என் சொந்தம் ஈகரை ...!


நீருக்கு கடல் சொந்தம்
நிலத்திற்கு உயிர் சொந்தம்

வானுக்கு நிலவு சொந்தம்
வாழ்க்கைக்கு உணவு சொந்தம்

சந்தோசத்திற்கு துன்பம் சொந்தம்
சாதனைக்கு தோல்வி சொந்தம்

அரசியலுக்கு மாற்றம் சொந்தம்
அமைதிக்கு வெற்றி சொந்தம்

கல்விக்கு காசு சொந்தம்
கற்பனைக்கு கவிதை சொந்தம்

உலகுக்கு மக்கள் சொந்தம்
உறவுக்கு பிறப்பு சொந்தம்

இயற்க்கைக்கு அழகு சொந்தம்
இரவுக்கு பகல் சொந்தம்

தந்தை தாயிக்கு திருமணம் சொந்தம்
தலைமுறைக்கு உருவம் சொந்தம்

பேனாவிற்கு எழுத்து சொந்தம்
பெண்மைக்கு தாய்மை சொந்தம்

காதலுக்கு காலம் சொந்தம்
கடவுளுக்கு கடமை சொந்தம்

விதிக்கு முடிவு சொந்தம்
வீம்புக்கு அழிவு சொந்தம்

நடைக்கு பாதம் சொந்தம்
நட்புக்கு பாசம் சொந்தம்

பயணத்திற்கு சாலை சொந்தம்
பாதைக்கு திசைகள் சொந்தம்

மலருக்கு சூரியன் சொந்தம்
மாலைக்கு நார் சொந்தம்

பணத்திற்கு லஞ்சம் சொந்தம்
பாரதத்திற்கு சுதந்திரம் சொந்தம்

எனக்கு(எங்களுக்கு ) ஈகரை சொந்தம்
என்படைப்புக்கு(எங்கள் படைப்புக்கு ) வாழ்த்தும் இதயங்கள் சொந்தம் !No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...