ஆயுத எழுத்தாய் இருந்த
என்னுயிரில் காதல் எழுத்தாய்
எழுதுகிறேன் உன்னை
நீயும் நானும் சேருகையில்
பன்னிரு அறிவில் நம்விரு
உயிர்கள் கலந்து உயிர்மெய்யாய்
பிறந்த காதலை
கையிருசொந்தங்கள் கட்டிலிடுகையில்
மெய்யொரு உயிராய் பிறக்கும்
குழந்தையை சேர்த்து பதினெட்டாம்
உயிரில் வெற்றி நடை போடுகிறது
உயிர் மெய்யாய் காதலாய்
தமிழ் மொழி பிறப்பில் ...!
அழகான காதல் கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்!
http://thalirssb.blogspot.in
மிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete