தன்முனைக் கவிதைகள் நானிலு - 80

உசுரோடு விளையாடும்
காதலை ஒலிம்பிக்கில்
வைத்தால் நானே 
முதலிடம் !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 79

மேகத்தை வரைந்துவிட்டு
அதன் வண்ணத்தைத்
தேடினேன் அவளின்
கூந்தலில் !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 78

நாலு காசு சம்பாதிக்க
நாளுக்கு நாள்
பொய் சொல்லுகிறார்
நல்ல சூனியக்காரி ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 77

காதல் கலவரத்தில்
உடல் கருகி
மணம் வீசுகிறது
சாதி மல்லி ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 76

அடித்து நொறுக்கப்பட்ட
சிலைக்கு உயிர்
கொடுத்தது
தடுத்து நிறுத்திய போராட்டம் ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 75

திருநெல்வேலி
அல்வாவைக்
கட்டிப் போட்டு இழுக்கிறது
சிட்டுக் குருவி லேகியம் !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 74

உன் ஒரே ஒரு
புன்னகையால்
குறைந்தது
உயர் ரத்த அழுத்தம்

உண்மை காதல் ...!

கண்ட இடத்தில்
நெருக்கமாக அமர்ந்து
காலத்தைக் கடத்துவதல்ல காதல்
உருக்கமாக
ஒருவருக்கொருவர்
பிரிந்திருந்தாலும்
உசுராய் இருந்து
உன்னதமாக
கை பிடிப்பது தான்
உண்மை காதல் 

கொலுசு - நவம்பர் '19

பிச்சை பாத்திரத்தில்
பத்தோடு பதினொன்றாக
பூ விற்ற காசு
மடியில் அமர்ந்த பூனை
நொடியில் மலர்ந்தது
தாலாட்டுப் பாடல்
கடைசியாக ஒரு முத்தம்
கை கொடுக்க வில்லை
இறுதி பயணத்தில் தந்தை
முட்டை ஓட்டிலிருந்து
பிரசவிக்கப் போகிறது
ரோஜா மொட்டு

தன்முனைக் கவிதைகள் நானிலு - 73

கார சாரமாகச்
சத்தம் கேட்கிறது
கதவைத் திறந்ததும்
மழையின் வாசம் ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 72

மண்ணில் எதை
விதைத்தாலும்
விருட்சமாகும்
மனிதனைத் தவிர !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 71

பெரிய பெரிய
கனவுகளை எல்லாம்
தவிடு பொடியாக்கியது
சிறுதானியம் !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 70

துப்புரவுத் தொழிலாளியை
வரைந்து முடித்தேன்.
குப்பையான மனம் 
தூய்மையானது.

தன்முனைக் கவிதைகள் நானிலு - 69

மயங்கொலி பிழை 
மாதம் ஒரு முறை 
தொட்டிலை நிரப்பி கொள்ளும் 
அனாதை இல்லம் !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 68

கருணைக்
வயது இருந்தால்
கூறுங்கள் கடவுளுக்கு
கற்றுக் கொடுக்க !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 67

சுத்தம் என்பது இனி
நித்தம் இல்லை
அசுத்தத்தில் நிறைகிறது
அரை ஜான் வயிறு ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 66

வீடு நிறைய பொம்மை
ஒன்றுக்கொன்று
பேசிக்கொள்கிறது
யார் அம்மா என்று ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 65

கடன் வாங்கி
கட்டிய கோட்டை
வட்டியும் முதலுமாக
கூடியது நரை முடி !

சிவந்தது கன்னம் !

கொஞ்சம்
கைகள் நீட்டுகிறேன்
தூரத்தில் இருந்தாய்
கொஞ்சும்
இமைகள் மூடுகிறேன்
பக்கத்தில் வந்தாய்
வெக்கத்தில்
சிவந்தது கன்னம் !

கொலுசு அக்டோபர் - 2019

மழை வெறித்த பின்னும்
மரக்கிளையில் இருந்து
விழுகிறது வானம் ...!
பார்வையின் நீளம்
வானம் வரை
பறவை எல்லாம் சிறிதாக ..!
நிலா வரும் நேரத்தில்
கீச் கீச் என்று ...
ஒலி எழுப்பும் பறவை ..!
பூவை தாண்டி
மனம் வீசுகிறது
மஞ்சள் பூசிய முகம் ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 64

என் பசியோடு
உன் ருசி பார்க்கத்
தவம் கிடக்கிறது
மோதிர விரல்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 63

சண்டையிடும் 🐱
பூனைக் குட்டிகள்
மகிழ்ந்து களிகூறும்
மனித குரங்கு 🐵

தன்முனைக் கவிதைகள் நானிலு - 62

ஊஞ்சலில்
அமர்ந்த படியே
ஆராரோ ஆரிரரோ
பாடும் முதிர் கன்னி !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 61

ஒரு முறை கடிந்து விடு
கடவுளைப் போல்
உயிர்த்தெழுந்து விடும்
நம் அலைப்பேசி எண் !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 60

உருக்கமான
சாவியிலிருந்து தான்
உடைபடுகின்றன
பல இறுக்கமான பூட்டின் கதைகள் !

கொலுசு செப்டம்பர் - 2019

அதே பத்து விரல்
அலங்கோலமாய்
சிற்பியின் கைரேகை
அதே அத்தி மரம்
தொடர்பு எல்லைக்கு அப்பால்
சிட்டுக்குருவிகள்
ஓயாத அலையில்
ஒளிந்து விளையாடும்
ஒத்த செருப்பு

சாதி !

ஒரு தேநீர் குவளைக்குள்
எத்தனை சாதி
ஒளிந்திருக்கிறது என்று
யாராலும் கூறமுடியுமா ?
அது போலத் தான் வாழ்க்கை

வறட்டு பிடிவாதத்திற்கும்
வக்கிர புத்திக்கும் இடம் கொடுக்கும்
சாதி வெறியைத் தணிக்கத்
தமிழனால் மட்டுமே முடியும் என்பதை
ஒவ்வொரு மனிதனும் மறந்துவிடாதே !

மறுமலர்ச்சி செய் மதம் இனம் மொழி கடந்த
அகிம்சை வழி நடந்து அன்பை விதை
நாடும் போற்றும் நலமும் செழிக்கும் !



வாழ்க தமிழ் வளர்க்க தமிழன் !

கொலுசு - ஹைக்கூ Aug - 2019


மழை ஓய்ந்த சப்தம் 
வாசற் கதவைத் திறக்கையில் 
வானில் ரங்கோலி
கரையில் பூ
வழி நெடுகிலும்
உதிர்ந்து திரும்பும் காற்று

பச்சோந்தியாக மாற !

நீ 
அழகாகச் சிரிக்கிறாய் 
எனக்குத் தான் 
மனம் வரவில்லை 
பச்சோந்தியாக மாற !

வேடிக்கை ...!

முதல் முறையாக
அம்மாவின்
இடுப்பில் அமர்ந்து
வேடிக்கை பார்த்த
நிலா ....

இறுதியாகச் சாலையில்
இறந்து கிடக்கும் போது
என்னை வேடிக்கை
பார்த்தது அதே நிலா !

சாதி !

ஒண்ணா சோறு தின்று உதட்டையும் பரிமாறிக்கொண்டாய் கண்ணா பின்னாவென்று காசையும் செலவு செய்துவிட்டாய் எல்லாம் ஒன்றென்று ஈருடல் ஓருயிர் கலந்துவிட்டாய் இதற்குப் பின் என்ன இருக்கிறது என இதயம் கேட்டதற்குச் என் சாதி வேறு உன் சாதி வேறு பின் எப்படி 
எனக்கு பொஞ்சாதியவாய் என்று !

