காதலும் விசம்மென்று ...!



பல்லி போல் 
துள்ளி ஓடுகையில் 
புரியவில்லை 
தீண்டிவிட்டால் 
காதலும்
விசமென்று ...!

என் இதயத்தில் ...!



பல முகங்கள் 
பாதிக்கும் 
கவிதையில் 
இவள் மட்டும் 
எப்படி 
ஒரு முகமானால் 
என் இதயத்தில் ...!

ஒரு காதலியின் டைரி ...!




மரத்தில் இருக்கும் 
இலையை 
மாடு மேய்ப்பவனால் கூட 
எண்ண முடியாத போது 
மனத்தில் இருக்கும் 
கவலையை மட்டும்  
எண்ணிப்பார்க்கிறேன் 
ஒரு காதலியின் டைரியில் ...!

அகிம்சை ...!


எழுத்தறிவுள்ள 

பணம் 

எழுத்தறிவற்ற 

ஏழையை  

இறைவனாக்கியது 

அகிம்சை ...!

ஹிஷாலியின் ஹைக்கூ,

இரு மன வானில் 
ஒரு மணக் கூடு 
காதலர் தினம் ...!

காட்டு பாலை அழித்து 
பாலித்தீன் பால் கறக்கிறது 
ஆடு மாடுகள் ...!


பன்னிரண்டு மணி நேர வேலையை 
ஒரு நொடியில் தின்றது
விபத்து ...!

பணத்தில் வெந்தாலும் 
ஜாதி 
பழைய சோறு தான் ...!

கற்றுக்கொண்டே இருக்கிறது 
அறிவு நிரம்பிய
அருவி ...!

பள்ளிக்கு போகாமலே
அல்லி கொடுக்கும்
மனம் ...!

பாலையில்
பால் சுரக்கும்
ஒட்டகம் ...!

விசிறிக்கு உதவிய 
பனை மரம் மொட்டையானது
வீட்டுமனையால் ...!

கலைந்தது 
தவம் 
மண்ணானது மலை ...!

விதைக்காமலே 
அறுவடை செய்கிறான்
பட்டதாரி ...!


தவமிருக்கும் மரங்கள் ...!





இரு துருவமாய் 
தவமிருக்கும் 
மரங்கள் 
இல்லறம் பெயராமலே 
தாய்மை பெற்றது 
காற்றாக 
பருவம் அடைந்து 
அறுவடைக்கு வந்தது 
மழை 
திரும்பிச் செல்லாமலே 
உயிர் பெற்றது 
குளம் குட்டைகளுக்கு
பாவாடை தாவணியாக 
பகலை தந்து 
இரவை அழைக்கும் 
நிலா 
இளைப்பாராமலே 
விடைப் பெற்றது 
கவிதையாக 
வேரை மறைத்து 
விரதமிருக்கும் 
பூக்கள் 
பூஜிக்காமலே 
வரம் பெற்றது 
விதையாக 
பாரி அலங்கரித்த  
கொடிகள் 
பின் பற்றாமலே 
பழி பெற்றது 
தேரை இழுத்து 
தெருவில் விட்ட 
கதையாக 
கனியை ஈர்த்த 
ஆதாம் ஏவாள் 
காதல் 
ஜாதியில்லாமலே 
முற்றுப் பெற்றது 
உலகப் பொதுமுறையாக
சறுக்கிய நொடியில் 
இளைப்பாறிடும் 
உயிர்கள் 
மரணிக்காமலே 
மோட்சம் பெற்றது 
மறு ஜென்மமாக  

சுட்ட சாம்பல் ...!



உன்னை 
சுட்ட சாம்பல் 
பொட்டை இழந்து தவிக்கும் 
எனக்கு 
விபுதியானது 
பூஜை அறையில்  ...!

பிரவரி 14 ...!




நாற்புறத்திலும் 
நாலயிரம் விதமான 
காதல் மலர்ந்தாலும் 

ஓராயிரம் காலத்திற்கு முன்பு 
மலர்ந்த 
சீதையின் காதலைப் போல் 
இனி எவருமுண்டோ 

உண்டென்றால் 
உணவுக்கு ஒன்று 
உறவுக்கு ஒன்று 
உடைக்கு ஒன்று என 
தேர்வு செய்வதைவிட 

உனக்கு ஒன்று அதுவே 
உலகுக்கு நன்று என 
தேர்வு செய்து பார் 
எல்லா நாளுமே பிரவரி 14 ...!




அமிலம் வீசுகிறாய் ...!




வெயில் அடிப்பதால் 
நிறம் மாறுவதில்லை சூரியன் ...

மலை அடிப்பதால் 
ஓட மறுப்பதில்லை ஆறு ...

அலை அடிப்பதால் 
அழுவதில்லை கடல் ...

புயல் அடிப்பதால் 
விசமாகவில்லை காற்று ...

இதயம் அடிப்பதால் மட்டும் 
ஏன் 
அமிலம் வீசுகிறாய் ...!

திருமதியாக வாருங்கள் என்று ...!


குடைக்குள் வந்த மழை 
எழும்பவில்லை 
எழுதி விட்டு போனது
நான் 
திரும்பும் பருவத்திலாவது 
திருமதியாக வாருங்கள் என்று 

தொட்டுச் செல்ல ஆசைபடுகிறேன் ...!




நீ விட்டுச்  சென்ற 
நினைவுகளை 
தொட்டுச்  சென்று 
பார்க்கையில் தான் 
நான் எட்டிச்  சென்ற 
வலி புரிகிறது  
இப்போது 
தொட்டுச் செல்ல 
ஆசைபடுகிறேன் 
நீ எட்டிச் சென்றுவிட்டாயே ...!

ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!




வருடம் தோறும் திருகல்யாணம் 

வருசையில் நிற்கும் 

முதிர் கன்னிகள்  ...!

mhishavideo - 145