புதுமை பழமை,

9 வருடத்திற்கு முன் பேசிய வார்த்தையை தூசி தட்டிப் பார்க்கும் மக்கள் மத்தியில் தெரிகிறது பகைமை 

இது பாகுபலிக்கா இல்லை பாக்கப் பிரிவினைக்கா என்ற ஐயம் தோன்றுகிறது 
ஆம் காவேரி தாண்ணீர் தர மறுக்கும் நேரத்தில் நம் தமிழர்கள் ஊட்டி அருகே ஒரு தடுப்பணை கட்டினால் போதும் தண்ணீர் கேட்டு காவேரியை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற பதிவு நேற்று பார்த்தேன்  #யோசியுங்கள் ?
கடந்த 30நாட்களுக்கும் மேல் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கடன் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர ஒரு புதிய முயற்சி மல்யா கைது ஆனா செய்தி யோசியுங்கள் ? எப்படி எல்லாம் திதை திருப்புகிறார்கள் என்று 
விவசாயி கடனை 7000 இளைஞர்கள் ஆளுக்கு 100 ரூ வீதம் கொடுத்தால் கடனை எளிதில் அடைக்கலாம் என்ற பதிவும் கண்டேன்  சரி தான் ஒரு மாதத்திற்கு data card பயன்படுத்துபவர்கள் அதைRecharge செய்வதை  நிறுத்திவிட்டு அதை இந்த மாதிரி நல்ல விசயத்திற்கு பயன் படுத்தலாம் என்றால் 
ஆட்சி எதற்கு அரசு தான் எதற்கு ?
நாட்டில் நடக்கும் கொடுமைகளை களையாமல் நாற்காலியைப் பிடிக்க சின்னம் சின்னம்மா என்று கூவிக்கொண்டே செல்கிறார்கள் ஏன் 
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள்  70 நாட்கள் மறைவாக வைக்கப்படட போது கூட நாட்டில் அமைதி இருந்தது இப்போது அந்த அமைதி எங்கே ?
ஒரே நாளில் பண முடக்கம் 
ஒரே நாளில் பதவி  ஏற்பு 
ஒரே நாளில் மறைமுக வாக்கெடுப்பு 
ஒரே நாளில் விலை மாற்றம் 
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் 
ஆனால் ஒரே ஒரு நிடம் யோசித்துப் பார்த்தால் போதும் அரசும் சரி மக்களும் சரி மாறிவிட முடியும் 
அந்த மாற்றத்தை ஏன் கொண்டு வர மறுக்கிறது நம் மத்திய அரசு 
மதுவை ஒழிப்போம் என்று குரல் கொடுத்து ஓட்டு வாங்கினோம் அதை மறந்து ஓட்டு போட்டவர்கள் வீட்டு பக்கமே மதுவைதிறக்க முயலுவது சரியா ?
சீமை கருவேலம் மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது ஏன் ? மீத்தேன் வாயு எடுக்க தடை விதித்தோம் அதை வேறு வழியில் கொண்டு வர துடிக்கிறது நம் அரசு ஆம் எல்லா சீமை கருவேலம் மரங்களை அழித்துவிட்டால் #விறகு #கரிக்கு எங்கே போவோம் அப்போது எளிதில் மீத்தேன் வாயு வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுவோம் ஆதனால் தேவையான இடத்தில் இருப்பதை அளித்துவிட்டு தேவை இல்லாத இடத்தில் இருப்பதை பாதுகாப்போம் இதுவும் நான் ஒரு பதிவில் படித்து அறிந்தது தான் 
ஆகவே  ஒரு பிரச்னையை சமாளிக்க புது புது பிரச்சனை கொண்டு வரும் அரசுக்கு லாபம் தான் என்ன ?
மக்கள் விழித்து விட்டார்கள் இனிமேலும் ஏமாற்ற முடியாது ஒவ்வொரு பிரச்சனையிலும் ஒரு நன்மை இருப்பதை கண்டுகொள்கிறார்கள் முடிவில் சாத்தியமே வெல்லும் என்பதை மறந்து விடாதீர்கள் மாற்றம் கொண்டு வாருங்கள் 

ஆகவே மக்களின் நலன் கருதி அரசும் சரி ஆட்சியும் சரி நல்ல முடிவை எடுக்க வேண்டும் 

2 comments:

 1. நிகழ்கால அரசியல் அலசல் அருமை. நலமா சகோ

  ReplyDelete
  Replies
  1. கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
   நான் நலம் நீங்கள் ?


   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

படைப்பு வளம் - வசீகரன்

சில ஹைகூக்கள் ஒரு பார்வை: அக்டோபர் - 2018 படைப்பு வளம் - வசீகரன் தமிழில் ஹைக்கூ படைப்பாளன் பரந்து ...