ஹிஷாலியின் ஹைக்கூ ...!

தியாகிகள் எல்லாம் 
வியாதிகள் போல் 
வந்து வந்து  சாகிறார்கள்
நினைவு தினத்தன்று ...!

இடி மின்னலுடன் 
தீ மழை 
கைதட்டி சிரித்தனர் குழந்தைகள் ...!
அடை மழை 
எச்சரிக்கை செய்கிறது 
ஆம்புலன்ஸ் ...!
வெள்ளப் பெருக்கு 
உயிர்கோளம் பூண்டது 
முத்தம் ...!
எந்த கண்களுக்கு 
தெரிவதில்லை 
கண்ணீரும் கழிவென்று ...!
கனமழை 
லேசாகிப்போனது 
உழவன் மனம் 
கனமழை 
மகிழ்ச்சிவெள்ளத்தில் 
உழவன் ...!
வயலோரத்தில் 
அழிகிய மலர்கள் 
நிலைக்கவில்லை  நீண்டகாலம் ...!

மரணப் படுக்கையில் ...!

rose

இதயம் மட்டும் தூங்குகிறது 
என் 
இளமை மட்டும் 
இங்கும் அங்குமாய் 
பேசிக்கிகொண்டிருகிறது 
வேறு சில இதயங்களுடன் ...!

காதலும் காஷ்மீர் ...!

காதலும் காஷ்மீர் 

போலத் தான் 

எல்லை தாண்டினால் 

அழிவு 

காதலுக்கல்ல 

காவலருக்கே ...! 

சூப்பர் ஸ்டார் - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
விண்ணுலகின் தேவனுக்கு 

கிருஸ்மஸ் ஸ்டார் ...!

மண்ணுலகின் நாயகனுக்கு 

சூப்பர் ஸ்டார் ...!

நீண்டு கொண்டே போகிறது ...!

நீண்டு கொண்டே 
போகிறது 
நிலவைப் போல 
மனமும் ...!
சுருங்கிக்கொண்டே 
செல்கிறது 
பணத்தைப் போல 
பசியும் ...!
எழுந்து கொண்டே 
விரைகிறது  
ஜாதியைப் போல 
மதமும் ...!

தலையெழுத்து ...!
@ காதல் ...
நாள் இதழில் வரும் 
தலைப்பெழுத்து அல்ல 
நாளைய
தலைமுறையை 
எழுத போகும் 
தலையெழுத்து ...!


@ காதல் 
எதிர்முனையின் 
வாத்தியமல்ல 

எதிர்பவர்களை
வசப்படுத்தும் 
வர்ணஜாலம் ...!

மவுசு அதிகமோ ...!என்றோ 
களையெடுக்கப் போகும்
கோலாவை 
நிறுத்தத் துடிக்கும் மனமே 
இன்றே 
பயிராகும் 
மதுவை நிறுத்த 
மனம் வரவில்லையே 
ஏன் ?
கஜானாவிற்கு 
களையை விட 
பயிருக்குத் தான் 
மவுசு அதிகமோ ...!

நினைக்கின்றாயோ ?
எத்தனை முறை 
வெறுக்கிறேனோ 
அத்தனை முறையும் 
நினைக்கிறேன் உன்னை 
அப்படிஎன்றால் 
நீயும் அப்படிதானே 
என்னை வெறுக்க வெறுக்க 
நினைக்கின்றாயோ ? 

ஹிஷாலியின் ஹைக்கூ

album art


எந்த கண்களுக்கு 
தெரிவதில்லை 
கண்ணீரும் கழிவென்று ...!

கவிச்சூரியன் ஹைக்கூ இதழ் -26கையேந்தினான் 
ஊருக்கே படியளந்த 
ஏழை விவசாயி ...!

அப்பாவின் கைபேசி ...!

ஒளி இல்லா 

தீபாவளியை 

ஒலி மூலம் 

நிறைவு செய்தது 

அப்பாவின் கைபேசி  ...!

சிறு புன்னகை ...!
திருப்பிக் கொடுக்க முடியா கனவையும் 
திருப்பி எடுக்க முடியா கண்ணீரையும் 
திருப்பி எடுத்துக் கொடுத்துவிட்டாள் 
சிறு புன்னகையில் ...!

