேன்
நீ நிஜமோடு வந்தால் மட்டுமே ...!

2 comments:

  1. ம் அருமை

    நிஜம் அது எங்கே இருக்கு?

    ReplyDelete
  2. எனக்கும் தெரியவில்லை அண்ணா நானும் தேடிக்கொண்டே தான் இருக்கிறேன் தங்கள் வருகைக்கு அன்பு நன்றிகள்

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு