சென்ரியுவாய்த் திருக்குறள்-241-246

குறள் 241:
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 
பூரியார் கண்ணும் உள.


பலகோடி செல்வம் 
தெருக்கோடியில் தோற்றது 
அருளற்ற பொருளால்...! 

குறள் 242:
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் 
தேரினும் அஃதே துணை.

நல்நெறி தராசில் 
அருள் முள் 
துணை...!

குறள் 243:
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த 
இன்னா உலகம் புகல்.

அருள் கொண்ட 
உயிரை பார்த்து 
நரகம் பயந்தது 

குறள் 244:
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப 
தன்னுயிர் அஞ்சும் வினை.

தீவினையைக் கண்டு 
கருணை உள்ளம் 
கலங்கியதில்லை 

குறள் 245:
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் 
மல்லன்மா ஞாலங் கரி.

அருளுடையார் காற்று 
அகிலத்தின் 
தேன் ஊற்று...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...