சாதி வெறி...!



புது சொந்தமாக வந்த 
காதலியை கௌரவப்படுத்த 
மணமுடித்தேன் 
பழைய சொந்தங்கள் எல்லாம் 
புதுசாக பார்த்தது
அப்போது புரியவில்லை 
இந்த ஆணவக் கொலைக்கு
பகுத்தறிவை விட 
பரம்பரை சாதி வெறியென்று
சவலப்பட்டேன்
அவளோடு சேர்ந்து சாக 
தடுத்து நி றுத்தியது
எனக்குள்ளும் 
அடி நெஞ்சில் ஒளிந்துகிடந்த
சாதி வெறி.

சென்ரியு,



குடுகுடுப்பைகாரன் 
நல்லகாலம் பொறந்தது
ராசி கல் விற்பனை

எலுமிச்சை பழமல்ல ...!




என் 
கண்கள் ஒன்றும் 
எலுமிச்சை பழமல்ல 
உன் 
காதல் சூட்டை 
தணிக்க...!

சென்ரியு ...!

அனைத்துக் கட்சி கூட்டம் 
கல்லெறிந்தார்கள் 
ஏழையின் வயிற்றில் ! 

ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!



தொட்டில் குழந்தையை 
மறந்து கோயில் கோயிலாக 
ஏறி இறங்கும் தாய் !


எந்த அலையின் பிரசவமோ 
கரை ஒதுங்கியது 
சிற்பிகள் !

ரசிக்க முடியவில்லை !



காதலுக்கு முன் 
கரையில் நின்று 
கடலை ரசிக்க முடிந்த 
எனக்கு ....
காதலுக்கு பின் 
கண்ணீரில் இருந்து 
கரைசேர துடிக்கிறேன் 
முடியவில்லை !

தமிழ் வாசல் -ஜுன் 2016 ! (ஹிஷாலியின் ஹைக்கூ)


காற்றின் அரங்கேற்றத்தில் 
நடனமாடும் கிளைகள் 
விருதுகள் வழங்கும் கோடை!
மரபணு காப்பகத்தில் 
விடப்பட்டது 
இந்திய விவசாயம்...!
தாய்பால் இன்றி வானம் 
வாடுகிறது 
மரக்கன்று !
அருகம்புல் நடுவே 
துளிர்கிறது 
பாரதியின் கனவு !
கொட்டும் அருவி 
விசமாக மாறுகிறது 
விவசாயம் !
பறவையின் கலைக்கூடம் 
நுழைய மறுக்கிறது 
காந்தி நோட்டு !
சலசலக்கும் நீரோடையை 
மௌனமாய் கடக்கிறது 
நீரில் விழுந்த நிலா ...!

பூவின் வாசம் !

13318513_1022161434504722_554123272_n

உழைப்பால் வந்த ஊதியத்தை
கவர்ந்து கொண்டு
உல்லாசமாய் வாழும்
கணவன்மார்கள்
இருக்கும் வரை
ஜான் ஏறினால்
முழம் சறுக்கும்
என்பதை உணர்த்தியது
இந்த பூவின் வாசம் ! 


கவிச்சூரியன் மின்னிதழ் - ஜூன் 2016...!



அத்தனை பாவங்களையும் 
வென்று விட்டது
ஒரே ஒரு மன்னிப்பு ! 
அலைகளின் பிரசவமாய் 
ஒதுங்கியது 
சிற்பிகள் !
தொட்டில் குழந்தை 
மனமில்லாதவள் 
வரம் கேட்கிறாள் கோவிலில் !
சுகப்பிரசவம் 
சிக்கலானது 
பெண் குழந்தை !

mhishavideo - 145