என் கவிதைக்கு மட்டும் ...!
காதல் வந்ததும் 

நானும் உலக 

அழகிதான் 

என் கவிதைக்கு மட்டும் ...!

எல்கேஜி முதல் எலும்புக்கூடு வரை ...!

சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை!


எல்கேஜி சாதி 
எலும்புக்கூடு வரை 
எரிகிறது ....
பின் எதற்கு 
வேஷம் !
அன்று 
இனம் கொள்ள 
சாதியைப் படைத்தான் 
இன்று 
இதயம் கொள்ள 
சாதியை வெறுத்தான் 
கோசம் போடும்
மொழியும் வழியும் 
பழியாகும் தேசத்தில் 
உதிக்கும் சூரியனும் 
உயர்ந்தவனில்லை 
உலவும் நிலவும் 
கூட தாழ்ந்ததில்லை - ஏன் 
அழியும்  
உயிர்களுக்கு மட்டும் 
இந்த ஆதங்கம் 
அத்தனையும் 
ஓர் நாள் 
அடங்கிவிடும் பணப் பாதங்கம் 
அய்யோ என்றாலும் 
ஆருயிர் திரும்பாது
அதற்குள் அறிந்துகொள் 
இதுவே ஆரம்பம்
அதுவே உலகின் ஓரின்பம் ...!

விஞ்ஞான உலகம் ...!

சாதியால் 
சலனங்கள்  முத்தெடுக்கிறது 
சடலங்கள் 
தத்தெடுத்தக் காதலுக்கு 
மரணப் பித்தாக 
வேட்டையாடிக் கொண்டிருக்கிறது 
விஞ்ஞான உலகத்தில் ...!

ஹிஷாலியின் ஹைக்கூ - காந்திகர்மம் தர்மம் 
கலந்த சிலுவை 
காந்தி ...!

அறிந்தும் அறியாமல் ...!

இருந்தும் அறியாத 
இதயத்தில் 

வருந்தும் மருந்தாய் 
வாழ்கிறேன் 

அறிந்தும் அறியாமல் 
வந்தக் காதலால் ...!அருவி ஐக்கூ சிறப்பிதழ் - 2013 ஓர் ஆய்வு

இயற்கையும் இயற்கை சார்ந்ததுமான '

அருவி ஐக்கூ  சிறப்பிதழ் - 2013 ஓர் ஆய்வு 

முனைவர் .க .இந்திரசித்து 

சமூக நோக்கு :

பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பிறகு மனிதன், சமூகம் என்ற நிறுவனத்துக்குள் வந்து சேர்ந்துள்ளான் .மனிதன் ஒரு சமுதாய விலங்கு ( Social Animal ) என்று கூறுவர் .

அனால் உற்பத்து உறவுகளும் உற்பத்திக் கருவிகளும் மனித சமுதாயத்திற்குள் பல்வேறு வகையான சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளன .சாதிச் சிக்கல் ,சமயச் சிக்கல்களில் மனிதன் சிக்கித் தவிக்கின்றான் .இச்சிக்கல்களைப் போக்குவதற்கான முன்னனிப் படைவீரர்களாய் முன்னே நிற்பவர்கள் படைப்பாளிகளே . நூற்றுக்கணக்கான குழந்தைகள் சத்துணவின்றியும் பாலின்றியும் இறந்து போய் விடுகின்றன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன . ஆனால் மனிதர்கள் உணவுப் பொருளை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணடிமைத் தனத்தின் காரணமாக பெண் குழந்தைகளைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை ,

'கல்லுக்கு பாலாபிஷேகம் 
பெண் சிசுவிற்கு 
கள்ளிப்பால் '

என்ற கவிதையில் இசாலி (ஹிஷாலீ) எடுத்துரைக்கின்றார் (ப.26).

சமயத்தின் பெயரால் ,மூட நம்பிக்கையின் விளைவால் ,வெறும் கற்களுக்கு பால் முழுக்கு நடைபெறுவதையும் , பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுப்பதையும் இன்றைய நடைமுறை வாழ்வில் காணலாம் .ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடாகவே பெண் குழந்தைகளுக்கு 'கள்ளிப்பால் 'கொடுக்கும் வழக்கம் நிலவுவதைக் காணலாம் . இக்கவிதையில் பெண்ணியப்பார்வை மிகவும் அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது . நாணற்காடனின் 'செருப்பு தைப்பவனின் உறக்கம் ' (ப.73) என்னும் சொற்களில் வெளிப்படும் கருத்தாடல் தலித்தியத்தின் தேவையை வலியுறுத்துகிறது . பொருந்து நிறுத்தத்தின் ஓரத்தில் அன்றாடம் நாம் காணும் செருப்பு தைப்பவர்களின் அவலக்காட்சியை சமூக விடுதலைச் சிந்தனையோடு வெளிப்படுத்தியுள்ளார்.இந்தச் சமூகம் பல்வேறு வகையான சமூக அநீதிகளைக் கொண்டுள்ளது . எனவே 'சமூகநீதி ' தேவை என்னும் கருத்தோட்டத்தை இக்கவிதை வெகு நுட்பமான கவிதை மொழியில் எடுத்துரைக்கின்றது (ப.73). சமுதாய விடுதலைக்கும் தலித் விடுதலைக்கும் இத்தகைய கவிதைகள் அரண் சேர்க்கும் என்று உறுதியாகக் கூறலாம் . இன்றைய சமுதாயத்தில் 'பசி ' என்பது மாபெரும் வாழ்க்கைச் சிக்கலாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் பலகோடி மனிதர்கள் பசியால் வாடித் துன்புற்று வருகின்றனர் . அதே வேளையில் சிலநூறு பேர் வசதியில் வாழ்ந்து செழிப்பதையும் பார்க்கலாம் . இந்த இருவேறு வார்க்கங்களுக்கிடையே நடைபெறும் போராட்டத்தைத் தான் காரல் மார்க்சு 'வர்க்கப்போர் ' என்று குறிப்பிட்டார் .

