ஹிஷாலியின் ஹைக்கூக்கள் ...!



கற்பில்லை உனக்கு 
கதறுகிறது 
குழந்தை 

வெட்ட வெட்ட 
தளிரும் பயிர்கள் 
பெண்னின் வன்கொடுமை 

தாய் பாலில் கலப்படமோ 
கலங்கம் சுமக்கிறாள் 
பாரத தாய் 

அகிம்சை தான் 
சத்தியத்தின் 
கடவுள் 

காதல் 
கழுத்தின் 
அணிகலன் 

மறைந்த நினைவுகள்
உயிர் பெற்றது 
கவிதையில் 

அழும் குழந்தைக்கு 
ஆலகால விசத்தைப் 
புகுட்டினாள் அம்மா ..!

திறந்த வீட்டிற்குள் 
பரந்த உலகம் 
எமனை விரட்டியபடி !

ஒவ்வொரு மணித்துளியிலும் 
ஒளிந்திருக்கிறது 
பிறப்பின் மரணம் 

என்றுமே 
இனிப்பதில்லை 
கண்ணீர் பசி 

இயலாமை கூட்டத்தில் 
முயலாமை 
கதை ...!

சாலையில் பிணம் 
வணங்கியபடியே 
போலீஸ் வாகனம் ...!

இறந்த காலம் எதிர்காலம் 
கூட்டுப்பலன் 
புத்தாண்டு 

நாள்காட்டிக்கு பிறந்த நாள் 
இனிப்பு 
புன்னகை ...!

குடிகார அண்ணா
தேடினான் 
தங்கமான மாப்பிள்ளையை 

உயிருக்கு 
உத்திரவாதமில்லை 
உல்லாச விடுதியில் 

படிப்பறிவில்லை 
பட்டம் பெற்றோம் 
ஒன்பது 

கூண்டுக்கிளி 
சுதந்திரம் 
பொய்கள் ...!

அலையை 
பிடித்திக்கொண்டே 
படகின் பயணம் 

உடைகிறது பூமி
எழுந்தது 
பஞ்சம் 

உலகத்திரை 
கிழிந்தது 
நாகரீகத்தால் ...!

கோபுர தரிசனம் 
கொடுப்பனை இல்லா 
பிச்சைக்காரன் ...!

சிலையானாள் விலை மாது 
உயிர் பெற்றது 
பணம் ...!

அரை இரவு 
ஆவலுடன் காத்திருக்கும் 
கனவு 

இச்சை வயதில் 
கொச்சைப் பழக்கம் 
புகை மது மாது ...!

கை ஏந்துபவன் முன் 
தலை குனிந்தது 
நாணயம் ...!

மூன்று மனம் ...!


இரு மனம் சேர்ந்தால் காதல் 
ஒரு மனம் பிரிந்தால் தோல்வி 
மூன்று மனம் வாழ்ந்தால் திருமணம் 
நான்கு மனம் பிரிந்தால் பகை 
ஆனால் ...
தனி மனமுடன் 
பிணி வந்து கிடக்கிறது 
காதல் என்ற மூன்றேழுத்து மட்டும் ...!

சீக்கிரம் வாராயோ ?

எத்திசையிலும் 
ஒலிக்கும் 
காதல் மொழியில் 
எந்த மொழியோ 
என் தேவன் மொழி 
அந்த மொழி தேடியே 
அலைபாய்கிறது
தேவகியின் கண்ணின் விழி
பறவையாக வந்தால் 
இரையாவேன் 
பாட்டாக வந்தால் 
நிழலாவேன் 
உயிராக வந்ததால் தான் என்னவோ 
உயிர் வாழ்கிறேன் ...!
போனாக வந்தால் 
மீனாவேன் 
புத்தியாக வந்தால் 
தத்தியாவேன் 
அத்தை பெத்த அதிசயமே நீ 
அலை கடல் தாண்டி சீக்கிரம் வாராயோ ?

கடலோரக் காதலை ...!

எந்த 
காவியம் கொண்டு 
கோர்ப்பேன் 
உலகம் முடிக்காத 
காதல் மாலையை ...!

எந்த 
வானவில் கொண்டு 
தொடங்கி வைப்பேன் 
ஜாதி மத பேதமில்லா 
ஏழைக்காதலின் வெற்றியை !

எந்த 
தாய் பால் கொண்டு 
பிழைக்கச் செய்வேன் 
காமமில்லா 
கடலோரக் காதலை ...!

எந்த 
பத்திரிகை கொண்டு 
முடித்து வைப்பேன் 
மரணமே இல்லா 
அதிசயக் காதலை ..!

மரணம் ...!




பல நாள் 
அழுத சோகத்தை 
ஓர் நாள் இழக்கிறேன்
மரணத்தின் படுக்கையில் ...!

எத்தனை மரணங்கள் 
வந்து போனாலும் 
எழுதுகோல் இறப்பதில்லை 
எழுதியவன் விதி மட்டம் 
இறக்கிறது ...!

உயிரில்லா காற்று 
உயிர் வாழ்கிறது 
உயிர் உள்ள மனிதன் 
உயிர் இழக்கிறான் 
உலகம் வெறும் மரத்தால் 
நிரம்பிவிடக்கூடாது என்று ...!



ஹைக்கூ - காதலர் தினம்



இதயம் பறக்கவில்லை 


இடம் பெயர் (கிறது )ந்தது

காதல் ...!


mhishavideo - 145