தன்முனைக் கவிதைகள் நானிலு - 73

கார சாரமாகச்
சத்தம் கேட்கிறது
கதவைத் திறந்ததும்
மழையின் வாசம் ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 72

மண்ணில் எதை
விதைத்தாலும்
விருட்சமாகும்
மனிதனைத் தவிர !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 71

பெரிய பெரிய
கனவுகளை எல்லாம்
தவிடு பொடியாக்கியது
சிறுதானியம் !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 70

துப்புரவுத் தொழிலாளியை
வரைந்து முடித்தேன்.
குப்பையான மனம் 
தூய்மையானது.

தன்முனைக் கவிதைகள் நானிலு - 69

மயங்கொலி பிழை 
மாதம் ஒரு முறை 
தொட்டிலை நிரப்பி கொள்ளும் 
அனாதை இல்லம் !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 68

கருணைக்
வயது இருந்தால்
கூறுங்கள் கடவுளுக்கு
கற்றுக் கொடுக்க !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 67

சுத்தம் என்பது இனி
நித்தம் இல்லை
அசுத்தத்தில் நிறைகிறது
அரை ஜான் வயிறு ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 66

வீடு நிறைய பொம்மை
ஒன்றுக்கொன்று
பேசிக்கொள்கிறது
யார் அம்மா என்று ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 65

கடன் வாங்கி
கட்டிய கோட்டை
வட்டியும் முதலுமாக
கூடியது நரை முடி !

சிவந்தது கன்னம் !

கொஞ்சம்
கைகள் நீட்டுகிறேன்
தூரத்தில் இருந்தாய்
கொஞ்சும்
இமைகள் மூடுகிறேன்
பக்கத்தில் வந்தாய்
வெக்கத்தில்
சிவந்தது கன்னம் !

கொலுசு அக்டோபர் - 2019

மழை வெறித்த பின்னும்
மரக்கிளையில் இருந்து
விழுகிறது வானம் ...!
பார்வையின் நீளம்
வானம் வரை
பறவை எல்லாம் சிறிதாக ..!
நிலா வரும் நேரத்தில்
கீச் கீச் என்று ...
ஒலி எழுப்பும் பறவை ..!
பூவை தாண்டி
மனம் வீசுகிறது
மஞ்சள் பூசிய முகம் ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 64

என் பசியோடு
உன் ருசி பார்க்கத்
தவம் கிடக்கிறது
மோதிர விரல்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 63

சண்டையிடும் 🐱
பூனைக் குட்டிகள்
மகிழ்ந்து களிகூறும்
மனித குரங்கு 🐵

தன்முனைக் கவிதைகள் நானிலு - 62

ஊஞ்சலில்
அமர்ந்த படியே
ஆராரோ ஆரிரரோ
பாடும் முதிர் கன்னி !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 61

ஒரு முறை கடிந்து விடு
கடவுளைப் போல்
உயிர்த்தெழுந்து விடும்
நம் அலைப்பேசி எண் !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 60

உருக்கமான
சாவியிலிருந்து தான்
உடைபடுகின்றன
பல இறுக்கமான பூட்டின் கதைகள் !

mhishavideo - 145