என்றும் உன் நினைவுகளுடன் !

உண்மை காதல் உலகை ஆளும் 
ஊமை காதல் உணர்வை கொள்ளும் 
அதையும் தாண்டி 
கடிகராமாய் துடிக்கிறேன் 
கடலலையாய் தவிக்கிறேன் 
காற்றாய் வசிக்கிறேன் 
கதிரவனாய் துதிக்கிறேன் 
கடவுளே தடுத்தாலும் 
கடுகாய் மரித்தாலும் 
விடை அறியா உலகில் 
விடுகதையாய் வாழ்ந்திருப்பேன் 
என்றும் உன் நினைவுகளுடன் !

முதல் மரியாதை - 1 to 4
@ 1. ஆதாம் ஏவாள் 
கை தட்டலில் 
உயிர் கொடுத்தது 
ஆப்பிள் ...!

@ 2. அந்த ஏழு நாட்களுக்கு 
அழகூட்டி பிறந்தது 
அன்னைக்கு முதல் 
ஆயுத எழுது ...!

@ 3. மரணத்தை வென்று 
மண்ணில் பிறந்த நான் 
அழுகிறேன் ஏன் தெரியுமா ?
மீண்டும் மரணத்தை 
ஒத்திவைக்க ..!

@4. எருமைக்கும் 
வறுமை வந்தது 
குளத்தில் தண்ணீர் 
வற்றியதால் அல்ல 
நீர் சந்துக்களின் 
முத்தம் வற்றியதால் !


பாசத்தைவிட பழியே ...!


உயர்ந்த இடத்திற்கு
சென்றால்
பாசத்தைவிட பழியே
அதிகமாகிவிடுகிறது பலருக்கும்
நான் வாங்கி தந்த பொருட்கள்
குப்பை தொட்டியில் இருந்து
என்னை பார்த்து கேலியாய்
சிரிப்பதை சொன்னேன் ...!

கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...