ஜெயித்திடு மனமே !

கடவுளின் சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கும் விதியைக்
கண்டு அஞ்சாதே

நீ தரிக்கும் போதே
உனக்கான மரண ஓலை
எழுதப்பட்டுவிட்டது
அதை தீயில் பொசுக்கிவிட்டுப்
புதிய ஓலை எழுத புறப்படு

உன்னில் துயில்கொள்ளும் 
கிரகணங்களை கண்டு
அடங்கிவிடாதே அதையே
ஆட்டிவைக்க பொறந்தவன் நீ
முடிந்தால் உன் கரையில்
கலங்கரை விளக்காக நில்

அத்தனை துன்பங்களையும்
அடைத்து வைக்க முடியாத
பானை உண்டென்று சொன்னால்
அது உன் இதயம் தான்
வெடித்து சிதறும் வரை
விரட்டிக்கொண்டே இரு

சந்தோசத்தை தவிர
எல்லா தோஷமும் உன்னை
முடக்கிப் போட்டாலும்
முட்டிக்கொண்டு உயிர்த்தெழு
பீனிக்ஸ் பறவையாக

வெற்றிக்கு பின்னால்
வரும் தோல்விகளுக்கு
உயிரை ஊற வைத்த பின்
எதற்கு பயம் துணிந்து போராடு
விடியலை தேடும் நிலவாக 

நேற்றும் உண்டு
நாளையும் உண்டு
இன்று மட்டும் மாற்றமில்லை
மாறவேண்டும்
தொலைத்தது கிடைத்திடாமல்
நினைத்தது நடந்திடாமல்
இலக்குகள் முடிவதில்லை
ஜெயித்திடு மனமே !

நம் புதிய தலைமுறை !

பச்சை பசேர் புல்வெளியில் படுத்துறங்கும் நெல் மணிகள் 
பறந்து விரிந்த வானில் பக்குவமாய் இரை தேடும் பறவைகள் 
ஓட்டு மொத்த விடியலையும் தன்வசமாக்கிக்கொண்ட கிழக்கு 
தடம் புரளாமல் கடகடவென ஓடும் ரயில் வண்டி 
காற்றோடு பேசும் கல் நொங்கு 
அறக்கப் பறக்க ஆவி பொங்கும் பனிமூட்டம் 
பதட்டத்துடனே கால்வைக்கும் தவளைகள் 
குருவியும் கிளியும் கொஞ்சி பேசும் காதல் லீலை 
அடி வேர் வரை அசைக்க துடிக்கும் மூங்கிலசத்தம் 
நாணத்தில் தலை குனியும் சூரியகாந்தி 
மனமே மருந்தாகப் பூக்கும் மலர் கொத்து 
மன்னிக்க முடியாத பட்டாம்பூச்சியின் பசி 
கோரைபுல் நுனியில் குடும்பம் நடத்தும் நீர்க்குமிழி 
நினைவை மட்டுமே பரிசாக கேட்கும் ஈரநிலா 
நட்சத்திரங்களை தேடும் மண் குதிரையின் அழுகை 
பால் சுரந்த மடுவில் தமிழ் பேசும் கன்றுக்குட்டி 
நீந்த மனமில்லாமல் ஏங்கி தவிக்கும் சலவைக்கல் 
வெயில் வரைந்த நிழல் ஓவியம் 
அங்கங்கே முட்டையிடும் வான்கோழி 
ஆக ஓகோ வென ஆடமறந்த காவல் பொம்மை 
பாண்டி விளையாடும் பள்ளி மான்கள் 
படிக்காத தாய் தந்தையின் ஆதார கையெப்பம் 
ஒடிந்த கிளையில் ஊஞ்சல் ஆடும் குருவிக்கு கூடு 
வளர்த்த மண்ணிற்கு வாழ்த்து சொல்லும் செந்தூரப்பூ 
அள்ளி முடிந்த கூந்தலில் துள்ளி திரியும் பட்டன் ரோஜா 
உதட்டிற்கு சாயம் பூசும் நாவல்பழம் 
அய்யனார் துணையிருக்க மொட்டவிழ்க்கும் தாமரை 
கால் சட்டையில் நிரம்பி வழியும் புளியம் பழம் 
ஆனா ஊனா கற்றுக் கொடுத்த கூழாங்கற்கள் 
அலையா விருந்தாளியாக படுக்கையில் காத்திருக்கும் மூட்டை பூச்சி 
ஏசி காற்றில் ஊசி குத்தும் மலைச்சாரல் 
தோலாடையே மேலாடையாக துயிலுரிக்கும் மண் கலப்பை 
இயற்கை கனிகளுடன் இளைப்பாறும் அணிகள் 
அத்தனையும் இழந்து பட்டணத்தில் பட்டன் தட்டிக்கொண்டிருக்கிறது 
நம் புதிய தலைமுறை !

வாழாவெட்டனாக !

மொட்டை வெயில் 
பட்டிக்காட்டில் 
அண்ணார்ந்து பார்த்த 
வானவூர்தியில் இன்று நான் 
அரைக்கால் டவுசர் 
முழுக்கால் பேண்ட் 
வெட்டி பந்தா 
எல்லாம் சேர்த்து 
முழுக்குப்போட்டது என்  
பள்ளிப் படிப்பை 
அரைகுறை படிப்போடு 
அயல் நாட்டைத் 
தேடிச் சென்றேன் 
முதலில் பவுசாகத்தான் இருந்தது 
பின்பு தான் புரிந்தது 
நம் சொந்தங்கள் எல்லாம் 
இந்த ஆண்ட்ராய்டு 
போனுக்குள் அடங்கியது தான்  
சொகுசு என நினைத்து 
வாழத் தொடங்கினேன் 
முதலில் இனித்தது 
பிறகு போகப்போக 
கசந்தது 
அழுதேன் 
அணைத்துக்கொள்ள 
அன்னை இல்லை 
புலம்பினே 
புத்தி சொல்ல 
தங்கை இல்லை 
சரி எல்லாம் விதி என்றேன் 
விட்டுக்கொடுக்க 
நண்பன் இல்லை 
விரட்டியடித்த தந்தையை எண்ணினேன் 
ஐயோ படித்திருந்தால் 
பட்டிக்காட்டிலே 
சொர்க்கம் போல் வாழ்ந்திருக்கலாமே 
என்ற எண்ணம் வந்துவந்து போக 
வயது முப்பதை தாண்டியது
காதல் சோகம் 
கண்ணை கிழிக்க 
வயது சோகம் 
பெண்னைக் கழிக்க
வாழ்ந்தும் வாழமலும் 
வாழ்கின்றேன்
வாழாவெட்டனாக !

உயிர்த்திசை !

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான்
விடியலை தந்தவள் நீயல்லவோ
படைத்தவன் துணையில் எனை வளர்க்க
பத்துப்பாத்திரம் துலக்கி கரை சேர்த்தாயே

உடுத்தும் ஆடை அழகினிலே உன்
உதிரத்தை மறைத்து வைத்தாயே நான்
படுத்தும் பாட்டை பொருத்தருளி உன்
பாதி தூக்கத்தில் அழுது துடித்தாயே

ஊரார் என்னை கடிந்துகொண்டால் உன்
உயிர்த்திசை நோக துடித்தாயே இவ்
உலகத்தில் நானும் வளம் வரவே உன்
உயிர் மூச்சை பரிசாய் கொடுத்தாயே

எதை நான் கொடுத்து மீட்டிடுவேன் உன்
எல்லையில்லா தியாகத்தை அதை
எண்ணி நானும் உயிர் பிழைத்திருக்க உன்
ஜெனனம் கொடுத்து மகிழ்விப்பாயா

பாலும் தேனும் கலந்தூட்டி என்
பாவக்கணக்கை முடித்துக்கொள்ள
பாவி நானும் துடிக்கிறேன் உன்
பார்வை இன்றி தவிக்கிறேன் தாயே !

ஒரு நிலா!

உயிர்கள் 
விளையாடும் காட்டில்
ஒரு பொம்மை 
பூவாய் பூத்திருக்கிறேன்
பரித்துக் கொள்ள 
விரல்கள் வருவதற்குள்
விதி விளையாடிவிட்டது 
விதவை கோலத்தில் 
ஒரு நிலா!

கணக்கு பார்க்கிறேன் !

கடவுளை வஞ்சித்துவிட்டு
கணக்கு பார்க்கிறேன்
கருமாதி செலவை !

சில தந்தையின் உயிர்கள் !

சிரித்த நாட்களை விட
சிந்தித்த நாட்கள் தான் அதிகம்
இந்த மது கடைகள் எப்போது
நிரந்தரமாக முடக்கப்படும் என்று
அதற்குள் முடங்கிவிட்டது
சில தந்தையின் உயிர்கள் !

எதிரிகளாகிவிட்டோம் !

இறப்பின் ருசியை அறியாதவரை
நானும் கடவுளும் செல்லப்பிள்ளைகள் தான்
அறிந்தப் பின் எதிரிகளாகிவிட்டோம் 😢😢😢😢😢😢

கவிச்சூரியன் அக்டோபர் -- 2018

வார்த்தைகளை
குறைத்துக் கொண்டேன்
நீள்கிறது மௌனம்!

ஆழ்ந்த உறக்கம்
எனது கனவை உணர்கிறேன்
அன்பு நிறைந்த வண்ணங்களாய்

குளிர்காலக் காலை
டீசல் பிரதிபலிக்கிறது
வானவில் நிறத்தில்!

இரவு நெருங்க நெருங்க
முத்தமிடக் காத்திருக்கிறது
பனித்துளிகள்

சாலையோரம்
குறுக்கு நெடுக்குமாக
கர்ப்பிணி ஆடு

கொலுசு அக்டோபர் - 2018

நீண்ட இரவு
குறுகிய வட்டத்திற்குள்
ஏழையின் கனவு
பனி மூட்டம்
மெல்ல கலைகிறது
வானத்து ஒவியம்.
கல்லறைத் தோட்டம் 
இறந்து கிடக்கிறது 
நேற்று பறித்த பூ

வீடற்ற வாழ்வு!

Image result for வீடற்ற வாழ்வு!

வானமே கதவுகளாக
வாழ்க்கையே கோயிலாக 
வாழ்ந்து கழிக்கிறோம் 
சாலையோரத்தில் !
நிலா வெளிச்சத்தில்
நீர் கோர்த்த மண் சுவற்றை 
தாங்கி பிடிகும் 
தார்பாய் வேயப்பட்ட 
கூரை வீடுகளே எங்கள் சாபம்
பிளாஸ்டிக் குப்பைக்குள்
குடும்பம் நடத்தும் 
கொசுக்கள் மத்தியில் 
குழ்ந்தைகளாக மாறுவதே எங்கள் சோகம் 
சுள்ளென்று அடித்த வெயில் 
வெந்து புழுங்கும்
பச்சிழம் குழந்தையின்
கண்ணீர் கடலைக் கடக்க
போராடுவதே எங்கள் வேட்க்கை
பறந்து விரிந்த ஊரில்
திறந்தவெளி கழிவறைக்குள்
திடிரென சத்தமிடும் ரயில் வண்டியில் 
தடம் புரண்ட உயிரை 
தலைமறைவாக புதைத்த கதைக்கு 
முடிவுரை எழுதுவதே எங்கள் நோக்கம்

காந்தி மகா காந்தி ...!

காந்தி மகா காந்தி காந்தி மகா காந்தி
ஊழல் மிகுந்த நாட்டினிலே
ஊமையாய் சிரிக்கிறார் காந்தி -நாளைய
உலகமே பாடம் சொல்ல
அகிம்சையில் திருத்துவார் காந்தி

திராவிடம் பேசும் நாட்டினிலே
தியாகியாய் வாழ்ந்தவர் காந்தி -இன்று
யோகியைப் போல் மாலைசூடும்
மக்களுக்கோர் சரித்திரமாக இருப்பவர் காந்தி

அறவழி கண்ட நாட்டினிலே
ஆடை பாதியாய் அலைந்தவர் காந்தி - நாளைய
ஆயுதமேந்திய புரட்சியினர் முன்
பொல்லூன்றிய புரட்சியர் அண்ணல் காந்தி

மது வேண்டுமென்ற நாட்டினிலே
மாதுவை மதி என்றவர் காந்தி - இன்றும்
மீளாத விவசாயின் தற்கொலையில்
விடியலைத் தேடும் உத்தமர் காந்தி

மதயானையாய் தலைவிரித்தாடும் நாட்டினிலே
மதக்கலவரத்தை அறவே ஒழித்தவர் காந்தி - மனிதம்
கத்தியெடுக்கும் வன்முறைக் கலாச்சாரத்தால்
காகிதமாய் கசங்கிபுழங்குகிறார் காந்தி

