கடைப்பிடிப்பீர் இளைய சமூகமே ...!



பொழுது விடியும் முன்னெழுக  
    புழுதிப் பறக்க ஓடிடுக 
குளிர்ந்த நீரில் குளித்திடுக 
    குல தெய்வத்தை வணங்கிடுக 
காலை உணவு புசித்திடுக 
    கடமை யாற்றப் புறப்படுக 
அறிவு சிறக்கப் படித்திடுக 
    ஆசிரியரை என்றும் மதித்திடுக 
கண்ணீர் துடைக்கப் பழகிடுக 
    கனிதரும் மரமாய் வளர்ந்திடுக 
காந்தி வழி நடந்திடுக 
    கர்ணன் புகழ் பாடிடுக  
காலம் தவறாது உழைத்திடுக 
    கருப்புப் பணத்தை ஒழித்திடுக 
பாவங்கள் செய்வதை நிருத்திடுக 
   பாரதி தமிழை போற்றிடுக  
ஆபத்து காலத்தில் உதவிடுக 
    அப்துல்கலாம் கனவை நிஜமாக்கிடுக 
அகிலம் செழிக்க மரம்நடுக  
    அத்திமரம் போல் இனித்திடுக 
ஏளனம் செய்வதை மறந்திடுக 
    ஏழைக்கு உதவ நினைத்திடுக 
சாலை விதியின் துணையோடு 
    சமூக நலன் காத்திடுக !

குறிப்பு : -
இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 -தமிழ் இணைய
கல்விகல்வி கழகம் இணைந்து "மின்தமிழ் இலக்கிய
 போட்டிகள் 2015 க்காக எழுதப்பட்டது!
வகை-(5) மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த
எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு...
இவை என் சொந்த படைப்புதான் என்றும் இதற்கு முன்
எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்
இப்படிக்கு
ஹிஷாலீ .

சமயோசித புத்தி காரி ...!



மௌனத்தை மட்டுமே 
பரிசளித்துவிட்டு 
சம்மதத்தை 
சண்டைக்கு கொடுத்துவிட்டு 
செல்கிறாள் 
சமயோசித புத்தி காரி ...!


முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!



கணினிக்கேது
கட்டுப்பாடு
கண்ணகி பிறந்த
மண்ணில் கலவிக்கு
வேண்டும் கட்டுப்பாடு
அலைவரிசையில்
புலன் பெயரும்
அண்ணன் தங்கை
காதலுக்கு
வேண்டும் கட்டுப்பாடு
எளியவர் பயணத்தில்
வலியவர் கொள்ளும்
சில்மிஷத்திற்கு
வேண்டும் கட்டுப்பாடு
காக்கைக்கும்
தன் குஞ்சு
தாய் குஞ்சு
என உணர்த்தும்
அப்பாக்களுக்கு
வேண்டும் காட்ப்டுபாடு
ஏழைகளின்
கோமணத்தை
களைந்து
சாசனத்தில்
தோள் கொடுக்கும்
அரசியலுக்கு
வேண்டும் கட்டுப்பாடு
மக்காத நெகிழி 
மதுகுவலையில் 
குடித்து மடியும்
அஸ்தமனங்களின்
ஆண்மைக்கு 
வேண்டும் கட்டுப்பாடு
அங்கத்தை அளக்கும்
தங்கத்தின் மோகத்தை
தணிக்கும் சமூகத்திற்கு
வேண்டும் கட்டுப்பாடு
சர்வமத கூட்டனியில்
ஆதிகம் செலுத்தும்  
ஜாதிகளுக்கு 
வேண்டும் கட்டுப்பாடு
சமுகமே 
நீ பாடு நீ பாடு
தமிழர் பண்பாடு
நீ கூடு வெறும் கூடு
மரணித்தப்பின் எலும்புக்கூடு
இதை புரிந்து 
ஓடு நீ ஓடு
தமிழர் பண்பாட்டை
காக்க ஓடு ...!

