நெல் கதிரு ....!



தங்க வயல் நெல் கதிரு இப்போம் 
தளதளனு சாஞ்சிருக்க 
அங்கும் இங்கும் சிதரும் முன்னே
அறுத்து வந்து களமிறக்கு 

மஞ்ச நாத்து படப்புல உசந்திருக்க 
மளமளன்னு மக்குமுன்னே 
அங்கும் இங்கும் பசித்திருக்கும் நம்ம 
ஆச மாட்டு தொழுவத்துல சிதறிவிடு

மாசம் தான் பத்தாச்சி இப்போம் 
மார்கழியும் பொறந்தாச்சி 
தாய் வீட்டு சீதனமா தங்கமான குட்டிகளோடு
எங்க மாடு ஈண்டுருச்சி 

சீம்பாலும் தாய் பாலும் இப்போம் 
சிறப்புடனே மணமணக்க 
சுற்றமெல்லாம் சேர்ந்து வந்து 
சுற்றிப் போட போறோமே 

எரி வாய்வும் உரமுமே இப்போம் 
எங்க வீட்டிலேயே கிடைச்சிருச்சி
நல்லபடியா விதை விதைச்சி 
நல்ல விளைச்சலுமே பெற்றிடுவோம் 

பணத்தோடு குணமான ஐந்தறிவு ஜீவனுமே
பாசத்தோடு பழகையிலே எங்க 
பஞ்சமெல்லாம் பறந்தோட
தன்னானே தனனன்னே போடு தன்னானே தனனன்னே

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145