சுதந்திரம் வாங்கிய நாட்டினிலே
வறுமையைகண்டு மெலிந்தவராம் காந்தி - இன்று
புனிதத்தைக் கூட போலியென புறம் தள்ளும்
போராளியின் முன் வாய்மையை வென்றவர் காந்தி

கவிச் சூரியன் - செப்டம்பர் - 2018

பெரிய மலை
மோதி எதிரொலிக்கும்
மாட்டுவண்டி சப்த்தம்

மலை உச்சியை
உரசிக் கொண்டிருந்தன
மேகத் கூட்டங்கள்

காற்றடித்ததும்
மூழ்கியது
கப்பற்கரான் வாழ்வு

காலிப் பானை
நிரம்பி வழியுது
ஏழையின் பசி

ஒடும் மேகம்
மெல்ல பதுங்கும்
மலர்க் கொடி

முத்தமிழே !

Image may contain: 1 person, sunglasses and closeup

முத்தமிழே 
உன் எழுது கோல்
இறக்கமின்றி கிடக்கிறது
எழுந்து வா

காவேரியும் 
கடலில் கலந்து விட்டது
கல்லணையும் 
நிறம்பி வழிந்து விட்டது
கடவுளின் 
இதயம் மட்டும் இறங்கவில்லையோ
எழுந்து வா தலைவா

தமிழரின் உரிமைக்கு
குரல் கொடுத்த தமிழே 
இன்று
தலைசாய்ந்து கிடப்பதைக் கண்டு 
கண்ணீர் சிந்துகிறதோ
காவேரியின் முன்

இதுவரை கரை சேர்த்த 
கட்டுமரம் களங்கரை விளக்காக 
ஒளி வீச எழுந்து வா

உனக்கும் ஓர் இடம் உண்டு 
அங்கே உலகம் பேசும் 
வரலாறு உண்டெனத் தனித்துவம் 
படைத்தத் தமிழே இன்று 
தமிழகமே உன் இறப்பை 
நோக்கி தவிக்கிறது இங்கு

கதறி அழுக்கும் இதயத்தின் 
ஒரம் கொஞ்சம் கருணை இருந்தால்
விடை கொடுக்கும் முன்
விழித்தெழு என் வெண் மேகமே
விடியலை கொஞ்சம் நிறுத்திவிடு 

அலை கடலென திரண்டு ஓடும்
மனிதர்கள் முன் உன்
ஆன்மாவை எவ்வாறு அறிவது
என்று புலம்புகிறோம் 

விழித்திடு தமிழே ! விழித்திடு தமிழே !
விழித்திடு தமிழே ! விழித்திடு தமிழே !

ஆக்கம் - ஹைக்கூ மின்னிதழ் - சூலை - 2018

இலையின் அரங்கேற்றம்
தழைகீழாக
புழுவின் நடனம்

கோயில் திருவிழா
ஊதி ஊதியே பெருத்தது
பொங்கல்பானை

யாரோ ஒருவரின் வேண்டுதல்
நிறைவேறிய மகிழ்வில்
ஆலையமணி

பிரகாசமாய் எரியும் மெழுகுவர்த்தி
ஊதி அணைத்தபடி
பிறந்த நாள் கொண்டாட்டம்

வாசலில் பிச்சைக்காரி
தாண்டிச் செல்கிறார்கள்
சாமிக்கு பட்டுச்சாத்த

தன்முனைக் கவிதைகள் நானிலு - 59

நீ கொடுத்த 
முத்தத்தையெல்லாம்
உமிழ்ந்து தள்ளுகிறது
என் கண்ணீர் துளிகள்  

கவிச்சூரியன் மாத மின்னிதழ் - சூலை 2018

குழி விழுந்த கன்னம்
வந்து குவிகிறது
முத்த மழை
பச்சிக்காத கடவுள் முன்
பல வகையான
நெய்வேத்தியம்
கிறுக்கிய வானம்
அறுந்து விழும் சின்ன சின்ன
மழைத்துளிகள்
பால் இரண்டெனப்
பயிலும் திருநங்கை அழுகிறாள்
கழிவறையின் முன்
அடுத்த தலைமுறை
மண்ணை வாரிப் போடுகிறார்
மணல் வியாபாரி

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா 
அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்தேன் எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் என்று அழுது புலம்பினாள் பாபாவோ பதில் பேசவில்லை நேராக திரும்பி தன் வீட்டிற்கு வந்தாள் சிவன்யா சிறுது நேரம் கழித்து தான் பணம் கொடுத்து உதவி செய்த வீட்டிற்கு சென்று பணத்தை திரும்ப தருமாறு கேட்டாள் 
அதற்கு அவர்கள் பணம் கிடைக்கும் போது தான் தரமுடியும் சும்மா சும்மா வந்து கேட்காதே வீட்டை விற்ற பிறகு நாங்களே பணத்தை திருப்பி தருகிறோம் என்று மரியாதை குறைவாக பேசினார்கள்  
சிவன்யாவும் விடவில்லை நான் அப்போது பணம் கொடுக்கவில்லை என்றால் உங்கள் மகள் திருமணம் நடந்திருக்காது இப்போது அவளும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்டாள் வருடமும் நான்கை தொட்டு விட்டது இனியும் காலம் கடத்தினால் நன்றாக இருக்காது ஆகவே எனக்கு பணம் வேண்டும் என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றதும் 
அக்குடும்பத்தின் உன்னால் என்ன செய்ய முடியுமோ பண்ணிக்கோ என்று சொன்னதும் 
சிவன்யா சாபத்துடன் கடவுளை வஞ்சித்துவிட்டு வீடு திரும்புகையில் 
அக்குடும்பத்தினரின் மகன் சிவன்யா உங்கள் கஷ்டம் புரிகிறது என் அம்மா பேசியது தவறு தான் என்ன செய்வது நாங்களும் இந்த வீட்டை விற்க முயற்சி செய்கிறோம் நடக்கவில்லை இதோ இந்த அண்ணாவிடம் தான் பேசியுள்ளோம் அவர்கள் உங்களிடம் பேசுவதாக சொன்னார் இப்போது அவர் லையனில் தான் இருக்குக்கிறார் பேசுங்கள் என்றான் 
சிவன்யாவும் ஹலோ அண்ணா சொல்லுங்கள் என்றாள்  
மேடம் இந்த வீட்டை விற்க நீங்களே ஒரு நல்ல ஆளு இருந்தால் கூறுங்கள் விரைவில் பேசிமுடிப்போம் உங்கள் பணமும் கிடைத்துவிடும் இவர்கள் கடனும் அடைந்துவிடும் என்றார் 
சரி என கூறிவிட்டு கிளம்பிவிட்டாள் சிவன்யா 
வீட்டிற்கு வந்ததும் அங்கே ஒருவயதானவர் வந்து மகளே தயங்காதே உன் பணம் உன்னை தேடிவரும் கலங்காதே நாளை இந்த வீட்டுக்கே நீ சொந்தக்காரியாகலாம் இல்லை இதைக்கொண்டே பலமடங்கு லாபம் சம்பாதிக்கலாம் வருத்தம் வேண்டாம் என்று கூறிவிட்டு தட்சணை ஏதும் வாங்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார் 
ஒரு வேலை இது பாபாவின் அருள் வாக்கோ இருந்தாலும் இருக்கலாம் இனிமேல் நாம் கவலைப்பட வேண்டாமென்று மனதை தேற்றிக்கொண்டாள் 
திடீரென்று சிவன்யாவுக்கு  ஒரு யோசனை வந்தது ஏன் அவர் கூறியது போல் நாமே இந்த வீட்டை விலைக்கு  வாங்கிவிட்டால் என்ன என்று யோசித்தாள்  
அன்று சிவன்யாவிடம் பேசிய தரகரை அழைத்தால் இந்த வீட்டின் விலை என்ன என்று கேட்டாள் அவர்கள் 45 லட்சம் என்று சொன்னதும் சிவன்யா இவ்வளவு விலைக்கு இந்த வீடு போகாது கரணம் பொது சொத்து இன்னும் தனித்தனியாக பிரிக்கவில்லை அதுவும் போக இரண்டு பக்கமும் பொது சுவர் வண்டிகள் நிறுத்த இடம் இல்லை ஆக இந்த வீட்டை 35 லட்சத்திற்கு கேட்கிறார்கள் தர சம்மதமா என்றதும் 
அவர்கள் நாங்கள் கலந்து பேசிவிட்டு சொல்கிறோம் என்றனர் 
சரி என்று வந்துவிட்டாள் சிவன்யா 
இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் சம்மதம் சொன்னார்கள் காரணம் கடன் தொகை பெருகிவிட்டது எல்லாரிடமும் இந்த வீட்டையே காரணம் காட்டி அதிக கடன் வாங்கிவிட்டதால் கிடைத்த தொகைக்கு விற்று பணத்தை வாங்கிக்கொண்டு எங்காவது ஓடிவிடலாம் என்ற எண்ணம் அவர்கள் மனதில் இது சிவன்யாவுக்கு புரிந்தது உடனே சிவன்யா இந்த வீட்டிற்கு லீசு தொகை 10 லட்சம் போக மீதம் 25 லட்சம் அதில் டாகுமெண்ட் செலவு 2 லட்சம் போக மீதம் தரவேண்டியது 23 லட்சம் சம்மதமா இந்த 23 லட்சத்தை மூன்று மாத தவணைக்குள் உங்களுக்கு செட்டில்மென்ட் ஆகிவிடும் என்றாள் 
அவர்களும் சரி என்றதும் ....
வீட்டிற்கு வந்து தன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது தனது அம்மா கணக்கில் அக்கா கணக்கில், மற்றும் நகைகள் எல்லாம் சேர்த்து  கூட்டி பார்த்தால் மொத்தம் 15 லட்சம் தேறியது இன்னும் 8 லட்சம் தேவை பட்டது அது போக டாகுமெண்ட் ரெடி பண்ண குறைந்தது 2 லட்சம் தேவை பட்டது ஆக மொத்தம் 10 லட்சம் என்ன செய்வது என்று திகைத்தாள் ஆனால் சிவன்யாவின் அக்காவோ இது அகலக்கால் வேண்டாம் நம் அம்மா அப்பாவின் 60 வருட உழைப்பு தான் இந்த பதினைந்து லட்சம் இதை வீணடிக்காதே என்று சொன்னதும் 
சிவன்யா  உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இல்லையா நிச்சயம் நல்லது தான் நடக்கும் நீங்கள் எல்லோரும் எனக்கு உறுதுணையாக இருந்தால் மட்டும் போதும் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றதும்  
சிவன்யாவின் குடும்பத்தினரும் சரி நடப்பது எல்லாம் நமைக்கே என்று சிவன்யாவுக்கு உறுதுணையாக இருந்தனர் 
டாகுமெண்ட் ரெடியானது பத்திர பதிவு நடக்கும் போது தன்னிடம் உள்ள 15 லட்சத்தை தருவதாகவும் அடுத்த 8 லட்சம் ஒரு மாத தவணைக்குள் தருவதாகவும்  ஒப்புதல் பத்திரமும் எழுத பட்டது  அதன் படியே அந்த சொத்து சிவன்யாவின் பெயருக்கு மாற்றப்பட்டது உடனே அந்த பாத்திரத்தை கொண்டு சென்று வங்கியில் அடமானம் வைத்து 10 லட்சம் பெற்றுக்கொண்டாள் அப்பணத்தில் 8 லட்சத்தை முதல் சொத்து தாரருக்கு கொடுத்து அவ்வீட்டை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டாள் சிவன்யா 
பின் அங்கு லீசுக்கு இருப்பவர்களை காலி செய்ய இரண்டு மாத தவணை உள்ளது அதற்குள் இவ்வீட்டை கொஞ்சம் ஆல்ட்ரேஷன் செய்தாள் சிவன்யா புதிய சம்பு தொட்டி  , திரிபேஸ் கரண்ட், மூன்று வீட்டிற்கும் டைல்ஸ் வெளியில் கம்பிக் கேட் , புது பெயிண்ட் என்று அட்டகாசமாக மாற்றினாள் அதைக் கண்டு  அத்தெருவே அந்த வீட்டை பார்த்து அசந்து போனார்கள் 
பின்பு அவ்வீட்டை விதவிதமாக போட்டோ எடுத்து நிறைய பேரிடம் விற்க விலை பேசினாள் சிவன்யா சிலர் 40 லட்சம் 45 லட்சம் என்று சொன்னார்கள் ஆனால் சிவன்யா 50 லட்சம் தான் முடிவான விலை சம்மதம் என்றால் சொல்லுங்கள்  உடனே  ரிஜிஸ்ட்ரேஷன்  பண்ணிடலாம் என்றதும் அவ்வீட்டை வாங்குபவர் டாகுமெண்ட்டை வாங்கி பார்த்தார் எல்லாம் சரியாக இருந்தது உடனே இந்தாருங்கள் 10 லட்சம் அட்வான்ஸ் மீதி பணம் ரிஜிஸ்ட்ரேஷன் அன்று DDயாக தந்துவிடுகிறோம் என்றனர் 
சிவன்யா சந்தோசத்தில் துள்ளிக்குதித்துக் கொண்டு பாபாவின் கோயிலுக்கு சென்று மனதார நன்றி சொன்னாள் அன்று வரும் வியாழன் அன்ன தானமும் கொடுக்க பணம் கட்டிவிட்டு வீட்டிற்கு வந்த சிவன்யா  கையில் இருக்கும் 10 லட்சத்தை வங்கிக்கு எடுத்துச் சென்று தனது பெயரில் இருக்கும் வாங்கிக்கடனை அடைத்துவிட்டு தனது பத்திரத்தை மீட்டுக்கொண்டாள் கடைசி மூன்றாவது மாதத்தில் அந்த வீட்டை விற்பனை செய்து விட்டு மீதி தொகை 40 லட்சத்தையும் கையில் பெற்றுக்கொண்டாள் 
பின்பு இந்த 40 லட்சத்தில் தனது கை தொகை, மற்றும் லீசு தொகை சேர்த்து 25 லட்சம் போக 15 லட்சத்தில் 
ஆல்ட்ரேஷன் 4 லட்சம், பத்திர பதிவு செலவு போக லாபம் 10 லட்சம் வெறும் மூன்று மாதத்தில் எப்படி வந்தது இந்த தைரியம் எல்லாம் பாபாவின் அருள் வாக்கு தான் என்று அக்கம் பக்கத்தினரிடம் பாபாவின் மகிமையை எடுத்துரைத்தாள் சிவன்யா  
அத்துடன் தன் கையில் இருக்கும் 40 லட்சத்தை வைத்து வீடு வாங்க சொன்னார் அவளின் அம்மா அதற்கு அவள் வேண்டாம் அம்மா 8 லட்சம் ரூபாய்க்கு ஒரு நல்ல வீடடை லீசுக்கு எடுத்துக் கொள்வோம் மீதம் உள்ள பணத்தை நால்வர் கணக்கிலும் ரூபாய் 8 லட்சம் வீதம் டெபாசிட் செய்துவிடுவோம் மதம் ஒருவருக்கு 7000 வீதம் நான்கு கணக்கிலும் சேர்த்து சுமார் 24000/-  வட்டி தொகை கிடைக்கும் அதைக் கொண்டு நிம்மதியாக காலம் முழுக்க வாழலாம் இல்லை புது வீடு தான் வாங்க வேண்டும் என்றால் அதற்கு இத்தொகை பத்தாது மீண்டும் கடன் வாங்க வேண்டும் அதற்கு வட்டி கட்ட வேண்டும் அதை விடுத்து வருடம் ஒரு முறை EB டெபாசிட், சொத்து வரி, தண்ணீர் வரி எப்படி ஏகப்பட்ட செலவு இருக்கு ஆகையால் தற்சமயம் நமக்கு சொந்த வீடு எல்லாம் வேண்டாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் நிச்சயம் பாபா இதை போல் இன்னும் ஒரு நல்ல வழி காட்டுவார் என்றதும் சரி உன் இஷ்டம் என்று விட்டுவிட்டனர் 
சிறுது காலம் கழித்து முன் பணம் வாங்கியவர் திரும்பவும் பணம் கேட்டு சிவன்யாவிடம் வந்தனர் 
அப்போது சிவன்யா பணம் கொடுப்பேன் உன் மகள் சொல்லுவாள் எனக்கும் இப்பணத்திற்கு சம்மதமில்லை என்று, பின் அவளின் புருஷன் சொல்லுவான் என் மனைவி பெயரிலா கடன் கொடுத்தீர்கள் இல்லையே இனிமேல் அவளிடம் கேட்க கூடாது என்று மிரட்டுவான்  
உன்னுடைய இன்னொரு மகள் சொல்லுவாள் நாங்களே வரும்டம் ஒரு முறை தான் குடும்பத்தோடு என் அம்மா வீட்டிற்கு லீவுக்கு வருகிறோம் இங்கு வந்து தொந்தரவு செய்யாதே இப்பணத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்மதமும் இல்லை என்று 
பின் நீ சொல்லுவாய் உன்னிடம் பணம் வாங்கியது தான் நான் செய்த தவறு என் எல்லா கஷ்டத்திற்கும் நீ என் வீட்டிற்கு லீசுக்கு வந்த நேரம் தான் என்று 
அடுத்து உன் மகன் சொல்லுவான் இந்த மாதம் இறுதியில் தருகிறேனென்று முடிந்து போய் கேட்டால் அடுத்த மாதம் அதற்கு அடுத்த மாதம் அப்படியே நான்கு வருடத்தையும் கழித்துவிடுவான் 
இதில் யாரை நம்பி உனக்கு உதவுவது என்று சொல் பார்க்கலாம் அன்று உங்கள் குடும்பத்தில் யாருக்குமே வருமானம் இல்லை இருந்தும் உன் தம்பியும் உன் தம்பி மனைவி அதாவது உன் மூத்த மகளும்  சொன்ன ஒரே வார்த்தையை நம்பி பணம் கொடுத்தேன் கரணம் கிருஸ்துவன் ஒரு சபையை  எடுத்து நடத்துபவர் நம்பிக்கையுடன் நடந்து கொள்வர் என்று தானே அந்த நம்பிக்கையை இன்று வரை யாராவது காப்பாற்றினீர்களா இல்லையே  
இந்த காலத்தில் 100 ரூபாய் கடனாக வாங்குவதே சிரமம் உன் மகளின் திருமணத்திற்கு முழு தொகையும் இன்னொருவர் மூலம் வட்டிக்கு வாங்கி கொடுத்தேன் நீங்கள் வட்டியும் காட்டவில்லை அசலும் கட்டவில்லை எல்லாம் என் தலையில் விழுந்தது ,கேட்டால் பணம் எப்போது இருக்கிறதோ அப்போது தான் தரமுடியும் என்று ஏளனமாக சொன்னாயே அந்த நான்கு வருடம் நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் உன்னுடைய அத்தனை சொந்த பந்தங்களும் உங்களை சுற்றி தானே இருந்தார்கள் யாராவது உதவி செய்தார்களா இல்லையே அதை விடு இரண்டு மாதம் முழுக்க கரண்ட் இல்லாமல் இருட்டில் இருதோம் யாராவது உதவி செய்தார்களா இல்லையே அன்று தான் புரிந்தது நீ கவர்மெடேயே ஏமாற்றியது நானெல்லாம் எம்மாத்திரம் 
சரி பழசை எல்லாம் பேச எனக்கு விரும்பம் இல்லை தயவு செய்து இங்கிருந்து சென்று விடு கடைசியாக ஒன்று மட்டும் சொல்கிறேன் கேள் 
நமக்கு உதவியர்களை என்றுமே நாம் மறக்க கூடாது அதே போல் நம்மை மிதித்தவர்களையும் என்றுமே மிதிக்க கூடாது என்று நினைக்கின்றேன் 
சொத்து சொத்து என்று திமிராக இருந்தாய் அதுமட்டுமா ஊரெல்லாம் கடன் வாங்கி எத்தனை பேரை ஏமாற்றினாய் அந்த பாவம் தான் என் மூலம் உனக்கு பாடம் கற்பித்துள்ளது இப்போது எந்த சொத்து உன்னிடம் உள்ளது சொல் அதற்கு ஈடாக பணம் கேட்க அன்று வாக்கு தவறாமல் நடந்திருந்தால் இன்று வழி தவறி அலைந்திடுவாயா இதெல்லாம் உனக்கு ஒரு பாடம் இனிமேல் என் வீட்டு வாசலில் வந்து நிற்காதே போ இப்போது புரிகிறதா பணத்தின் அருமையும் குணத்தின் அருமையும். என்று சொல்லி அனுப்பிய சிவன்யா 
தன்னால் அவர்களுக்கு உதவ முடியவில்லையே என்று பாபாவின் முன் புலம்பினாள் காரணம் இந்த நான்கு வருடத்தில் எத்தனை கோவில்,ஜர்ச் வாசல்,விரதம் பூஜை என்று அலைந்து திரிந்திருப்பேன் மீண்டும் அதை போல் ஒரு கஷ்டத்தை எதிர் கொள்ள என் இதயத்தில் தெம்பு இல்லை பாபா அதனால் தான் அவ்வாறு கூறிவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்றாள் சிவன்யா 
அருகில் இருந்த ஒரு அம்மா நீ ஏன் கலங்குகிறாய் மகளே நல்லவர்களுக்கு உதவி செய் இந்த மாதிரி தீயவர்களுக்கு உதவ முடியவில்லையே என்று வருத்தப்படாதே இன்னும் நீ கற்றுக்கொள்ள வேண்டிய நன்மை தீமைகள் நிறைய உண்டு தயங்காமல் இரு வெற்றி எப்போதுமே உண்மையின் பக்கம் தான் மறந்துவிடாதே மகளே செல் என்றனர் 
சிவன்யாவும் சந்தோசமாக பாபாவை தரிசித்துவிட்டு வீடு திரும்பினாள் 
ஜெயம் 
ஓம் சாய் ராம்  சாய் இருக்க பயம் ஏன் !

