நாட்டை கெடும் குடி...!




அலுப்புக்கு குடிப்பவன்
அணுஅணுவா சாகிறான்
அந்தஸ்துக்கு குடிப்பவன் - பெண்
அடிமையாகி வாழ்கிறான்

எத்தனையோ குடிகாரன்
எண்ணத்திலே சிறக்கிறான்
எல்லாம் அறிந்தவனோ - உலகை
ஏமாற்றக் குடிக்கிறான்

குடி குடி
நாட்டை கெடும் குடி
நல்லவர் வீட்டைக் கெடுக்கும் குடி
குடி குடி

அஞ்சிக்கும் பத்துக்கும்
மாடாய் உழைக்கிறான்
அஞ்சியவர் முன்னே நின்று
அசிங்கமாய் பேசி நடிக்கிறான் 
அடுத்தவர் முகம் சுழிக்கும்
அளவிற்கு நடக்குறான்

படித்தவனும் குடிக்கிறான்
படிக்காதவனும் குடிக்கிறான்
பணக்காரனும் குடிக்கிறான்
பஞ்சப் பரதேசியும் குடிக்கிறான்

குடி குடி
நாட்டை கெடும் குடி
நல்லவர் வீட்டைக் கெடுக்கும் குடி
குடி குடி

கொடுத்து வாழும் பண்பை மறந்து
குடித்து வாழ்கிறான்
பாரில் விழுந்து சாகிறான்
பாலியில் கொடுமையில்
மனித மிருகமாகிறான் 

மங்கையும் தங்கையும்
தவறாக் காட்டும்
மதுவை அழிக்க மறக்குறான் 
மானம் காக்கும் மாந்தர் முன்னே
மருகி மருகி உருகிறான்
தன தவறை குறைக்க வக்கீல்
காலில் விழுந்து மடிகிறான் 

குடி குடி
நாட்டை கெடும் குடி
நல்லவர் வீட்டைக் கெடுக்கும் குடி
குடி குடி...!

அருவி இதழ் எண் - 15



வனவாசத்தில் 
வானவில் 
சீதா ....ராமனைத் தேடி ...!

தகுதி தராதரம் 
பார்ப்பதில்லை 
மருந்துகள் ...!

நட்சத்திரங்கள் 
பூமிக்கு வருகை 
தீபாவளி ...!



முக்கோணப் பயணம் ...!




     இரு துருவங்கள் 
     இணைந்தது 
     மூன்றாம் துருவத்தில் 

    இது தான் 
    முறிந்த காதலர்களின் 
    முக்கோணப் பயணம் ...!

வெற்றிக் கோலம் ...!



     பல்லிச் சுமை 
    பள்ளிச் சுவற்றில் 
    இறக்கி வைத்தால் 
    இறந்த காலம் 
    ஏற்றி வைத்தால் 
    வெற்றிக் கோலம் ...!



வரதச்சனை ...!



   ஆண் துணை 
   ஆண் துணை 
   என்றது சமூகம் 
   ஆகாயம் வரை 
   ஆஸ்தி கொடுத்தால் மட்டுமே ..!


சொட்டும் மருந்து ...!




    பட்ட இதயத்தின் 
   அரு மருந்து 
   கண்களில் 
   சொட்டும் மருந்து ...!



முரண்பட்டது சேலையில் ...!






    தாவணிக்குள் 
   புதையுண்ட காதல் 
   முரண்பட்டது 
   சேலையில் ...!


நூல் இடைவெளியில் காதல் ...!




    மீசை குத்தி 
   ஆசை தைத்தது 
   நூல் இடைவெளியில் 
   காதல் ...!



ஜாதி நாகம் ...!




ஆயிரம் தலை பாம்புகள் 
ஆட்கொண்டது எங்கள் 
காதலை 
துக்கத்தில் உயிர் 
துறந்தப் பின் 

ஆகா 
இரத்தம் ஒன்று 
சித்தம் இரண்டே என்று 
உணர்ந்த இதயம் 
திருந்தவில்லை 
மீண்டும் 

துளிர் விடும் தளிர் போல் 
நாக்கை சுழட்டி 
படமெடுத்துக் கொண்டே 
சீண்டுகிறது ஜாதி நாகம் ...!


விவசாயத்திற்கு உயிர் கொடு...!




