கொடியதில் கொடியது பசி ...!

கட்டியப் பூக்களை காசாக்க
கொட்டிய மழையில் 
குடை பிடித்து விற்கிறேன் 
எல்லா கொடுமைகளைவிட 
பசியின் கொடுமை கடியதோ ...?
  




8 comments:

  1. உண்மை தான்...

    (கடியதோ ...? --> கொடியதோ ...?)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

  2. மழை கொட்டித்துன்னா நீங்க் சொல்றாப்போல
    ஏதோ உடனடியா வந்த விலைக்கு வித்துட்டு
    ஓடறவங்க நிசமா பூ விக்கறவங்க இல்ல.

    அன்னிக்கு ஒண்ணுக்கு பத்து வில விக்கறாக.

    ஆனா, பசியின் கொடுமை பத்தி சொல்லியிருக்கீக.

    பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்று
    அவ்வை சொன்ன பாடல் இதோ.

    மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
    தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
    கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
    பசி வந்திடப் பறந்து போம் (நல்வழி பாடல் 26)


    பறந்து போம் என்பதை விட
    மறந்து போம் என்பதே உண்மை

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கூறுவது உண்மை தான் நான் அந்த கருவில் கூறவில்லை நண்பரே நேற்று சென்னையில் நடந்த மழையில் ஒரு முதாட்டி குடை பிடித்து பூ விற்றார்கள் பார்த்து கண்ணீர் கரைந்தது அதை கருவாக வைத்து இக்கவிதை எழுதினே காலங்கள் மாற மாறா சூழ் நிலைகளும் மாறுமே அதே போல் தான் இதுவும்.
      தங்கள் கருத்துக்கும் அவ்வை பாட்டுக்கும் நன்றிகள் பல

      Delete
  3. ஆம் ...

    பசியின் கொடுமை மிகவும் வலிமை வாய்ந்ததே! ;(

    அழகான படைப்பு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நேற்று சென்னையில் நடந்த மழையில் ஒரு முதாட்டி குடை பிடித்து பூ விற்றார்கள் பார்த்து கண்ணீர் கரைந்தது அதை கருவாக வைத்து இக்கவிதை எழுதினே ஐயா பாராட்டுக்கு மிக்க நன்றிகள்

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145