கொலுசு - ஜூலை - 2019

நீர் வளையத்தில்
மிதந்து வரும் விளக்கில்
கடவுள் தரிசனம்
மனக் கதவின் வழியாக 
தினமும் போய் வருகிறேன் 
நான் படித்த வகுப்பறைக்குள்
ரகசிய முத்தம்
அசிங்கமாய் புல் வெளி மேல் 
நுரை ததும் பனித்துளி

கொலுசு - ஜூன் 2019

பழைய புல்லாங்குழல்
இன்னும் சில கூடுதலான 
ஓட்டைகள்
ஆசை ஆசையாய்
தொட்டு பார்த்தேன்
ஆசை துறந்த புத்தரை
ஊர் திரும்பும் வியாபாரி
சுருக்குப் பை நிறைய
பட்டணத்துப் பலகாரம்

பாவத்தின் சம்பளம் மரணமென்று !

விட்டுக் கொடுத்து
விட்டுக் கொடுத்து
வீதியில் நிற்கிறேன்
சிலர் விதியென்றார்கள்
சிலர் மதியென்றார்கள்
நானோ விதி மதி கலந்த
சதியென்றேன்
சிரித்தார்கள்
சிந்தித்து கொண்டே
சிலையாக நின்றேன்
கண் கடலானது
கால் மறுத்துப் போனது
இதயம் இடைவெளி விட்டு விட்டு 
லேசாக நிற்கத் தொடங்கியது
இனி இருக்க மாட்டோம் 
என நினைக்கையில்
நினைவுக்கு வந்தது
பாவத்தின் சம்பளம் மரணமென்று !

கவிச்சூரியன் இதழ் மே -19

சுதந்திரப் பூமி
அகதிகளாக திரியும் 
வண்ணத்துப்பூச்சிகள்

குருவியின் அலகு வரைகையில் 
பென்சில் முனையில்
கீச்கீச் சத்தம்

மரம் வெட்டும் போது
வியர்வையில் துளிர்க்கிறது
மனிதனின் பிம்பம்

கல்லறைத் தோட்டம் 
புதிதாகப் பூக்கும் 
மெழுகுவர்த்தி பூ

எப்படி குடை பிடித்தாலும்
மௌனமாய் உடைகிறது 
நீர்க் குமிழிகள்

முன் ஜென்ம பகையோ
பறவையின் அலகில்
தவளையின் சத்தம்

என்றோ வந்து போன மழை
பரண் மேல்
துருப்பிடித்த குடைக் கம்பி

பண முதலை ...!

காட்டு விலங்கை
வீட்டு விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

வீட்டு விலங்கை
தெரு விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

தெரு விலங்கை
ரோட்டு விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

ரோட்டு விலங்கை
நகர விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

நகர விலங்கை
ஊர் விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

ஊர் விலங்கை
மாவட்ட விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

மாவட்ட விலங்கை
நாட்டு விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

நாட்டு விலங்கை
மாநில விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

மாநில விலங்கை
மத்திய விலங்கு
அடிச்சிச் சாப்பிட்டது

இறுதியில்
மத்திய விலங்கை
பண முதலை விழுங்கியாது

கொலுசு - மே 2019

பனியுறைந்த மரக்கிளைகளில்
சிக்கியிருக்கிறது
சிவப்பு நிற பலூன்

என் காதல் ...!

என் காதல்
சாதியால் பிரிந்த போது
சகித்துக்கொண்டேன்
அதே சாதி
சாக்கடையைப் போல் இன்று
நாறுவதால்
நான் பிழைத்துக்கொண்டேன் ...!

இனியாவது ஒரு விதி செய்வோம் ...!

