கவிச்சூரியன் ஜூலை 2017 இதழில் எனது ஹைக்கூக்கள்

பரந்த கடல் 
குறுகிய வட்டத்திற்குள் 
இலங்கை அகதிகள் 
வறண்ட நிலத்தில் 
பூத்து குலுங்குகிறது 
காதல் ரோஜா 
நீர்க்கால்கள் ஓரம் 
செழித்து வளர்கிறது 
அன்றில் மலர்கள் 
பூக்காமலே 
காய்க்க தொடங்கியது 
நவீன நாகரிகம் 
நிஜ அலைகளுக்கு முன்
தோற்றுப் போனது
நினைவலைகள்

உழவும் தொழிலும் !




உழவும் தொழிலும் உலகினிரு கண்கள் 
உணர்த்தவே பிறக்கிறது தை திரு பொங்கல் 
தமிழரின் நெஞ்சில் வாழ்ந்திடும் திங்கள் 
தலை முறை பசி தீர்த்திடுமே உழவரின் கரங்கள்   
காணி நிலமும் கதிரவன் ஒளியும் 
கடவுளேனெக் கொண்டு களம் சேர்த்த 
நெல் மணிகள் உறவேதும் பாராது 
உலகுக்கே படியளந்த விவசாயி 
வளம் மிகுந்த மண்ணில் விலை உயர்ந்த 
இயந்திரம் மக்கள் பஞ்சம் தீர்த்துவைக்க 
மழையைத் தேடி  நிலைகுலைந்த விவசாயி 
இப்போது நிர்க்கதியா நிற்கின்றான் 
விலை நிலத்திலே வீடு வந்து குடியேற 
விற்றவனுக்குச் சோறுமில்லை பெற்றவனுக்குக் 
கூழுமில்லை கால் வயிறு கஞ்சிக்காகக் 
கல்லறையைத் தேடித் திரிகிறான் விவசாயி
அடைக்கலம் கொடுக்க அரசுமில்லை 
ஆதரித்துக் கரைசேர்க்க ஆளுமில்லை 
கூறு போட்டு ஆட்சியிலே கொடிகட்டிப் 
பறக்கிறது பார் பஞ்சமென்னும் அன்னக்கொடி !

முத்துக் கமலம் 15 ஜூலை 2017 ல் ஹைக்கூ

காற்றில் 
பேயாகத் திரிகிறது 
உதிரிப்பூக்கள் !
கீழ் வானம் 
மெல்லச் சிவக்கிறது 
தாவணிப்பூக்கள் !
சுருக்கு முடிச்சு போட்டவாரே 
பயணம் செய்கிறாள் 
பூக்காரி !
தண்ணீர் தாகம் 
நாவை அடக்கி வைத்தது 
மூச்சுக் காற்று !
முற்றிய விதையிலிருந்து 
துளிர்க்கிறது 
இளந்தளிர்  !
மழை இல்லை 
குடை பிடித்தபடி 
இளநீர் வியாபாரி 

கவிதையின் நிழலில் !

Image may contain: 1 person, closeup

இந்த பாலை வானத்திலும் 
ஓர் அழுகுரல் 
கேட்டுக்கொண்டே இருக்கிறது
கேட்பதற்கு நீ 
இல்லை என்றாலும்
சுவாசிப்பதற்கு வருவாயென 
காத்திருக்கிறேன் 
கவிதையின் நிழலில் !

கொலுசு ஜூலை 2017

துவையல் அரைத்த
அம்மியைச் சுற்றி
பாட்டியின் நினைவலைகள்
அலசும் துணியில் 
ஒட்டிக்கொண்டிருக்கிறது 
அம்மாவின் பாசம் 

முத்துக்கமலம் இணைய இதழில் எனது ஹைக்கூக்கள் - ஜூலை 2017

கிளையை முறித்தபின் 
பூக்கத் தொடங்கியது 
செம்பருத்திப்பூ !
தேநீர் இலை பறித்துப் போட 
அட்டைப்பூச்சியாய் உறிஞ்சுகிறது 
சாரமற்ற வாழ்வு !
ஆயிரம் காலத்துப் பயிர் 
அறுவடைக்காகக் காத்திருக்கிறது 
கோர்ட் வாசலில் !
கோவில் வாசலில் நின்று 
வணங்காமல் இருக்கும் 
காலணிகள் !
கோவில் சுவற்றில் 
அசுத்தம் செய்யும்
தெரு நாய்கள் !
கொட்டித் தீர்க்கும் மழை
வயலில் இறங்கி 
கப்பல்விடுகிறான் பேரன் !
மாமியார் மருமகள் சண்டை 
பதவி உயர்வு பெறுகிறார் 
வீட்டு வேலைக்காரி !
வளைந்து நெளிந்த புருவம் 
நேராகச் செல்கிறது 
பார்வைகள் !

mhishavideo - 145