கவிச்சூரியன் டிச-17 மின்னிதழ்

மழை வெள்ளம்
மூழ்கியது
மனை வியாபாரம்
எந்த நாகம் தீண்டியதோ
நுரை தள்ளியது
கடலலைகள்
பல கோடி நட்சத்திரங்கள் 
இருட்டாகவே இருக்கிறது 
விண்வெளி
காம்பறுந்த மலர்கள்
ஒவ்வொன்றாக கோர்க்கிறாள்
பக்கத்துவீட்டு சிறுமி 
அப்பாவி பொண்ணுக்கு
ஆலகால விசமானது
நாக தோசம்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 33

மருதாணி வைத்த 
கையில் சிவந்திருக்கு 
வரதட்சணையாக 
தாய் வீட்டு சீதனம்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 32

காற்று வரும் போதெல்லாம்
நீயும் வருவதால்
வேறு வழியில்லாமல்
மூச்சுவிடுகிறேன்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 31

நான் வரைந்த 
ஓவியத்திற்கு 
உயிரூட்டிச் சொல்கிறது 
உன் ஒற்றை புன்னகை

ஒரு ஹைக்கூவும் ஒரு கோப்பை தேநீரும் - கார்த்திகை 2017

தெரு மூலையில்
வாசம் வீசுகிறது
அம்மாவின் கைப்பக்குவம் 

தன்முனைக் கவிதைகள் நானிலு - 30

பதுமையில்லா
கனவு வாழ்கை
முதுமையில்
முடிந்தது

தன்முனைக் கவிதைகள் நானிலு - 29

உனக்கான மலரை
தேடித் தேடியே
உதிா்ந்துவிட்டேன்
கல்லறையில்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 28

கடைசி பெஞ்சில் 
கிறுக்கப்பட்டுள்ளது 
முதல் காதலின்
கடைசியெழுத்து

தன்முனைக் கவிதைகள் நானிலு - 27

திசைகள் எட்டிலும் 
தேடிபாா்கிறேன்
அவளே வந்தாள்
ஒன்பதாவது திசையாக

தன்முனைக் கவிதைகள் நானிலு - 26

ரயில் என் மீது ஏறினாலும் 
நான் ரயிலில் ஏறினாலும் 
பயணம் என்னவோ 
தனிமையில் தான்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 25

புரியாமலே 
பேசிக்கொள்கிறோம்
அதற்குள் முடிந்து போனது
இருப்புத் தொகை

தன்முனைக் கவிதைகள் நானிலு - 24

அந்த பட்டாம் பூச்சி 
என்ன விலை 
வாங்கிக்கொள்கிறேன் 
அந்த ஏழு நாட்களுக்கு பின்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 23

ஏழு மலை ஏழு கடல் 
தாண்டி வாழ்ந்தாலும் 
தீர்வதே இல்லை 
காதல் பசி

தன்முனைக் கவிதைகள் நானிலு - 22

உளிகள் சத்தமிட்டு போதும் 
விழிகள் திறக்காது 
சிலையாகவே நிற்கிறாள் 
கலியுக கண்ணகி

தன்முனைக் கவிதைகள் நானிலு - 21

ஊஞ்சல் ஆடிய 
பாதங்கள்
ஒய்வெடுக்கிறது
மரத்தடி நிழலில்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 20

நீ மனதால் அடித்த அடியே 
மரணம் வரை வலிக்கும்
விரலால் அடித்து விடாதே
விடை தெரியாமல் போய்விடுவேன்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 19

முத்தமிடாத இதழ்
எதுவென்றேன்
உன் இதழ் என்றதும்
உதிர்ந்தது பொய் 

தன்முனைக் கவிதைகள் நானிலு - 18

நிலவு வந்ததும்
ஒடி ஒளிந்து கொள்கிறது
அவளின்
அழகு முகம்

தமிழ்நெஞ்சம் டிசம்பர் - 2017

மருத்துவ கனவு 
நீட்டாக முடிந்தது 
பிரேதபரிசோதனை 
தீ பந்தம் 
கொழுந்து விட்டு எறிகிறது 
தீண்டாமை 
ரயில் பயணம் 
மோதிக்கொள்கிறது 
பழைய இருக்கை 
இறுதி மூச்சை 
விட்டுக்கொண்டிருக்கிறது 
தெரு குழாய்கள் 
குறி பார்த்து 
உதைக்கிறது 
கொம்பு தேனீ 
தலை முழுகிய பின்னும் 
மணக்கிறது 
நேற்று வைத்த முல்லை 
சத்தமில்லாமல் 
திறக்கிறது 
பூ விழிகள் 
நிமிர்ந்து நின்றால் 
சாம்பல் ஆவீர் உணர்த்தியது 
ஊது பத்தி 
தீப ஒளி திருநாள் 
மங்கலாக தெரிகிறது 
அப்பாவின் கண்கள் 
நட்சத்திரங்களாக 
ஜொலிக்கிறது 
பாட்டி சுட்ட வடை 

தன்முனைக் கவிதைகள் நானிலு - 17

கடல் அலை
காலை அறிக்கும்
காதல் அலை
கண்ணை கரிக்கும்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 16

சலவை கல்
அழுக்கு படிந்திருக்கும்
கிராமத்து 
காதல்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 15

உன்னை பார்த்ததும்
இளைப்பார துடிக்கிறது
இதயத்தின்
சாரல்

mhishavideo - 145