சென்ரியுவாய்த் திருக்குறள்-236-240

குறள் 236:
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று.
ஹிஷாலியின் சென்ரியு 
நேர் வழிப் புகழ் 
ஓர் உயிர் 
பிறப்புக்கு பெருமை 
குறள் 237:
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை 
இகழ்வாரை நோவது எவன். ஹிஷாலியின் சென்ரியு 
புகழ் பட வாழவிட்டாலும் 
இகழ் பட பேசுவோரை 
நோகடிப்பது தவறு 
குறள் 238:
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் 
எச்சம் பெறாஅ விடின். ஹிஷாலியின் சென்ரியு 
எஞ்சிய புகழை
சேர்க்க தவரியவனை   
வையகம் பழித்து பேசும்  
குறள் 239:
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா 
யாக்கை பொறுத்த நிலம். ஹிஷாலியின் சென்ரியு 
புகழற்ற உடல் 
விளையற்ற நிலம் 
மழுங்கிய உலகம் 
குறள் 240:
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய 
வாழ்வாரே வாழா தவர். ஹிஷாலியின் சென்ரியு 
பழியில்லா புகழ் 
விலை மதிப்பில்லா 
வாழ்க்கை

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...