காதலர் தினக் - ஹைக்கூக்கள்

புன்செய் காதல்
நன்செய் யானது 
காதலர் தினத்தில்


இரு மனங்களுக்கு 
தீக்‌ஷை
காதலர் தினம்


காதலர் தினத்தில் 
வானவில் 
மகிழ்ச்சில் காதலர்கள் 


வரத்திற்கில்லை 
காதலர்தினம் 
தவத்திற்கே ...!


ஒரு இதயத்தை கொடுத்தேன்
பல இதயங்கள் வருந்த 
"தர்ம "சங்கடம் "


வனவாசக் காதலுக்கு 
வளர்பிறை 
காதலர் தினம்


கொடுப்பது எடுப்பதும் 
ஒரே சந்தையில் 
காதலர் தினம்


ராமன் தேடிய சீதை 
நலுங்கு 
காதலர் தினம் 


பெற்றோருக்கு
வௌவாலானது 
காதலர்  தினம் 

4 comments:

 1. படங்களுடன்... அமர்க்களம்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா

   Delete
 2. பெற்றோருக்கு
  வௌவாலானது
  காதலர் தினம் ...!! nice...

  ReplyDelete
  Replies
  1. அன்பு நன்றிகள் அக்கா

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு