வீட்டுக்கொரு மரம் வளர்ப்பீர் ...!




கி.மூ கி.பி
மரணம் மரங்களாய் 
வரம் பெற்றது 

வானை மறைத்து 
வாழ்க்கை நடத்தும் 
சுவருக்கு கதவாய் 

அடுப்பெரித்து 
அமுதம் சுரக்கும் 
நஞ்சுக்கு விறகாய் 

கல்விக்கண் திறக்கும் 
மண்ணின் மைந்தர்கள் 
அமரும் தவமாய் 

வாணிகம் செழிக்க 
வறுமை ஒழிக்க 
தாலாட்டும் கப்பலாய் 

கண்கள் தெறித்து 
கலைகள் செதுக்கும் 
அழகின் பொருட்களாய் 

பூக்கும் காய்க்கும் 
பூகம்பத்தை தடுக்கும் 
மாற்று மருந்தாய் 

வில்லம்பும் பூட்டி 
விரகல் பேசும் 
வீரத்தின் சிலம்பாட்டமாய் 

தவிலும் நாதமும் 
மணந்த வீணையில் 
இன்னிசைப் புல்லாங்குழாய் 

மலைக்கு கிரீடம் சூட்டி   
மாறும் காற்றுக்கு  
தாகம் தீர்க்கும் மழையாய்  

தூசி முதல் துரும்புவரை 
வலம் வரும் காடுகள் 
வறண்ட நிலமாய் நிற்கிறது 

இறைவன் தந்த கலையை 
இதயமுள்ள மனிதன் அழிக்கலாமா ?
மக்களே மாறுங்கள் 
மரணம் நெருங்குகிறது 

நாமும் அடுத்த ஜனனத்தில் 
மரமாகலாம் 
வேரை அறுக்காதீர் 
வீட்டுக்கொரு மரம் வளர்ப்பீர் ...!


4 comments:

  1. அனைவரும் அறிய வேண்டியது...

    சிறப்பு...

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் அண்ணா

      மிக்க நன்றிகள் !

      Delete
  2. அருமை!
    நாமும் அடுத்த ஜனனத்தில்
    மரமாகலாம்
    வேரை அறுக்காதீர்
    வீட்டுக்கொரு மரம் வளர்ப்பீர் ...!
    சிந்திக்க வைக்கும் வரிகள்.
    வடிவமைப்பும் அழகு!
    -சிரித்திரன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      புது வரவுக்கு என் அன்பு நன்றிகள் தொடர்ந்து தங்கள் கருத்தை தாருங்கள்


      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145