குறிப்பு : -
இப்படைப்பு வலைப்பதிவர் திருவிழா 2015 -தமிழ் இணைய கல்விகல்வி கழகம் இணைந்து "மின்தமிழ் இலக்கிய போட்டிகள் 2015 க்காக எழுதப்பட்டது!
வகை (4) புதுகவிதை போட்டிகள்! வளர்ந்து வரும் உலகில் பண்பாட்டின் தேவை!
இவை என் சொந்த படைப்புதான் என்றும் இதற்கு முன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்
இப்படிக்கு
ஹிஷாலீ .

மகாகவி மாத இதழ் - செப்டம்பர் - 2015.



திசைக்கு ஒரு ஜாதி 
வழிகாட்டியது
தபால் காரனுக்கு 
என்றும் பழைய ஆறு 
புதுப்பொலிவுடன் 
அரசியல்வாதி 
முத்தான தமிழ் 
வெட்கப்பட்டுகிடக்கிறது 
சிப்பிக்குள் ...!
ஆங்காங்கே தெரிகிறது 
வறுமைக் கோடு 
வரைபடத்தில் ...!
யாருக்கு கும்பாபிஷேகம்
நைவேத்தியம் செய்கிறது 
மழை ...

விலையின்றி விற்கப்படுகிறது ...!



விலை கொடுத்து
வாங்கும்
ஒவ்வொரு 
மது பணத்திற்கு பின்னால்
விலையின்றி 
விற்கப்படுகிறது 
ஒவ்வொரு குடும்பங்களின்
கண்ணீர் துளிகள் ...!

நல்ல பார்வை ...!





கெட்ட உயிரா 
நல்ல பார்வையா 
என்று வினவும் 
நண்பனிடம் 
எப்படி உரைப்பேன் 
கெட்ட உயிரில் 
நல்ல பார்வையாக 
நான் இருப்பேன் என்று ...!

நினைவுகள் ...!



சத்தமில்லாமல் கொள்ளும் 

இரவுகளையும் 

யுத்தமில்லாமல் கொள்ளும் 

நினைவுகளையும் 

நித்தமும் மறுப்பதில்லை

இதயம் ...!

கதை சொன்ன பாட்டி ...!



ஒற்றைக் கனியை
புசித்த ஆதாமிற்கு
இரட்டைக் கனிகள்
எது எதனுடன் சேர்ந்து
சலித்து புளித்ததோ
இந்த வம்சம்
என வினவினாள்
கதை சொன்ன பாட்டியிடம் ...!

முடியும் வல்லரசாவது ..!



எல்லா
சட்டபுத்தகத்தையும்
திருத்த முயல்வதற்குள்
மதிப்பெண் கொடுத்துவிட்டது
சாதியற்ற ஒரு
சமூதாயத்தை
உருவாக்க முடியாது என்று
எல்லா
அகராதியையும்
புரட்டி பார்ப்பதற்குள்
இலக்கணம் வகுத்துவிட்டது
மதமற்ற ஒரு
மார்க்கத்தை
பெத்தெடுக்க முடியாது என்று
எல்லா
குலதெய்வங்களையும்
அலசி ஆராயிந்து
வரம் கேட்பதற்குள்
சாபம் கொடுத்துவிட்டது
பாலியலில் பாலாகும்
உலகத்திற்கு பாவ மன்னிப்பு
கொடுக்க முடியாது என்று
எல்லா
கட்சி தலைவர்களையும்
ஒன்று திரட்டி
ஒரு நாள் முதல்வர் பதவிக்கு
சம்மதம் பெறுவதற்குள்
மறுப்பு அளிக்கப்பட்டது
மறு நாள் சுயசரிதத்தை
 புகழ்ந்து பேச முடியாது என்று
இப்படி 
முடியாத ஒன்றை கொண்டு
முன்னேற நினைப்பதை விட
முடிந்ததைக் கொண்டு
முன்னேற முயற்சியுங்கள்
முடியும் வல்லரசாவது ..!

நெற்றி சுருக்கத்தில் ...!





எழுதப் படிக்க 

தெரியாதவள் முதல் 

நெருக்கத்தின் வெக்கத்தை 

நெற்றி சுருக்கத்தில்

எழுதி படிக்க வைத்துவிட்டாள் ..!

mhishavideo - 145