காதல் கேட்டு வாங்குவதில்லை...!


அவள் விட்டுக் கொடுத்தாலும்
நீ வாழ மறுத்தாய்
என்னுடன்

தட்டி கொடுக்கவில்லை
என் இதயம்
தலை மறைவாகிறது
அவமானத்தில்

நீ கேட்டு வாங்க
என் இதயம் ஒரு
கைவினைப் பொருளல்ல

காவியம் படைக்கும்
கற்பனை கோட்டை
ஆம்

என்றோ
உனக்கு புரியும்
அன்றே நான் பூத்திருப்பேன்

என் காதல் மணவாளனுடன்
கை குழந்தையாய்
உனது பெயரில் என்
காதல் பிம்பம் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்