மனம் உண்டு ...!
மரணிக்கும் தருணத்தில் 
ஓர் கவிதை 
மனம் உண்டு 
மார்க்கமில்லை  என்றது 
பூக்கள் ...!
ஜெனிக்கும் தருணத்தில் 
ஓர் குரல் 
மகிழ்ச்சி உண்டு 
மரணமில்லை என்றாள் 
அம்மா ...!
வாழும் தருணத்தில் 
ஓர் முயற்சி 
பந்தம்  உண்டு 
பாசமில்லை என்றது 
பணம் ...!

கவிச்சூரியன் ஹைக்கூ இதழ் -24

air-pollution-causeway-bay

பாயும் வாகனத்தில் 

தூயக்காற்றும் துயரப்படுகிறது 

கண்ணுற்ற மனிதனால் ...!

விதியை மதியால் வெல்ல ...!விசித்திர உலகில் 
விதவிதமான முகங்கள் 
வியப்பில் 
வந்துகொண்டிருக்கிறான் 
எமதர்மன் 
எழுந்து நில்லுங்கள் 
விதியை மதியால் வெல்ல ...!

மனம் ...!

மனமே ...
மாதம் தரித்த முதல் 
மண்ணுடன் மறையும் வரை 
அழித்து அழித்து எழுதும் 
பேனாவில் 
நீ 
மட்டும் எப்படி 
அழியாமலே இருக்கின்றாய் ...!

முதிர் கன்னன் ...!

பன்னீரில் பருவமாகும் பூக்கள் 
விதைக்காக 
வெயிலில் முதிர்வடைவது போல் 
என்னில் பருவமான  காதல் 
விதைக்கப்படாமலே 
தோல்வியில் முதிர்வடைகிறது ...!

கவிச்சூரியன் ஹைக்கூ இதழ் -23


வாத்தியார் பையன் மக்கு 

எதிர் சொல்லானது 

ஆசிரியர் தினம் ..!


முண்டாசு கவிஞன்

நினைவு நாள் 

அவிழவில்லை ஜாதிவெறி ...!

அருவி இதழ் எண் - 21

வறுமையின் நிறம் சிவப்பு 
உணர்த்தியது 
கீழ்வானம் ...!
சாலையற்ற சோலை
அணிவக்கும் 
எறும்புகள் ...!
பூ ஒன்று 
புன்னகை பலவிதம் 
வாழ்க்கை தோட்டம்.. !

ரூபனின் தீபாவளி கவிதை போட்டி - 2014
வாங்கிய பூக்களை எல்லாம் நீ 

வரும் பாதையில் தூதுவிட்டேன் 

பூ மனம் அறிந்தாவது இந்த 

பூவையை தேடி வருவாய் என்று 

ஓரப்பார்வையில்

ஒதுங்கி நின்று பார்க்கிறேன் 

மல்லு வேட்டி மைனரின் 

அழைகை ரசிக்க ...!


**************************************
நீ கிடைக்க மாட்டாய் 
என தெரிந்தும் 
இனிக்கிறது 
நினைவு 
சுகரர் இல்லை 
உவர்க்கிறது 
கனவு 
பிரஷர் இல்லை 
கசக்கிறது 
பிரிவு 
பி.பி இல்லை 
புளிக்கிறது 
மறதி 
காய்ச்சல் இல்லை 
உரைக்கிறது 
விழிகள் 
ஈரமம் இல்லை 
வெறுக்கிறது 
உதடுகள் 
ஊமையாகவில்லை 
மொத்தத்தில் ...
வைத்தியமாய் நீ இருப்பதால்
பைத்தியமாகவில்லை ...!


நான் மட்டுமே ரசித்ததால் ...!
நாவில் வடித்தக்

கவிதை ருசிக்கிறது 

நான் மட்டுமே

ரசித்ததால் ...!

எம் எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...!
ஆதி மனிதனின் விவசாயத்தை 
ஆராய்ச்சி மையமாக மாற்றிய அதிசயம் நீ 
புண்ணிய தீர்த்தத்தில் 
புலன் பெயரும் பொக்கிச விதை நீ 
துருவ நட்சத்திரங்கள் பருவமடையப் 
பாதை வகுக்கும் சூரிய புத்திரன் நீ 
அனல் பறக்கும் பூமியைக் 
குளிர வைக்கும் குலக் கொழுந்து நீ 
மண்ணையும் பொன்னாக்கும் மழை  நீரை 
வீணாக்காப் பருவ பயிர் நீ 
அறுவடையின் அவசியத்தை 
அச்சில் பொறித்த ஆலயமணி நீ 
பாமரரும் பஞ்சம் பெயரா வண்ணம் 
பல்  தொழில் சேவையாற்ற வந்த  அட்சயப் பாத்திரம் நீ  
காலத்தை அளந்து காலனையும் 
விரட்டியடிக்கும் காவியத் தலைவன் நீ 
அன்று கருவிலே அறிந்ததால் தான் என்னவோ 
பெயரிலே தெய்வமான நீ (சுவாமிநாதன் )
ஆயிரம் விருதுகள் பெற்றாலும் தன் 
அன்னை பெற்ற திரு உருவிற்கு ஈடாகுமா? 
என்ற புகழுடனே வாழ்க பல்லாண்டு 
வளர்க உங்கள் வேளாண் தொண்டு ...!

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ...!

விதை இல்லா விழுதொன்று 
வேரூன்றியது மண்ணில் 
அதற்கு ...
மழையெனப்  பெயரிட்டேன் 

நன்றிக் கடனாக ...

கிளையற்ற தாகம் 
மதமற்ற சேவை 
இனமற்ற பஞ்சம் 
மொழியற்ற பசி 

இவைகளை தாண்டி வாழும் 
காற்றையும் வளர்த்தது 

மனிதா ?
கருணைக்கு இலக்கணமான 
நீ 
என்ன செய்தாய் இந்த பூமிக்கு !

இனிக்கிறது மழைத்துளி ...!

அழுவதை மறைத்து 
இனிக்கிறது 
மழைத்துளி 
அளவுக்கு மீறினால் 
அமுதமும் (அகிலமும்)
 நஞ்சென்று ...!

ஹிஷாலியின் ஹைக்கூ

பாட்டி அம்மாவசை 

படையலுடன் 

தாத்தாவின் கண்ணீர் ...!

கண் தானம் ...!விடியலைத் தந்து 

இருளில் மறையும் 

நிலவைப் போல ...
இருண்டவர் உலகம் 

விடியலைப் பெற 

கண் தானம் செய்வீர் ...!


மறந்து ...! - part 2

புயல் அடித்த 
சந்தோசத்தில் 
கரை புரண்டது அலை 
தந்தான் 
சுனாமி என்பதை 
மறந்து ...!
மழை அடித்த 
சந்தோசத்தில் 
இளைப்பாறும் தொழிலாளி 
தான் 
மண்ணோடு மண்ணாகப் போவதை 
மறந்து ...!
வெயில் அடித்த
சந்தோசத்தில்
தேன் கொடுக்கும் பூக்கள்
தான்
உதிர்ந்து போவதை
மறந்து ...!

மறந்து ...!

காற்றை அடைத்த 
சந்தோசத்தில் 
சிரிக்கிறது பலூன் 
தான் விழப்போவதை 
மறந்து ...!
மது அருந்திய 
சந்தோசத்தில் 
பறக்கிறது மனது 
தான் அழியப்போவதை 
மறந்து ....!

பாவியானே ...!

பாவியான என்னை 
பாவமாக மாற்றினாள்
பவி !
பரிதவித்தேன் ...

பாவி மகளே 
சாவியானதால் மீண்டும் 
பாவியானே ...!

ஹிஷாலியின் ஹைக்கூ

விரல் பிடிக்க ஆசை 
விழி பிழம்பில் 
நிலா 
வரைந்து விட்டு 
செல்கிறாள் 
வானவில்லாட்டம் ...!
உலக இசை தினம் 
கண்ணீர் அஞ்சலியில் 
கானா …!
மாராப்பிற்குள் இசை 
மயங்கி உறங்கியது 
குழந்தை ...!
கல்லை கடவுளாக்கி
கருவறையை 
கல்லாக்கிவிட்டான் ...!
விளை நிலத்தில் 
ஓர் கவிதை 
முதிர்கன்னி ...!
காலம் கடத்தியது காற்று 
தண்டனைக்குள்ளானது 
கடிகாரம் ...!
வியர்வை கலந்த மழை 
இனித்தது 
சிறுதுளி பெருவெள்ளம் 

ஹிஷாலியின் ஹைக்கூ - கீழ்வானம் ...!

