ரூபனின் தீபாவளி கவிதை போட்டி - 2014




வாங்கிய பூக்களை எல்லாம் நீ 

வரும் பாதையில் தூதுவிட்டேன் 

பூ மனம் அறிந்தாவது இந்த 

பூவையை தேடி வருவாய் என்று 

ஓரப்பார்வையில்

ஒதுங்கி நின்று பார்க்கிறேன் 

மல்லு வேட்டி மைனரின் 

அழைகை ரசிக்க ...!


**************************************




நீ கிடைக்க மாட்டாய் 
என தெரிந்தும் 
இனிக்கிறது 
நினைவு 
சுகரர் இல்லை 
உவர்க்கிறது 
கனவு 
பிரஷர் இல்லை 
கசக்கிறது 
பிரிவு 
பி.பி இல்லை 
புளிக்கிறது 
மறதி 
காய்ச்சல் இல்லை 
உரைக்கிறது 
விழிகள் 
ஈரமம் இல்லை 
வெறுக்கிறது 
உதடுகள் 
ஊமையாகவில்லை 
மொத்தத்தில் ...
வைத்தியமாய் நீ இருப்பதால்
பைத்தியமாகவில்லை ...!


நான் மட்டுமே ரசித்ததால் ...!




நாவில் வடித்தக்

கவிதை ருசிக்கிறது 

நான் மட்டுமே

ரசித்ததால் ...!

எம் எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...!




ஆதி மனிதனின் விவசாயத்தை 
ஆராய்ச்சி மையமாக மாற்றிய அதிசயம் நீ 
புண்ணிய தீர்த்தத்தில் 
புலன் பெயரும் பொக்கிச விதை நீ 
துருவ நட்சத்திரங்கள் பருவமடையப் 
பாதை வகுக்கும் சூரிய புத்திரன் நீ 
அனல் பறக்கும் பூமியைக் 
குளிர வைக்கும் குலக் கொழுந்து நீ 
மண்ணையும் பொன்னாக்கும் மழை  நீரை 
வீணாக்காப் பருவ பயிர் நீ 
அறுவடையின் அவசியத்தை 
அச்சில் பொறித்த ஆலயமணி நீ 
பாமரரும் பஞ்சம் பெயரா வண்ணம் 
பல்  தொழில் சேவையாற்ற வந்த  அட்சயப் பாத்திரம் நீ  
காலத்தை அளந்து காலனையும் 
விரட்டியடிக்கும் காவியத் தலைவன் நீ 
அன்று கருவிலே அறிந்ததால் தான் என்னவோ 
பெயரிலே தெய்வமான நீ (சுவாமிநாதன் )
ஆயிரம் விருதுகள் பெற்றாலும் தன் 
அன்னை பெற்ற திரு உருவிற்கு ஈடாகுமா? 
என்ற புகழுடனே வாழ்க பல்லாண்டு 
வளர்க உங்கள் வேளாண் தொண்டு ...!

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!





விதை இல்லா விழுதொன்று 
வேரூன்றியது மண்ணில் 
அதற்கு ...
மழையெனப்  பெயரிட்டேன் 

நன்றிக் கடனாக ...

கிளையற்ற தாகம் 
மதமற்ற சேவை 
இனமற்ற பஞ்சம் 
மொழியற்ற பசி 

இவைகளை தாண்டி வாழும் 
காற்றையும் வளர்த்தது 

மனிதா ?
கருணைக்கு இலக்கணமான 
நீ 
என்ன செய்தாய் இந்த பூமிக்கு !

mhishavideo - 145