மேல் ஜாதிக் கோடரி !

அடங்கிப் போன 
ஆசைக்கு
ஆக்சிசன் கொடுத்தக் 
காதலை 
வெட்டி விட்டது 
மேல் ஜாதிக் கோடரி !

கருப்பு வெள்ளை காதல் !

என் காதலை 
ஒரு பிரேமிற்குள் 
அடைத்து வைக்க முயலுகிறேன் 
அதையும் தாண்டி 
வாழ்ந்துவிட்டு வெளியேறுகிறது 
கருப்பு வெள்ளை காதல் !

சோம்பல் !

ஒவ்வொரு 
மழை துளியையும் 
எண்ணி முடிப்பதற்குள் 
களைத்துவிட்டது 
சோம்பல் !

இனிமையானது !

அவசர உலகத்தில் 
அமைதி காக்கும் 
இளமையைவிட ...
ஆணவத்தில் பூக்கும் 
காதல் 
இனிமையானது  !

இதயம் !

கவிதையை விட்டு 
கொஞ்சம் 
கீழே இறங்கினேன் 
குப்பையாக மாறியது 
இதயம் !

தமிழ் வாசல் - மார்ச் 2017 !

திடீர் மழை 
ஆனந்த கூத்தாடும் 
கிணற்று தவளை !
தேன் மழை 
வானவில்லாய் மாறும் 
வண்ணத்து பூச்சி !
கல்லறைப் பனி 
ஆவியானது 
காவல் பொம்மை ! 
மெல்ல நகரும் நாள்
சுருங்கி மலர்கிறது 
குழந்தையின் வயசு 
மஞ்சள் பூசிய முகம் 
மெல்ல மெல்ல கலைகிறது 
இளவேனில் கனவு 
புத்தரின் நிர்வாண ஓவியம்
ஆடையானது 
வணக்கும் கைகள் !
தொங்கி அசையும் விளக்கு
அலாரமானது 
கீச் பனையோலை !

2017 மார்ச் மாத கவிச்சூரியன் !

சாணம் தெளித்த முற்றம்
ஆழகு படுத்தியது
பூசணிப்பூ
மகரந்தச் சேர்க்கையை 
பிரித்து வைக்கிறது 
பூப்பறிக்கும் கரங்கள் !
பாத்திக் கட்டி 
பதியம் போட்டது 
விவசாயிகள் உயிர்
கொட்டி தீர்ந்தது 
வறட்சியில் 
விவசாயின் கண்ணீர் !

மகாகவி - பிப்ரவரி 2017 !

பனி மூடிய இரவு 
வீர வணக்கத்துடன் 
கண்ணீர் அஞ்சலி !

ஹைக்கூக்கள்

குறும் பலகை 
விரிவான விவாதத்துடன் 
தொடங்கும் மாணவர் வாழ்க்கை ....!
கொடை வள்ளல் 
கொஞ்சம் கொஞ்சமாக 
குறையும் பாவ மூட்டை ...!
வற்றிய குளத்தில் 
நிரப்பி செல்லும் 
சருகுகள்....!
வனாந்தரம் 
பாடம்கற்பிக்கும் 
குயிலினங்கள் ...!
முறிந்த கிளை
இளைப்பாறும்
சிறகொடிந்த பறவை ...!
நடை மேடை
ஓடி பிடித்து விளையாடும்
நிழல்....!
ஆடி மாதம் 
ஓடி விளையாடுகிறது
நாள் காட்டி ...!
ஊக்க மருந்தை தேடி
அழிந்து கொண்டிருக்கிறது 
இன்றைய சமூகம் ....!
குடை முழுவதும் 
நனைந்து கிடக்கிறது 
மேகம் ...!

திரை மூடிய அலங்காரம் 
தெள்ள தெளிவாக காட்டியது 
தொலைகாட்சி வீடியோ

ஹைக்கூக்கள்

எச்சில் இலை
படியளக்கும் 
கையேந்தி பவன் ...!
வாடாத மனத்துடன்
அலங்கரிக்க வருகிறது 
தலையணைப் பூக்கள் ...!

