பச்ச கொடி...!

ஆந்திரா பெண்ணழகி ஐஸ்வர்யா கண்ணழகி 
ஆவாரம் சிரிப்பாலே அத்தானே மயக்குறேயே


மதுர சொல்லழகி மைனா மூக்கழகி 
மல்லிகை வாசத்தாலே மச்சானே மயக்குறேயே 


சென்னை உடலழகா சீமைத்துர பேச்சலழகா
செல்லச் சிரிப்பாலே உன்ன சுத்த வைக்கிறேயே


கம்பன் தமிழழகா கவிதை வரியழகா 
காதல் பாடத்தாலே என் கண்ண சுத்த வைக்கிறேயே 


அரச்ச முந்திரி பருப்பே  நீ 
ஆடையா போத்திய உடம்பே - அதில் 
கண்திருஷ்டி பொட்டு  போல 
கன்னக் குழி இருக்கையில 
மண்ணக்கூட பொன்னா மாத்தும் 
மச்சக்காரி பாசத்தாலே மோசம்போனேனே 


கீழ்வான சிவப்பாலே நீ 
செஞ்சிவச்ச தோளழகா 
முறுக்கு மீசையாலே என்ன 
மூச்சு வாங்க வச்சதாலே இப்போம்   
நீ ஆசப்பட்டதெல்லாம்   
நம் காதல் பட்ட காயத்தாலே 
பச்ச கொடி காட்டிவிட்டேன் 


  



No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145