(?!,. )கவிதை ...!!


நீ நானாகி
நான் நீயாகி நம்
வேதியல் மாற்றம்

வேரூன்றிய காதல் வெப்பத்தில்
என் கண்ணில் உன்னை
காணும் போது நாணத்தில்
கேள்வி குறியாய் குனிந்தேன்

மீண்டும் தொடர் காவியமாய்
உன் தொடரலையில்
விடாமல் பேசி தொடாமல்
தந்த காதல் வைரஸில்

பட்டும் படாமலும் கட்டி தவழும்
தொலைதுர முத்தத்தில்
துளைந்து போன மனதை
கண்டு ஆச்சிரிய குறியாய்
நிமிர்ந்து நின்றேன்

மனமே பண அலையாய் மாறும்
காதல் நல்ல குண அலையாய்
கரைசேரும் தருணத்தில்

மத அலையாய் தடுக்கும்
பந்தத்தை கண்டு
அரைப்புள்ளியாய் திகைத்தேன்

உயிரே இதை கண்டு
அஞ்சாமல் காதல் வெற்றிக்கு
கை கொடுக்கும் முற்றுப்
புள்ளியாய் முடிவெடு பின்
சேருவோம் காதல் சொந்தத்தில் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...