ஜாதி மதம் இனம் மொழி 
இவற்றால் அழியும் 
தீவிரவாதத்தை விட 

நீர் நிலம் காற்று ஆகாயம் 
இவற்றால் வரும் 
தீவிரவாதம் 
வெகு தொலைவில் இல்லை 
விழித்துக்கொள் மனிதா 

நீ 
அனைத்துண்ணும் உணவிலும் 
அழிவு காத்திருக்கிறது 
அதற்கு முன் 

செயற்கை 
விஞ்ஞானத்தை மரணித்து 
இயற்கை 
விவசாயத்திற்கு உயிர் கொடு...!

கண்ணோடு காடுகள் ...!



கண் மலை பறவைக்கு
இமை இலைக் 
காடானாய் 

இன்பத்திலும் துன்பத்திலும் 
இடியுடன் கூடிய 
மழையானாய் 

காய் கனியுடன் கலந்து 
கவியானாய் எங்கும் 
காலங்கள் பூத்திடும் 
காற்றானாய் ...!

மொழியுடன் கலந்து 
இசையானாய் எங்கும் 
மூச்சாய் வாழ்ந்திடும் 
இறையானாய் ...!

இயற்கை எழில் மிகும் 
வனமானாய் எங்கும் 
நீயே உயிரின் 
முதலானாய் ...!

மண்ணேடு காடுகள் 
மறைந்து வீடானால் 
கண் மலை எங்கே 
பேசும் இமை மழை எங்கே 
சொல் சொல் மானிடா...? 





சொர்க்க வாசலில் ...!




மிதியடி போல் 
தேய்கிறேன் உன் 
மின்னல் பார்வையில் 

பதிலடி தந்து 
பாலைவனமாக்கி விடாதே 
பெண்ணே 

சோலைவனம் போல் 
வாசம் வீசுவோம் 
சொர்க்க வாசலில் ...!

தமிழே தமிழே ...!




காதின்றி குரலில்லை தமிழே - எங்கும் 
காணொளியில் வாழ்கின்ற தமிழே 

பந்தமில்லை பாசமில்லை தமிழே - எங்கள் 
பாரினிலே பழமை வாய்ந்த தமிழே 

அவ்வை மொழி அடுக்கு மொழித் தமிழே - எங்கள் 
ஆயுசுக்கும் அறிவூட்டும்  தமிழே 

செப்பு மொழி சேவை மொழித் தமிழே - எங்கள் 
சிரசினில் நாட்டியமாடுகின்ற தமிழே 

வயதுமில்லை வாரிசுமில்லை தமிழே - எங்கும் 
வாழ்வாங்கு வாழுகின்ற தமிழே 

இனியா!



இருவருக்கு ஒருவராய் எங்கள்  
இதயத்தில் குடி புகுந்தவளே 

கனியமுது  கல்வி கற்று 
கடலமுது  நன்றி பற்றி 
சொல்லமுது நாட்டினிலே பெயர் 
சொல்லும்மளவும் சிறக்க 
வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு 

இனியா!




நீயும் காதலித்துப்பார் ...!




அதிகம் அழைத்தால் 
ஆபத்து என்று 
அறிவியல் சொல்கிறது 
மச்சான்...

எதிர்காலப் பயித்தியத்தை விட 
காதல் பைத்தியமே 
சிறந்த வைத்தியம் 
நீயும் காதலித்துப் பார் ...!

மகளிர் தின வாழ்த்துக்கள் ...!



மரணத்தில் பிறந்து 

ஜனத்தில் சிறந்து 

உலகத்தை வெல்கிறாள் 

பெண் ...!






சோதனையை சாதனையாக்கும் 

புண்ணிய நாட்டில்

சரித்திரம் படைக்கும் பெண்கள் 

சாமானியர்கள் ...!


( அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் )


இவளா...?



இவள் தான் 
என்னுயிர் என்றதும்  
காதலாகி கசிந்து 
காணுமிடமெல்லாம் 
ஒழுகியது அன்பு!

இவளா...? 
என்றதுமே 
ஜாதியில் மடிந்து 
சமாதியானது காதல் !


வீட்டுக்கொரு மரம் வளர்ப்பீர் ...!