 வறுமையின் நிறம் சிவப்பு 

உணர்த்தியது 

கீழ்வானம் ...!

விஜயின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் - 22.06.2014
நாற்காலியை விரும்பாத 
நட்சத்திரத்தின் தலைவா - நீ 
நாளை தீர்ப்பில் விழுந்து 
மாண்பு மிகு மாணவனாய் எழுந்தய்  - பின் 

காதலுக்கு மரியாதை தந்து 
கில்லியா எகிறிக் குதித்து 
துள்ளாத மனதையும் துள்ளவைத்த 
துப்பாக்கியின் வேட்டைக்காரனே - நீயே 
அழகிய தமிழ் மகன் அன்பின் காவலன் 
திருப்பாச்சி முதல் சிவகாசி வரை 
செந்தூரம் வீசிய மதுர ஜில்லாவின் நண்பனே 
குஷியான ரசிகர்களுக்கு
ருசியான  ஜாஜஹான் நீ 
நேருக்கு நேர் நின்று போரிடா
புதிய கீதையே  இன்று 

கத்தி முனையில் நின்றாலும் 
வெற்றி முனையை
பறந்தடிக்கும் குருவியே

போக்கிரியே பொறுமையும்
இளமையும் கொண்ட பத்ரியே
பாட்டுடன் கலந்த வசீகரனே  

பார் போற்றும் பல கோடி மக்களின் 
பகவதியே தல தளபதியே
வாழ்க பல்லாண்டு வளர்க திரையாண்டு 


பாக்யா வார இதழ் - ஜூன் 20-26 - 2014

உலர்ந்த கண்களோடு
மலர்ந்த பூக்களை விற்கிறேன் 
வறண்ட நாவிற்கு
ஒரு பிடி அரிசி கிடைக்காதா என்று
அறுந்த செருப்போடு
அறுந்து வரும் செருப்புகளைத்தைக்கிறேன்
இருண்ட குடிசைக்கு
ஒரு வாசல் கிடைக்காதா என்று
கிழிந்த புடவையும் 
மலிந்த முகமுமாய் 
வாகனத்தைத் தேடுகிறேன்
தகனம் செய்யும் தருணத்தில் வாய்க்கரிசிக்கு
ஒரு வழி கிடைக்காதா என்று
ஏதும் படிக்கவில்லை
அடையாளம் காட்டுகிறேன்
பழகிய தெருக்களில்
ஒரு வேளை பழைய சோறு கிடைக்காதா என்று
ஊனத்துடன் உழைப்பைக் 
கூட்டுகிறேன்
சலிப்பின் வியர்வை
ஒரு நாள் பிழைப்பை கெடுத்துவிடக் கூடாதென்று 
ஒண்டக் குடிசையில்லை
ஒய்யாரக் கூடத்தில்
கலவை சுமக்கிறேன்
பண்ட பாத்திரங்கள் எல்லாம்
ஒரு பாட்டில் மதுவிற்குள் மூழ்கிவிடக்கூடதென்று..!

கவிச்சூரியன் ஐக்கூ மின் இதழ்.எண் 18

உலக வறட்சி தினம் 
வாழ்த்தியது 
முத்த மழை ...!
உலக காற்று தினம் 
கை குலுக்கியது 
மரங்கள் ...!
உலக அகதிகள் தினம் 
மௌனமானது 
மெழுகுவர்த்தி ...!

பந்தம் ...!எத்தனை முறை 

கேட்டாலும் 

ஒரே முறை தான் 

கருமு(வ)றை ...!

என் பயணம் !
நேசிக்க யோசிக்க 
ஆயிரம் வழிகள் 
இருந்தாலும் ...

ஆயிரம் ஆசிகளுடன் 
முதல் வழி  பாதையிலே 
என் பயணம் !

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...