பூமி மங்கை ...!

காமம் பசியாகும் போது 
பழி வாங்குகிறது
பஞ்ச பூதங்கள் !
காமம் 
பக்தியாகும் போது 
பரவசமாகிறாள் பூமி மங்கை ...!

பருவங்கள் ...!

உலகத் தொகையும் 
உலர்ந்த சருகும் 
ஒன்று தான் !

என் பருவங்கள் 
மீண்டும் தளிர்த்து சருகாகும் 

உன் பருவங்கள் 
மீண்டும் தழைத்து வம்சமாகும் ...!

சிறந்த கண்கள் ....!

பழைமையை பழியாக்கும் 

புதுமையைவிட 

பாராம்பரியத்தை 

பாழக்கா நவீனமே 

சிறந்த கண்கள் ஆகும் ...!

கடலலை அலைகள் ...!

எத்தனையோ விதவைகளின் 

கண்ணீர் துளிகளில் தான் 

சுதந்திரம் பெற்றோம் 

என்று உணர்த்துகிறது 

டல லை அலைகள் ...!

அம்மாவாக அவள் ...!


அறாத ரணம் 

அவளின் நினைவுகள் 

ஆறடி சென்றபின்னும் 

அடங்கவில்லை 

ஆவியாக நான் 

அம்மாவாக அவள் ...!

சுவர் இருந்தால் தான்...!

இறக்கமற்ற மனதை 

இறங்கி இறங்கி காதலித்தேன் 

சுருக்கமாக சொல்லிவிட்டாள் 

சுவர் இருந்தால் தான் 

சித்திரம் வரையமுடியும் என்று ...!

சாதிக்க முடியவில்லை ...!

எந்த சாதி கொண்டும் 

சாதிக்க முடியவில்லை 

மூன்று பேத

மூடநம்பிக்கையற்ற 

உலகை ...!

பதியம் போட...!

செலவுகளை குறித்து 
வைப்பது போல் உன்னுடன்
செலவாடத்துடிக்கும் கனவுகளை 
குறித்து வைக்கிறேன் 
கவிதையில் !
என்றோ ஓர் நாள் 
பார்த்து படிப்பதற்காக அல்ல 
பதியம் போட...!

புதிய போர்களம் ...!

தினமும் சுத்தம் செய்கிறேன் 
என் இதயத்தை 
அதில் ...
அழுக்கான உன் நினைவுகள் மட்டும் 
புதிய போர்களமாய் 
புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது ...!

நானும் கடவுள் தான் ...!

தினமும் 
உயிர்த்தெழுகிறேன் 
காதல் சிலுவையை சுமப்பதினால்  
நானும் கடவுள் தான் ...!

நம் சுவாசக் காற்றில் ...!

உன் சுவாசத்தைக் கண்டு 
என் சுவாசத்தை 
உள் வாங்கினேன் 

நம் சுவாசக் காற்றில் 
உயிர் வாழும் காலத்தை 
நினைக்க ...!

நூறு கண்ட மும்பை திராவிடன் !

கடவுளின் முதலவன் 
கலைப்பையின் தலைவன் 
திராவிடன் !

திருக்குறள் உலகத்தில் 
திரவியம் தேடியவன்  
திராவிடன் !

ஆதம் ஏவாள் 
முதல் கருவறையில் வந்தவன் 
திராவிடன் !

நாட்டை ஆளும் 
இயற்கை கற்பூரம் 
திராவிடன் !

கோட்டைக்கு ஓட்டுக்கேட்கும் 
அமிர்த மந்திரம் 
திராவிடன் !

காற்றுக்கே 
கல்வி சலுகை ஈட்டுபவன் 
திராவிடன் !

முன் வந்து பின் தாங்கும் 
ஓய்வூதியமானவன் 
திராவிடன் !

வெற்றி தோல்விகளை 
எடுத்துறைக்கும் அகாரதி 
திராவிடன் !

பறைக்கு குருவானவன் 
திரைக்கு உயிரானவன் 
திராவிடன் !

சித்த மருத்துவத்தில் 
செத்துப் படைத்தவன் 
திராவிடன் !

முதல் சூரியன் 
பிறை நிலவில் விழித்த முகம் 
திராவிடன் !

அனாவில் அளந்து 
தினாவில் உயர்ந்து 
வரலாற்றுகு வழி காட்டுபவன்
திராவிடன் ..!

அனைத்திந்திய நாட்டில் 
ஆதி இன்றி  ஓர் அணுவும் 
அசையாது என்று வாழ்பவனே 
திராவின்  ....!

எங்கும் திராவிடன்
எதிலும் திராவிடன்
சங்கம் முழங்கும்
சாகித்ய தமிழனே நீ

முன்னூறு கண்ட
மும்பையில்
முழுமதியாய் சிறக்க
வாழ்த்துகிறோம் !


(குறிப்பு இது போட்டிக்காக எழுதியது தவறாக எண்ணவேண்டாம் குறையிருந்தால் மன்னிக்கவும் )


கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...