2017 பிப்ரவரி மாத கவிச்சூரியன் மின்னிதழில் - ஹைக்கூ

புயல் காற்றை 
தடுக்காத அறிவியல் 
சேதமாகும் நகரங்கள்
அழிக்கப்படும் இயற்கை 
விசமாகும் உணவு 
ரசாயன விவசாயம்
நுரையலை இல்லாமல் 
கரையைக் கடக்கிறது 
பாலைவனப் புயல் !
சலவை தொழிலாளி வீட்டில் 
குவிந்து கிடக்கிறது 
அழுக்கு மூட்டை
கிழிக்கப்பட்டது 
அம்மாவின் சேலை 
தாவணியில் மகள் !
 

ஜல்லிக்கட்டு கவிதை



பறையடிச்சி களமிறங்கும் காளையடா மச்சி 
 சிறைபுடிச்ச பீட்டாவால் அழியுதடா 
மீட்டெடுக்க இளைஞர் படை போகுதடா எங்கும் 
அறவழியில் அகிலம் ஒண்ணா கூடுமடா 
அலங்கா நல்லூரில் இருந்து அமெரிக்காவரை 
சும்மா அதிருதுடா

பால் குடிக்கும் குழந்தையெல்லாம் கத்துதடா 
அது தான் தமிழ் மரபின் கெத்துடா 
புள்ள தின்னா பாலு தரும் ஜீவனடா விடிஞ்சா 
தள்ளி நின்னு பார்க்குது ஜல்லிக்கட்டு காளையடா - மச்சி 
நிரந்தர தீர்வு கிடைக்கு வரை ஓயாதடா 
நிஜமெது நிழலெது நம் கண்முண்ணே விளங்குமடா

பகலிரவு எண்ணிக்கையில் முடியுதடா -மச்சி 
பாட்டன் பூட்டன் கனவு இங்கே பலிக்குமடா 
ஏறு தழுவுதல் இளைஞர்களின் உரிமையடா நாளை 
எடுத்துரைக்கும் அரசியல் ஏட்டில் பதியுமடா 
குடியரசு தினம் ஒருநாள் நடக்குமடா அங்கே 
குனிந்தவர்கள் நிமிர்ந்துவிட்ட கோசம் முழங்குமடா 
-20.1.17

ஜல்லிக்கட்டு கவிதை

தன்தமிழ்தாய் கண்ட பண்பாடு 
தமிழகமெங்கும் முழங்குவோம் ஒன்றோடு !
பிறந்தோர் அளித்த பழம்பெரும் மரபுதனை 
புலம் பெயர்ந்த பீட்டாவுக்கு புகட்டவே !
கண்விழிப்பாய் காட்ச்சிப்படுத்தும் காளையர் 
முகமதை நீ கடலினில் கண்டறிவாயோ !
வானவொளி உதயம் நமக்கெனக் கொண்டு 
வெற்றிவகை சூடி வணங்கிடு தை திருநாளை !

நடுநிசி உலா ஹைக்கூ இதழ் எண் .02

பூத்து குலுங்கும் மொட்டுக்கள் 
கருகியது ...
பள்ளி வாகனம் !

ஜல்லிக்கட்டு கவிதைகள்



வியப்பிலோ காவல் படை அதில் 
வெந்து தணியுது இளைஞர் படை

அஞ்சி நடுங்குது ஆட்சி படை 
அகிலமே முழங்குது ஜல்லிக்கட்டு தடையை ஓடை

வாடி வாசல் திறக்க நடை இதை 
வித்திட்ட இளைஞர்க்கு வீர வணக்கம் கொடை

பழைய ஞாபகம் !

பேனாக்களை
தூசி தட்டிப் பார்த்தேன் 
கிடைத்தது
துருப்பிடித்தக் கவிதை ஓன்று
கசக்கி எறிய முற்படுகிறேன் 
சாம்பலானது
பழைய ஞாபகம் 

எழவு காத்த கிளி !

Image may contain: one or more people, grass, outdoor and nature

ஆதி மனிதன் விவசாயத்தை 
பாதி விவசாயமாக மாற்றிய 
விஞ்ஞாத்தை எடுத்துக் கொண்டு 
அடுத்த வேளை பசிக்காக 
கொடுத்த வேலை போதுமென்று 
ஓடிக்கொண்டிருக்கிறோம் ....

உடுத்த உடை இருக்க இடம் 
கொடுத்தவரெல்லாம் உரிமை 
கொண்டாடி உயர்ந்து நிற்பதைக் கண்டு 
பெருமை பேசி திரிகிறோம்

ஊருக்கே படியளந்த 
விவசாயி மட்டும் சிறுமை பட்ட 
வெளுத்துக் கட்டிய கோமணமும் 
பழுத்து தொங்கிய தோலுமாய் 
உயிர் கொடுத்த மண்ணிற்கு உரமானன்

ஆடு புல்லை மறந்தது 
அறிவாளி தாய் நாட்டை இழந்தான் 
மூடன் அரசியல்வாதியானான் 
மாடு ஜல்லிக்கட்டுக்கு போராடுது 
மக்கள் சின்னம்மாவை சீராட்டுது 

கொலை கொள்ளையில்
சுற்றி வருகிறது நாளிதழ் 
சிலை கடத்தலில் 
சின்னா பின்னமாகுது கோயில் 
அல்வா கொடுக்குது சினிமா 
ஆண்டவன் கொடுக்கிறது இனிமா

அடிச்சு பேஞ்ச மழையில 
புடிச்ச வேரும் பொளந்துருச்சி 
வேற பொழப்ப தேடி போகாம 
மரத்தை வைக்க கிளம்பியாச்சு 
பணத்த வச்ச முதலையெல்லாம் 
பக்குவம மாத்தியாச்சு பழசு இப்போ புதுசாச்சு 
ஏர் பூட்டியவன் கதை மட்டும் 
எழவு காத்த கிளியாச்சு

தமிழ் வாசல் ஜனவரி 2017

புகைப்படம் எடுக்காதீர் 
கோயில் கருவரையில்...
உள்ளே நிழற்பட கருவி!
பூத்து குலுங்கும் மொட்டுக்கள் 
கருகியது ....
பள்ளி வாகனம் ...!
தொட்டி நீரில் 
துள்ளி குதிக்கும் மீன்கள் 
குழந்தையின் கைவிரல்
நாணய விலக்கல் 
சிக்கி தவிக்கும் 
இந்திய சிப்பாய்கள்
கூரை வீட்டில் 
சறுக்கி விளையாடுகிறது 
மழைத்துளிகள் ...!
ஏழையின் கண்ணீரில் 
உயிர் வாழ்கிறது 
திமிங்கலம் 
கலைத்துப் போட்ட குப்பை 
குண்டு மணியானது 
தொட்டில் குழந்தை

இதய அ றையில்

நேசித்து விட்ட இதயத்தை
யோசித்துப் பார்த்தேன் மீண்டும்
நேசிக்கச் சொன்னது சரி
சாதித்தப் பின் 
யோசிக்கலாம் அதுவரை
சற்று ஓய்வெடு என்
இதய அறையில்

கவிச்சூரியன் ஜனவரி 2017 மாத மின்னிதழ்

என்னோடு நிழல் 
சேர்ந்தே பயணிக்கிறது 
சூரிய ஒளி !
ஆலயப் பணி 
செருப்பு கால்களுடன் 
வேலையாட்கள் !
சிலை வைக்காமலே 
உயர்ந்து நிற்கிறது 
தோல்வி !
பாசத்தோடு 
கதை சொன்ன பாட்டி 
முதியோர் இல்லத்தில் !

mhishavideo - 145