ஜூன் 2017 தமிழ்நெஞ்சம் மாத இதழில் எனது ஹைக்கூ

அரை வட்டம் 
முழுமதிப்பெண் கிடைத்தது 
பரிட்சை பேப்பரில்
தரிசு நிலத்தைப் பார்த்து 
ஓயாமல் கத்துகிறது
கறவை மாடு
துரோகியின் மரணம் 
புண்ணியத்தை தேடிக் கொண்டது 
சவப்பெட்டி 
நடந்து முடிந்த இரவு 
சுத்தம் செய்கிறது 
காலைப் பனித்துளி
தலைமுழுகிய பின்பும் 
துவட்டிவிட்டுச் செல்கிறது  
சில நீர்த்துளிகள் 
அகலப் பாதை 
குறுக்குவழியில் சென்றது 
மேச்சல் ஆடு 
இந்தியாவின் முதுகெலும்பு 
செயலிழந்து கொண்டிருக்கிறது 
ஜந்தர் மந்தர் 
கோடை வெயில் 
குளிர்ச்சியாகவே இருக்கிறது 
கோயில் சிலைகள் 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு செப்டம்பர் - 2019

அதே பத்து விரல் அலங்கோலமாய் சிற்பியின் கைரேகை அதே அத்தி மரம் தொடர்பு எல்லைக்கு அப்பால் சி...