பதவியைப் பிடிக்க
ஜெகத்தினை அழிக்கும்
ஈனப்பிரவிகளே
இலங்கையில் இருப்பவரும்
மனிதனென மறந்த 
மானங்கெட்ட மசுருகளே 
அடக்கு முறை ஆட்சியில்
அடமானம் வைத்த 
பிணம் தின்னி கழுகுகளே
இயேசு 
உயிர்த்தெழு முன் ஈழம் 
உயிர்ப்பரித்த ஓனாய்களே 
இனப்படுகொலைக்காக
ஈழ இரத்தம் குடிக்கும்
அசிங்கங்களே
நாமும் ஒரு நாள்
மனமதில் புழுகி 
மண் தனில் அழுகி 
மரணிப்போம் என்பதை மறந்து 
குறுக்குவழியில் காய் நகர்த்தும் 
குள்ள நரிகளே 
இனியாவது ஒரு விதி செய்வோம்
இயற்கைக்கு மாறாக 
இனி ஒரு மரணம் இல்லையென்று !

மரபணு மாற்றமில்லை ...!

புத்தனின் சிரசை 
பிடிங்கி கடவுளின் 
உடலில் ஒட்டவைத்தேன்
எந்த ஒரு 
மரபணு மாற்றமும்
நிகழ்த்தப்படவில்லை 

பகல் கனவு ...!

ஓட்டை போட்டு விட்டு வீட்டிற்கு வந்ததும்
அம்மா சமயல் வேலைக்கு புரப்பட்டார்
அக்கா வயதான பாட்டியை பார்க்கும் வேலைக்கு புரப்பட்டார்
அண்ணான் கட்சி காரர்களுடன் புரப்பட்டார்
அப்பாவிற்கு வந்த ஒட்டைப் பார்த்து கண்ணீர் மல்க
ஜெயலலிதா அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் 
மது கடையை மூடியிருப்பார் 
அப்பாவும் உயிருடன் ஒட்டுப் போட்டிருப்பார் 
என பகல் கனவு கண்டால் தங்கை !

வஞ்சித்துக் கொள்கிறாய் ...!

எந்த தீபத்தில் தெரிகிறது
வெற்றியின் சுடரொளி 
எந்த சூடத்தில் மிளிர்கிறது
திருஷ்டியின் வெகுமதி 
எந்த பாலபிசேகத்தில் மறைகிறது
பாவத்தின் சிறுதுளி
எந்த பணத்தில் நிறைகிறது
மரணத்தின் உயிர்வலி
பின் 
எதற்காக கல்லை கடவுளென்றும்
கருவறையை கல்லென்றும் 
வஞ்சித்துக் கொள்கிறாய் ...!

ஓட்டு கேட்ட ஆட்டு மந்தைகள் ...!

சாக்கடை பாயிந்த 
சந்தனமரத்தில்
சகல விதமான 
பறவைகளின் ரிங்காரம்
இடையே ...
சமத்துவக் காற்று
சாதியற்ற கிளைகள்
குள்ள நரிப் பூக்கள்
கொலைகாரக் கனிகள்
பட்டு திருந்திய கட்டுமரம்
பாடாய் பாடுபடுத்தும் படர் தாமரை குளம்
எனவெல்லாம் பொய் கூறும்
ஆட்டு மந்தைகள்
ஆங்காங்கே ஓட்டு
கேட்டு வருவதைக்கண்டு 
சந்தனமரம் சிரிப்பாய் சிரித்ததாம்
முட்டால் மனிதனே
என்னில் இருப்பது
அகிம்சையின் சுவாசம்
அதை அரிந்தும்
தலையசைக்கிற நீ
எப்படி நாளைய 
தலைவனை தேர்ந்தெடுப்பாய்
பணம் பத்தும் செய்யும் 
என்பதை மறந்து
அந்த ஒரு கணம்
பைத்தியமாகிவிடாமல்
நின்று நிதானமாக 
தேர்வு செய் 
உனக்கோ எனக்கோ
ஒர்
உன்மை ஜெயிக்கலாம் !