மனிதர்கள் , பசித்த மனிதற்குக்கு உணவு தர மறுக்கிறார்கள். ஆனால் பசித்த சிறுவனுக்கு மரங்கள் பலன்களை உதிர்த்துத் தருகின்றன (ப.17) என்று ச.முருகேசு கூறுவதன் வாயிலாக மனிதர்களுக்கு இல்லாத மனிதநேயம் மரங்களுக்கிருப்பதை உணர்த்துகிறார். அதே வேளையில் காற்று கிளைகளை உலுக்குவதையும் , அதிலிருந்து விழும் பழங்களை பசித்து சிறுவன் கையேந்திப் போருவதையும் அழகான படிமக்காட்சி ஓவியமாகக் கவிஞர் சுட்டிக் காட்டுகின்றார் .95 கவிஞர்களும் ஒரே அலைவரிசையில் சிந்தித்திருப்பது போல் தோன்றுகிறது. அனைவருமே 'இயற்கையும் இயற்கை சார்ந்த ' செய்திகளையும் கவித்துவம் வழிய வழிய கவிதையாக்கியுள்ளானர். வானம் பாடிக் கவிஞர்களுக்கு    'மார்க்சியம் ' பின்புலமாக இருந்ததைப் போல் , இவர்களுக்கு இயற்கை பின்புலமாக இருந்துள்ளது. இயற்கையை தனித்து பாடுவதிலும் சரி இயற்கையை சமூகப் பின்புலத்தோடு படைப்பதிலும் சரி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.  முயன்று ,தொகுத்து ,அழகான அருவி இதழாக வெளிக்கொண்டு வந்துள்ள காவனூர் ந .சீனிவாசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .ஐக்கூ இலக்கிய வரலாற்றில் இனிமேல் அ .ஐ .(அருவி ஐக்கூ ) சிறப்பு இதழுக்கு முன் என்றும் அ .ஐ .(அருவி ஐக்கூ ) சிறப்பு இதழுக்குப் பின் என்றும் பேசும் காலம் வரும் . வானம் பாடிக் காலம் என்றும் இரண்டாகப் பிரித்துக் கூறுவது வழக்கம் . இன்றைய காலத்தை 'அருவிக்காலம் ' என் அழைக்கலாம் என்பதற்குரிய அனைத்து அடையாளங்களும் இத்தொகுப்பில் காணப்படுகின்றன.


அருவி இதழுக்கும் முனைவர் .க .இந்திரசித்து அவர்களுக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன் !
இசை படித்தாள் ...!
இசைக்கு அன்னை 
இறைவனா இதையமா 
என்றாள் ...

இரண்டையும் 
சேர்த்துப் படைத்த 
நம் அம்மா என்றேன் 

இதழ் விரித்து 
இசை முடித்தாள் - என்றும்
பல்லவியும் சரணமுமாய்
சங்கமிப்போம் 
நம் கணங்களில்  ...!வெக்கத்தில் தலை குனிந்தாள் ...!
எதிரியாய் கலமிரங்குகிறேன் 
உன் முதல் 
எழுத்தை ஆக்கிரமிப்பு செய்ய 

தவணைத் தொகையாக 
என்ன தருவாய் என்றேன் !

தலைவனாய் வருகிறேன் 
பின் எதற்கு தவணை என்றதும் 

வெக்கத்தில் தலை குனிந்தாள்
சொர்க்கத்தில் எனை மறந்தேன் ...!


அருவி இதழ் எண் - 17 துரத்தும் கொடுமைகள் 
ஓய்வெடுக்கிறது 
    கவிதையின் நிழலில் ...!    னைவரும் 
    பிரம்மாக்கள் 
   வாழ்க்கை நாடகம் ...!கொலுசு - ஹைக்கூ Aug - 2019

மழை ஓய்ந்த சப்தம்  வாசற் கதவைத் திறக்கையில்  வானில் ரங்கோலி கரையில் பூ வழி நெடுகிலும் உ...