தெருவோரம் 
சிறகை விரிக்கும் 
சிறுவனின் மனசு ...!
அடைத்து வைத்த கோழி
சுதந்திரமாய் வெளிவருகிறது
குஞ்சுகள் ...!
ஆபத்தின் விளிம்பை 
வெளிச்சம் போட்டு காட்டுகிறது 
உடைந்த கண்ணாடி ...!
லேசான தென்றல் காற்று
ஏழுப்பிச் செல்கிறது
ஆழிப் பேரலையை ....!
சுமக்கும் தகுதியிருந்தும் 
சுமையானது 
முதிர் கன்னி ...!
வீதி உலா 
விடை தெரியாமல் அமர்ந்திருக்கும் 
கோயில் சிலை ...!
விடியல் கிடைத்தும்
சிறைக்குள் தள்ளப்பட்டது
நிலா
நடுங்கிக் கொண்டிருக்கும் 
நட்சத்திரங்கள்...
பனி விழும் இரவு

ஹைக்கூக்கள் !

இருள் படிந்த கடல் கரை 
வெளிச்சம் பிறக்கிறது...
காதல் ஜோடிகள் ...!
வறுமை கோட்டை 
திருத்திக் கொண்டிருக்கிறது 
எழுதப்பட்ட ஓவியம் ...!
மூங்கில் காடு 
இசைத்துக் கொண்டேயிருக்கிறது
காற்று...!

தீப ஒளி திருநாள் 
பகிரங்க வெடிகுண்டுகள். 
பட்டாசு தொழிற்சாலைகள் ...!
பேசாத பொம்மைகள் 
பேசுகிறது 
வாய்மையை ...!
கூரை காய்ந்து 
மாளிகையானது 
பயிர் வைத்த நிலம் ...!
பாம்பைக் கண்டதும் 
கிளியின் ஆரவாரம் 
உயிர் பெற்றது அணில் ...!
பிரிவின் தூரம் 
நிரப்பி செல்கிறது 
கனவு குதிரை ...!
குறுக்கெழுத்துப் போட்டி 
சரியான விடைக்குப் பரிசு
படிக்காதவன் வெற்றி ...!
சூரியன் மறைந்தது 
மா கோலமிடுகின்றாள்...
நிலவு பெண்!

‎எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்‬


வாடி வாசலுக்கும் - நெடு வாசலுக்கும் உள்ள ஒற்றுமை இதோ !

அன்று வாடி வாசலை மூட நினைத்தார்கள் எப்படியோ போராடி வென்று விட்டோம் !

இப்போது நெடு வாசலுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம் ! சரி ....

வாடி வாசலை அடைத்து விட்டால் நெடு வாசலை ஈசியாக அடைத்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள் !

காரணம் சாண எரிவாயு மூலம் கிடைக்கும் மீத்தேன் இல்லாமல் போகும் என்பதே அவர்கள் திட்டம்
ஆனால் நாம் விழித்துக் கொண்டோம்
எல்லோரும் கூறும் கூற்றுகள் படி

மாடுகள் இருந்தால் எளிதில் கிடைக்கக்கூடிய "மீத்தேன் வாயு "கிடைத்துவிடும் (அதாவது மேலே கூறியபடி மாட்டுச்சாணி மூலம் கிடைக்கு வாயு எந்த பக்க விளைவும் இல்லாதது )

அப்புறம் பால் உற்பத்தி அதிகரிக்கும் இதனால் எல்லோரும் மலிவு விலையில் பால் வாங்கி அருந்த முடியும் 
நோய் நொடி இல்லாமல் வாழமுடியும்

இதை மனதில் வைத்துக்கொண்டு தான் ஒவ்வொன்றாக நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை முடக்க நினைத்தார்கள் அந்த கார்ப்ரேட் கம்பேனி காரர்கள்

இப்போது கூட நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் இனி எப்போதுமே இருட்டில் தான் வாழ வேண்டும்

அது மட்டுமின்றி ஒவ்வொரு பொருளுக்கும் நாம் அயல் நாட்டையே நாடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம், வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம் !

முக்கனி - ஜனவரி டு மார்ச் 2017

மின்னலில் கிழியும் வானம் 
தைத்துக் கொடுக்கிறது 
மழைத்துளிகள்  !
மதுவைச் சுமக்கும் 
மலர்களுக்குச் சுமையானதோ  
பனித்துளியால் குனிகிறதே !
சுவரில்லா கோவில் 
வாசம் செய்கின்றன 
இயற்கை தெய்வங்கள் ...!

mhishavideo - 145