நானே சிறந்தவள் ...!


காற்றைவிட நான் தான்
சிறந்தவள் ஏன் தெரியுமா ?
எனக்காக உன் மூச்சை
தியாகம் செய்தாயே ....!

அழுக்கு பிறவியான என்னை
அழகு படுத்தி ரசித்தாயே
அன்றே இறந்து பிறந்தேன்
உன் இதயத்தில் நான்
முதலிடம் பெறுவதால்...!

கருவேலங் காட்டில் கால்
பதித்த என்னை
உன் கருவறைக்கு
அன்னையாக்கி காதல்
உறவறைக்கும் உயிர் தந்தாயே

அறியா பள்ளியும்
அணையும் முல்லையும்
வாசம் வீசும்
வாழ்க்கை தோட்டத்திற்கு
வேறாய் தந்தாயே...!

சொல்லிய ஆசைகள் எல்லாம்
சொல்லாமல் சொல்லியும்
அள்ளிய புன்னகையில்
அன்பை தந்து ஆசி தந்து

என்னொரு முகம்
மன்னொரு பூமியில்
தன்னொரு பிறவியாய் மாறி
வன்னொரு நிலவாய்
வழி நடத்தும் மன்னனே
நானே சிறந்தவள்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...