இயற்கை ...!


அதிரும் வானை
அடக்கும் நிலவே நீ
உருளும் இரவில்
உதிரும் விண்மீன்களாய்

பகிரும் பாரில்
பதிக்கும் ஒளியாய்
வண்ண அழகில்
வாழ்ந்த மேகங்கள்

அலை அலையாய்
அசையும் நிழலில்
சூரியன் மயங்கியதால்
சூறாவளி காற்றினிலே

சிரிக்கும் கிளைகள்
சிற்றிலை தென்றலாய்
மயிலின் வண்ணத்தில்
மாலை நடனங்கள்

சோலை எங்கும்
சேலையாய் பூத்த
இயற்கை கனிகளை
இசைத்துண்ணும் பறவைகள்

வழிந்திடும் நீரில்
வாய்வைத்த எச்சாற்றில்
தங்கவண்ண தாமரைகள்
தானுறங்கும் வண்டுகளை

தேன்னுண்டு செல்வதால்
தேவதையின் மைவிழிகள்
யாகமென்னும் கூட்டினிலே
யாழவள் அமர்ந்திருக்க

மான் விழி கொண்ட
மக்கள் வெள்ளம்
ஓர் மொழியாய்
ஒன்று கூடிவாழ

உலகை படைத்தான்
உமையவளின் சரிபாதியானவன்
இயற்கையும் அழகுண்டோ
இதற்க்கு ஈடு எவையுண்டோ

செயற்கையும் அழகிலே
செஞ்சிலுவை மக்களாய்
சிதைந்து விடாமல்
சீர்பட செம்மைபடுத்துங்கள்

என்று சொல்லாமல்
சொல்லும் அழகே அழகு
நம் இயற்கை அழகு....!


2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145