தமிழ் நாட்டின் தலைப்பு
வறுமை
வாழ்த்து
நடிகை நடிகர்
திருக்குறள்
டேட்டிங் காதல்
நீதி நெறி
இரட்டைத் திருமணம்
செய்யுள்
ஏழை பணக்காரர் பாகுபாடு
இலக்கணம்
தாய் தந்தையை மீறிய ஜனனம்
துணைப்பாடம்
போட்டி போட்டு வாழ நினைப்பது
உரைநடை
தினப் போப்பரில்
திருட்டு கொள்ளை கொலை
பொதுப்பாடல்
முதியவர் விடுதி
தனிப்பாடல்
காதல் திருமணம்
கூட்டுப்பாடல்
அலுவலக சில்மிசங்கள்
மனப்பாடம்
நேற்றைய ஆசைகளை
இன்றையக் கனவில் ரசிப்பது
இப்படி புத்தகம் போட்டு
பார்த்தால்...
புறத்தில் நானூறு கொடுமை
அகத்தில் நானூறு வன்முறை
சார்பெழுத்தில்
அயல் நாடு
சமூகவியலில்
உள்நாடு
கணித்துவிட்டனர்
கணித மேதைகள்
கெடுத்துவிட்டனர்
அறிவியல் போதைகள்
இறுதியில்
ஆங்கிலத்தில் சிறைபட்டனர்
காரணம்
பொருளாதார
சிக்கலை சீர் செய்ய
என்று எழுதிய
கவிஞரும் அகப்பட்டனர்
காரணம் தமிழ் ஒரு
தனிமொழியல்ல
செம்மொழி...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...