புரிதலின்றி பிரிதல் ...!

ராமூ சோனா இருவரும் நல்ல நண்பர்கள் ஒரு நாள் சோனாவிற்கு எதோ தெரியத எண்ணில் இருந்து ஒரு குறுந்செய்தி (காதல் என்ற வார்த்தையை உபயோகித்து )வருகிறது அச் செய்தியை கண்டு கோவம் கொள்ளவில்லை சோனா தன் வீட்டில் மற்றும் சக தோழிகளிடம் வினவினாள் அவர்கள் இல்லை என்று கூற

தன் நண்பனிடமும் பானு என்ற நண்பன் இருக்கானா என்று கேட்டதும் அந்த நண்பன் ஏன் என்னை சந்தேகப் படுகிறாயா உனக்கு எந்த ஒரு ராங் கால் அல்லது மெஸேஜ் வந்தால் நான் தான் காரணமா இல்லை என் நண்பர்கள் தான் காரணமா கிராமத்து பசங்கள் தான் இப்படி செய்வார்களா ஏன் நகரத்து பசங்கள் இப்படி செய்ய மாட்டார்களா? என்று திட்ட

உடனே சோனா நான் சாதுவாக பானு என்று நண்பர் உள்ளாரா என்று தானே கேட்டேன் இதற்கு ஏன் இப்படி கோவப்படுகிறாய் உன்மீது சத்தியம் உன்னை சந்தேகப் படவில்லை நீயோ எனக்கு நல்ல நண்பன் நீ சத்தியமாக அந்த மாதிரி வார்த்தையை என்னிடம் உபயோகிக்க மாட்டாய் அப்படி இருக்க நான் ஏன் உன்னை சந்தேகப் படவேண்டும் சொல்

உடனே ராமு ஓகே ஓகே எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று ஏளனம் செய்கிறாயோ என்றதும்

சோனாவோ ஐயோ அப்படி சொல்லவில்லை அதில் ஐ லவ் யூ பானு என்ற குறுஞ்செய்தி இருந்ததால் அப்படி சொன்னேன் நீ என்னை தவறாகவே புரிந்து கொண்டாய் அதனால் தான் நான் எது பேசினாலும் உனக்கு தப்பாகவே தோன்றுகிறது உன்மேல் எனக்கு சந்தேகம் இருந்தால் இந்த பத்து வருட காலமாக நாம் நண்பராக இருக்க முடியாது என் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமே என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டுவிட்டேன் அது தவறு என்று புரிந்துவிட்டது இதற்கு போய் என்னை பைத்தியம் மெண்டல் லூசு என்று பட்டம் கட்டிவிட்டாய் இனிமேல் உன்னிடம் எதுமே பகிர்ந்து கொள்ள மாட்டேன் ஓகே ஒன்றே ஒன்று மட்டும் கடைசியாக சொல்கிறேன்