பெண்ணினமே இல்லாமல் போகலம் ...!


காமம்
இங்கே கடலைப் போல்
விரிந்து கிடக்கிறது

கட்டி வைத்து உதைப்பதற்கும்
விட்டுக் கொடுத்து பிழைப்பதற்கும்
பட்டுவாட நடத்துகிறது அரசு

கைவசம் எல்லாம் இருந்தும்
வலை வீசி தேட தேவையில்லை
எல்லை தாண்டினால் சுட்டு வீழ்த்தும்
ராணுவத்தை போல்
சுட்டுத்தள்ள ஏன் இன்னும் தயக்கம்

இனி பொம்மையில் கூட
பெண்ணினன் இல்லாமல் போகலம்
பொறுத்திருக்காதே பொங்கி எழு
சுனாமியைப் போல்

அன்று பிறக்கும்
ஆனினமே ஒன்றிருந்தால் அது
அன்பான, பண்பான ஒழுக்கமான
இனமென்று !

(வார மலர் ஏப்ரல் 7, 2019)

வார விடுமுறை ...!

வார விடுமுறை
வழக்கத்திற்கு மாறாக
குரைக்கும் நாய்
பதட்டத்துடன் எட்டிப் பார்க்கிறாள்
குடி போதையில் புலம்பும் 
எதிர் வீட்டுக்காரர்
சற்று தெளிந்த முகத்துடன்
திரும்புகையில்
விதவை கோலத்தில் தாய் !

புத்தகங்கள் !

என் 
அலைபேசி உரையாடலை
ஒட்டுக் கேட்டதால் 
விலைக்கு போடப்பட்டது
அந்த அறையில் 
அடிக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள் 

சாதி ...!

சாதி பார்த்து சுமப்பதில்லை பூமி 
மதம் பார்த்து மூடுவதில்லை மண் 
இனம் பார்த்து வீசுவதில்லை காற்று
மொழி பார்த்து பேசுவதில்லை மழை
நிறம் பார்த்து எரிப்பதில்லை சூரியன்
மனிதா 
நீ 
மட்டும் ஏன்
இத்தனையும் பார்க்க பழகிக்கொண்டாய் !  

(பெண்கள் மலர் எப்ரல் 13, 2019 - தினமலர் இணைப்பு)

அழகிய காடே

அழகிய காடே
அகமும் புறமுமாய் 
அசையும் கிளையே
பூத்து குலுங்கும் மலரே
புத்துணர்சி தரும் அருவியே
கிளிகள் பாட மயில்கள் ஆட
வேட்டையாடும் விலங்குகளுக்கு
வெளிச்சம் கொடுக்கும் சூரியனே
பழமோ காயோ 
பசித்துண்ணும்
பகலை படமெடுக்கும் 
நீர் வீழ்ச்சியே
குரல் வளையை 
அறுக்க கிறுகிறுக்கும் 
மூங்கில் காடே
முந்தான முகிலில் 
முகம் பார்க்கும் 
வானவில்லே
வரப்புக்குள்ளே 
வாய் சவடால் 
அடிக்கும் நாரையே
நடந்து ஓடும் 
விட்டில் பூச்சியின் 
விருந்தினமே
வளைந்து நெழிந்து
வான் நோக்கா
பாம்பினமே
இலைகள் சலசலப்பில்
இயற்கையாய் நீந்தும்
மீனவளே
தூரத்து ரயிலோசையில்
சடசடவென இறகு விரிக்கும்
பச்சிகளே
வில்லும் அம்பும் 
தைக்காத ஈரத்தில்
காதல் சுவடுகள் பதித்த 
மரம் கொத்தியே
ஆகா இவ்வளவு 
அழகான உன்னை 
இன்டர்னெட் உலகத்தில் 
கண்டு கழித்த யெனக்கு
இதயம் மட்டு எப்படி 
இயற்கையானது !

mhishavideo - 145