தன்முனைக் கவிதைகள் நானிலு - 49

நாவால் சுட்டுவிட்டு
முத்தத்தால் அணைத்தாலும்
மறையவில்லை
வடு

தன்முனைக் கவிதைகள் நானிலு - 48

கரையைக் 
கடந்து விட்டேன்
பாதை மறந்தது
கடல் அலைகள்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 47

சுகப் பிரசவம்
அறுவை சிகிச்சை
செய்யப்பட்டது
அப்பாவின் இதயம்

திரும்பாது ...!

காதல் 
கசக்கி எறிந்த குப்பை மாதிரி 
சாம்பலானாலும்
பழை நிலைக்கு
திரும்பாது

முறையான தண்டனையா ?

நான் பேசிய வார்த்தை 
உன் மனதை 
காயப்படுத்தியது 
என்பதற்காக 
மௌனமாக இருந்து 
என்னை காயப்படுத்துவது 
தான் முறையான தண்டனையா ?

தன்முனைக் கவிதைகள் நானிலு - 46

எனக்காக உயிர் கொடுக்க 
நீ இல்லாவிட்டாலும் 
தனது உயிர் கொடுக்க 
என் வீ ட்டுப் பூக்கள் இருக்கின்றன !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 45

நம் வரைந்த ஓவியத்திற்கு 
உயிர் கொடுத்துச் 
சென்றது 
உயிர்மெய் பொய் ...!

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...