செவ்வாய் பெண்...!


தாழம் பூ கழுத்திற்கு
தங்கத்தில் பூட்டிவிட்ட
தாலி கொடியில்
மங்களக் கோலமிட்ட
மன்னவன் தோட்டத்தில்
குங்குமக் கோலமாய்
பிறந்த குழந்தை செல்வமே

இந்த செவ்வாய் பெண் !
மாதங்கள் மாலையிட
மங்கையவள் தேகம் கூட
சங்கம் வைத்த நங்கைக்கு
அங்கங்கள் சூடியத் தாவணி
கோட்டையில் மாமன்னவன்
மாலையிட மங்கையர் பாட்டுப் 
பாட மகிழ்ந்து பூக்கிறாள்
மருதாணி வெக்கத்தில்
நிலவுகள் மூடி மறையும்
போது நிஜங்களும் மறைக்கிறது

ஆம் அவள் ஆடிய
ஆட்டமும் ஓடிய ஓட்டமும்
வெள்ளி ஜலங்கையில்
பூட்டிய முத்துக்களைப் போல்
சொல்லிச் சொல்லிக் காட்டியது
வயதிற்கு வந்த நாளை ...!

நினைத்தாள்
பிறந்தது வெள்ளி
பேர்விட்டது சனி
பள்ளிக்குச் சென்றது திங்கள்
பருவம் வந்தது செவ்வாய்
அய்யோ ..?
இப்போது தான்
புதிதாய் பிறந்து விட்டேன்
செவ்வாய் பெண்ணாய்

வாழ்க்கை மேடையில்
வந்து போகும் முக்கிய
நாட்களாய் பிறந்த
வெள்ளி செவ்வாய்
என் வாழ்க்கையில் மட்டும்
ஏன் விளங்காய் மாறியது ...?

ஜாதகம் என்னும்
சங்க தழிழர்களின் அங்கத்தில்
சிங்கம் போல் சீறி
விழையாடுவதால் தானோ ..?

ஆம் மங்கை பெண்களின்
மாங்கல்ய தோசமாய்
யாகம் செய்வதால்
மணமாகாத பெண்கள்
எத்தனை எத்தனை அத்தனை
மனமும் செத்து வாழ்வது
பத்து தலைமுறையும்
பாதித்துவிடுகிறது....

அய்யோ ..? ஏன் இந்த
ஜாதகம் நிறுத்துங்கள்
நிஜங்களை வாழவிடுங்கள்
அப்படியானால் ....!
நானும் வாழ்கிறேன்
என் தலைமுறையை
பெருக்க

சுருக்கமாய் சொன்னால்
பருவம் வந்ததும்
உருவம் மாறலாம்
ஆனால் உணர்வுகள் மாறாது
அப்படி இருக்கையில்

மனம் முடிக்க மட்டும்
ஏன் மரண ஓலையை
நாடுகிறேர்கள்
வேண்டாம் விதவையை கூட
வாழவைக்கும் விந்தை
உலகத்தில்

எங்களைப்போல்
செவ்வாய் பெண்களையும்
வாழவிடுங்கள்
நாங்களும் வாழ்ந்து சாதிக்கிறோம் ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145