நான் கேட்டது தவறாக இருந்தாலும் நீ சொல்லியிருக்கலாம் பானு என்று எனக்கு யாரும் இல்லை ஏன் எதாவது தவறான மெஸேஜ் வந்ததா எந்த நம்பர் கொடு பார்க்கலாம் இல்லை எதாவது ஒரு எண் வித்தியாசத்தில் தவறுதலாக அவர்கள் அனுப்பியிருக்கலாம் அதை அப்படியே விட்டுவிடு இனிமேலும் போன் அல்லது மெஸேஜ் வந்தா அப்போது பார்த்துக்கலாம் ஓகே என அன்பாக கேட்டிருக்கலாம் அதை விடுத்து நெருப்பை அள்ளி கொட்டியது போல் என்னை திட்டி தீர்த்துவிட்டாய்

நாளைக்கே நான் உன்னை பற்றி தவறுதலாக பேசினேன் என்று யாராவது ஒருவர் வந்து உன்னிடம் சொன்னால் நீ என்ன ஏது என்று வினவாமல் என்னை தண்டிக்கவும் தயங்க மாட்டாய் ஆதலால் இன்றுடன் நம் நட்ப்புக்கு முற்று புள்ளி வைத்துவிடலாம் என்றதும் ராமு தனது அழைப்பைத் துண்டித்துவிட சிறு தவறால் பெரும் விளைவால் வளர்ந்த நடப்பு மௌனத்தில் பிரிந்தது !

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில்
சிவந்திருக்கிறது
கிளியின் அலகு

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த ராஜா மேல உயிரையே வச்சிருந்தா
ஒரு நாள் அந்த ராஜா தன் பழைய காதல் தோல்வியில இந்த ராணியை தேடி வந்தான் ஆனாலும் அந்த ராணி பழச மறக்காமல் அந்த ராஜா கூட நல்ல நட்போடு பேசினாள்
இப்படியே இவர்கள் நட்பு தொடர்ந்தது 
ஒரு நாள் அந்த ராணி இன்பச் சுற்றுளா செல்ல வேண்டி சூழல் இந்த விசயத்தை அந்த ராஜாவின் காதில் போட்டாள் அந்த ராஜாவும் போய் வா என்றான்
அப்போது அந்த ராணி சொன்னாள் நான் எது செய்தாலும் உன் அனுமதி வாங்கியப் பின் தான் செய்கின்றேன் காரணம் என்னை நீ எப்போதும் நம்ப வேண்டும் அதே சமயம் நான் இன்னும் உன் விஷயத்தில் மாறவில்லையென நீ புரிந்துகொள்ள வேண்டும் ஆனால் நீ மட்டும் அப்படி இல்லையே ஏன் என்றாள்
நீ என்ன பைத்தியமா என் பழக்க வழக்கம் வேறு நீ அப்படி இல்லை எனக்கு குட்மார்ணிங்,குட் நைட் சொல்ல ஒரு பிரண்ட்ஸ் சாப்டையா என கேட்க ஒரு பிரண்ட்ஸ இப்படி லிஸ்ட் போய்ட்டே இருக்கும் ஆனால் நீ மட்டும் எனக்கு எப்போதூமே ஷ்பெசல் தான்
அப்ப நான் எந்த லிஸ்ட் ல இருக்கேன் ?
நீ அந்த லிஸ்ட்டில்  இல்லை உன் கிட்ட எப்படி பேசனும் மத்த பொண்ணுங்க கிட்ட எப்படி பேசனும் என்று எனக்குத் தெரியும் ஏனா நீ ஒரு பழம் சோ நீ வேர அவுங்க வேர
ஒ அப்படியா நீ திருந்தவே மாட்டையா ஏன்டா இப்படி இருக்க
நான் அப்படித் தான் எனக்கு அட்வைஸ் பண்ணுனா  பிடிக்காது நீ சுற்றுலா போய் ஜாலியா எஞ்சாய் பன்னு ஒகே  அப்புறமா நாம ஒரு நாள் கோவாவுக்கு போவோம்
கோவா வா எத்தனை நாள் ஆகும்
ஐந்து நாள் ஆகும்
என்ன ஐந்து நாளா ம்ம்ம்கும் நான் வரலப்பா
ஏன்?
ஒரு பிரண்ட்டு கூட வெளியில் போய் தங்குற அளவுக்கு தைரியம் எனக்கு இல்லை அதே சமயம் அந்த மாதிரி பொண்ணும் நானில்லை அதற்கு வேர ஆள பாரு வேண்டுமென்றால் கோவிலுக்கு போகலாம் என்றாள்
ம்ம்ம் சரி சரி நீ வர மாட்டேனு தெரியும் சும்ம தான் கேட்டேன்
அதானே பார்த்தேன் நீயே ஒரு கஞ்சன் ஒரு காப்பி கூட வாங்கி தரமாட்ட நீ கோவாவுக்கு கூப்பிட்டு போறவனா
இல்ல ராணி நான் அப்போம் பிச்சைக் காரண இருந்தேன்
இப்போம் கோடீஸ்வரான இருக்கையோ ?
ம்ம்ம் ஆமாம்
எல்லாம் பணத்தின் ஆசை சரி எனக்கு வேலை இருக்கு அப்பரமாக பேசலாம் 
ம்ம்ம் ஓகே ஓகே
உடனே அந்த ராணி தன் தோழிகளிடம் நடந்ததைச் சொல்ல அத் தோழிகள் ராணி இந்த நட்பு வேண்டாம் அந்த ராஜா நல்லவரா தெரியல விட்டுடுங்கள் என்றனர் 
ஏன்?
அவர் எனக்கு குட்மார்ணிங் குட் நைட் சொல்ல ஒரு பிரண்ட்ஸ் சாப்டையா என கேட்க ஒரு பிரண்ட்ஸ, மத்தபடி வேற மாதிரி பேச ஒரு பிரண்ட்ஸ் என லிஸ்ட் போட்டு பேசும் போதே தெரிகிறது அவர் நிச்சயம் கெட்டவராக தான் இருக்க முடியும் அவரும் தங்களை எப்படியாவது அந்த லிஸ்ட்டில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முயற்சி செய்கிறார் இது உங்களுக்கு புரியவில்லை
அடுத்ததாக கோவா -வை கூகுளில் பாருங்கள் என்ன கண்டராவியாக உள்ளது ஏன் இந்த ஊரை அவர் தேர்வு செய்ய வேண்டும் அங்கேயும் அவர் எண்ணம் சபலப் பட்டுவிட்டது
அதை விடுங்கள் இதே போல் இன்னும் எத்தனை பேரை அங்கு அழைத்துச் சென்றாரோ யாருக்கு தெரியும் அதனால் தான் சொல்கிறோம் ராணி கொஞ்சம் கவனமாக இருங்கள் உங்களுக்கு வெளி உலகம் தெரியவில்லை இனியும் அவரை நம்பி பழகாதீர்கள் அப்பழக்கத்தை இத்துடன் முடித்துக்கொள்ளுங்கள் அது தான் உங்களுக்கும் நல்லது உங்கள் குடும்பத்திற்கும் நல்லது
சரி தான் நீங்கள் கூறுவதும் ஆனால் இதுவரை என்னிடம் அவன் தவறாக பேசியதில்லை மேலும்  அவன் என்னிடம் கண்ணியமாகத் தானே நடந்துகொள்கிறான் அப்படி இருக்கையில் என்னால் அவனின் நட்பை துண்டித்துக்குக் கொள்ள விருப்பம் இல்லை  ஒன்று வேண்டுமானால்  இந்த கேள்விக்கான விடையை  அவனிடமே  கேட்டு விட்டால் என்ன ?
வேண்டாம் ராணி நீங்கள் கேட்டால் வீணாக சண்டை தான் வரும் பின் உங்கள் மனம் வாடும் சோகத்தில் மூழ்கிவிடுவீர்கள் பின் அவர் சொன்னது போல் உங்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் வந்தாலும் வரும் இது தேவையா காலம் பதில் சொல்லும் வரை கடவுளிடம் விட்டுவிடுங்கள்
ம்ம்ம் நீங்கள் கூறுவதும் சரிதான் என்னால் அவனை மறக்கவும் முடியாது அதே சமயம் மன்னிக்காமல் இருக்கவும் முடியாது கரணம் முதல் காதலுக்கு வலு அதிகம் வயதும் அதிகம் தான் அதுவே நட்பாக மாறும் போது மௌனத்தின் சித்திரவதை அதைவிட அதிகம் இது உங்களுக்கு புரியாது
ஆக எல்லோரும் தயாராகுங்கள் நாளை இன்பச் சுற்றுலா செல்ல 
சரிங்கள் ராணி நீங்கள் எப்போதும் போல் இப்படியே இருங்கள் அது போதும் எங்களுக்கு 