கி.மூ கி.பி
மரணம் மரங்களாய் 
வரம் பெற்றது 

வானை மறைத்து 
வாழ்க்கை நடத்தும் 
சுவருக்கு கதவாய் 

அடுப்பெரித்து 
அமுதம் சுரக்கும் 
நஞ்சுக்கு விறகாய் 

கல்விக்கண் திறக்கும் 
மண்ணின் மைந்தர்கள் 
அமரும் தவமாய் 

வாணிகம் செழிக்க 
வறுமை ஒழிக்க 
தாலாட்டும் கப்பலாய் 

கண்கள் தெறித்து 
கலைகள் செதுக்கும் 
அழகின் பொருட்களாய் 

பூக்கும் காய்க்கும் 
பூகம்பத்தை தடுக்கும் 
மாற்று மருந்தாய் 

வில்லம்பும் பூட்டி 
விரகல் பேசும் 
வீரத்தின் சிலம்பாட்டமாய் 

தவிலும் நாதமும் 
மணந்த வீணையில் 
இன்னிசைப் புல்லாங்குழாய் 

மலைக்கு கிரீடம் சூட்டி   
மாறும் காற்றுக்கு  
தாகம் தீர்க்கும் மழையாய்  

தூசி முதல் துரும்புவரை 
வலம் வரும் காடுகள் 
வறண்ட நிலமாய் நிற்கிறது 

இறைவன் தந்த கலையை 
இதயமுள்ள மனிதன் அழிக்கலாமா ?
மக்களே மாறுங்கள் 
மரணம் நெருங்குகிறது 

நாமும் அடுத்த ஜனனத்தில் 
மரமாகலாம் 
வேரை அறுக்காதீர் 
வீட்டுக்கொரு மரம் வளர்ப்பீர் ...!


பழமா காயா...!


ஒரு முறை காயம் பட்ட இதயம் 
மறு முறை தாயம் போட்டு பார்த்தது 
பழமா காயா என்று 

பகை பாம்பு பழி வாங்கும் முன் 
இன்னொரு பகடைக்காய் 
பதம் பார்த்தது இதயத்தை 

அகம் பார்க்க ஆசைப்பட்டு அடுத்த 
சோவியை  சுழட்டினேன் 
அதிஷ்டம் அவன் பக்கம் 

விரத்தியில் விழித்தெழுந்தேன் 
எல்லாம் மாயே என்று !






காதலர் தினக் - ஹைக்கூக்கள்





புன்செய் காதல்
நன்செய் யானது 
காதலர் தினத்தில்


இரு மனங்களுக்கு 
தீக்‌ஷை
காதலர் தினம்


காதலர் தினத்தில் 
வானவில் 
மகிழ்ச்சில் காதலர்கள் 


வரத்திற்கில்லை 
காதலர்தினம் 
தவத்திற்கே ...!


ஒரு இதயத்தை கொடுத்தேன்
பல இதயங்கள் வருந்த 
"தர்ம "சங்கடம் "


வனவாசக் காதலுக்கு 
வளர்பிறை 
காதலர் தினம்


கொடுப்பது எடுப்பதும் 
ஒரே சந்தையில் 
காதலர் தினம்


ராமன் தேடிய சீதை 
நலுங்கு 
காதலர் தினம் 


பெற்றோருக்கு
வௌவாலானது 
காதலர்  தினம் 

கடலலை போல் காதலர்கள் ...!



கடலலை போல் காதலர்கள் 
குவிந்த மணலில் காதலலைகள்  உண்மை
கரைகள் மட்டும் பொய்களாகி  
கழுவிய நொடியில் தழுவிய 
கணங்கள் ரணங்களாய்  மாறி 
கரைதனிலே ஒதுங்கும் 
நுரைகளாய் பெருகுகிறது காதல் !

அணைகள் தந்த உறவுகள் எல்லாம் 
அழிவாக எண்ணுகிறது அங்கே 
ஆதரிப்போர் யாருமின்றி தவிக்கையில் 
அனாதையாகிறது காதல் 
அழிந்தும் பிழைக்கிறது 

வலிகளோடு விழிகள் கோர்கையில்  
மொழிகள் இல்லை இன்று 
வரவுகளோடு செலவுகளை பார்க்கையில் 
நிரந்திரமில்லை காதல் 
நினைவுகளுமில்லை 

உண்மையான அன்பிற்கில்லை 
ஒரு முறைக் காதல் அதை 
உணர்ந்தபின்பும் திரும்பவில்லை 
தலைமுறைக் காதால் 

ஒரு முறை தான் காதல் எனது 
தமிழர் பண்பாடு அந்த ஒன்றுடன் 
பூச்சியம் சேர்வது தான் காதல் பண்பாடு 
என்றது இளமையும் முதுமையும்  



mhishavideo - 145