இந்தக் காதல் எது வரை?


சின்னஞ் சிறு இதயத்தில் - நீ
சிரித்து வந்த காதலனே

வண்ண வண்ணக் கனவிலே - நீ
வாழ்ந்து வந்த கணவனே

உன்னை பொத்திவைத்த மனதிலே - நீ
என்னை போர்த்த வந்த மன்னனே

கட்டி வைத்த குடும்பத்தில் - நாம்
காலமெல்லாம் சேர்ந்து வாழவே

அழகு பிள்ளை பெற்றோமே - நாம்
அன்னை தந்தையாக மாறுவோமே

பேரன் பேத்தி கண்டுமே - காதல்
பேரும் புகழும் கிட்டவே

வயது வந்த போதிலும் - நல்
வாழ்க்கை வாழ்ந்து மகிழ்கிறோமே

நூறு வயது தாண்டியும் - நம்
நூறு தலைமுறை செழிக்கவே

காட்சி தந்து கடவுளாய் - உன்
கண்களிலே காண்கிறேன்

ஆசி தந்த மச்சானே - என்னை
ஆளவந்த அத்தானே நல் வாழ்வரசி
போலவே நான் வாழ்ந்து வீழவேண்டும்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...