தமிழ்நெஞ்சம் - ஜுலை 2018

கடவுளின் காலடி
செருப்பாக தேய்கிறது
பக்தையின் பாதம்
நூறு நாள் போராட்டம்
கூலியாக....
துப்பாக்கி சூடு
கழட்டி விட்டும்
ஜோடி மாறாமல் கிடக்கிறது
காதறுந்த செருப்பு
புலி வந்த தடத்தில்
மான் வேட்டை
இறந்தது முயல்
வளையல் ஓசை
மெல்ல மறைத்தது
வானவில்
இரங்கல் மாலை 
சிரித்தபடி அசைகிறது 
மயானத்தில்
நீண்ட வரிசையில் யாசகன் 
குறுக்கே புகுந்தது
கட்டெரும்பு
உயிர் சேதம் ஆன பின்பும
சித்ரவதை
தூத்துக்குடியில்
நகரும் நிலா 
நாலாபுறமும் 
ஒரே வெளிச்சம்
லேசான மழை
பலமாக நனைகிறது
குழந்தையின் மனம்
வெந்த சோறு 
விஷமாக மாற்றியது 
ஸ்டெர்லைட்

கவிச்சூரியன் - ஜுன் - 2018

கோயில் இல்லா ஊர்
சாமியாக
சுடுகாட்டுக் கருப்பன்
தவழும் நீரோடை
தவம் கிடக்கும்
பிள்ளையார் எறும்பு
அனாதை இல்லம்
ஒற்றையில் நிற்கிறாள்
மக்களை பெற்ற மகராசி
அந்த ஊஞ்சல்
என்ன விலை
ஆடாமல் இருக்க
உயிர் சேதம் ஆனபின்பும்
சித்ரவதை
தூத்துக்குடியில்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 58

எழுவாய் பயனிலை 
இருந்தும் 
ஏதுமற்று கிடக்கிறது 
நம் காதல் இலக்கணம்

கவிச்சூரியன் மே- 2018 மாத மின்னிதழ் !

எரியும் மெழுகுவர்த்தி 
ஊதி அணைத்தபடி 
பிறந்த நாள் கொண்டாட்டம் 
மூழ்குமென தெரிந்தும் 
கப்பல் விடுகிறான் 
வெற்றுக் காகிதத்தில் 
பேருந்து இல்லா 
சாலையில் பயணிக்கிறது 
கிராமத்துக் கல்வி 
சித்திரை திருவிழா 
முதலில் வந்தது 
சொந்த ஊர் ஞாபகம் 
குலதெய்வ வழிபாடு 
பயணம் முடியும் வரை 
காதல் பாடல்கள் 

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

தாலி ஏறாமல் இதயத்தில் 
தனிக் குடித்தனம்
தலையெழுத்தென்னவோ
முதிர் கன்னி

தூத்துக்குடி சோகம்



சிறகறுந்த உயிர்கள் மத்தியில்
வேடனின் துப்பாக்கி சத்தம்
சிங்கத்தையே குறிபார்த்த
தோட்டாக்கள்
குருதியில் நனைந்த
உப்புக் காற்று
அய்யோ....
கொள்ளை ஆட்சிக்கு கொடிபிடித்தப் 
பிணம் திண்ணி கழுகுகளே
பணத்திற்கு விலை போனாயோ
அந்த 
உதிரத்தின் உழைப்பில் தான்
உன் சரிரம் வளர்ந்ததை
சற்றும் மறந்தாயோ
இதற்கு
மரணம் மட்டுமே தீர்வல்ல
மனிதாவி மானம் 
உண்டென்பதை மறைத்து
உப்பிட்ட மண்ணிற்கு
தப்பிட்டப் பெருமை எம்
தழிழகத்தில் உன்டென
உரைக்க செய்தாயோ
பதி மூன்று ஓட்டைக் கொன்று 
பதவியேறத் துடிக்கும் சொரி நாய்களே
இது மனுநீதிச் சோழன் வாழ்ந்த
மண்ணென்பதை நினைத்துப்பார் 
நீதி மறுபடியும் வெல்லும்

mhishavideo - 145