பதினாறு சொந்தங்கள் ...!


பதினாறு சொந்தங்களும்
பரிமாறும் தருணம் - இதோ

காற்றின் மூச்சில் கைகள்
கோர்க்கும் தாலி
முதல் சொந்தம்

கட்டை விரல் அருகில்
மெட்டி சத்தம்
இரண்டாம் சொந்தம்

பொன் மான் கழுத்திலே
புத்தாடை மோகத்தில்
மாலை மாற்றும்
மூன்றாம் சொந்தம்

ஒளி விடும் கருவியின்
முன் படம் பிடிக்கும்
நாணத்தில் சிவக்கும் வெக்கம்
நான்காம் சொந்தம்

ஐவிரல் கோர்த்து
அக்கினி வளம் வருவது
ஐந்தாம் சொந்தம்

பாலும் பழமும்
பகிர்ந்துண்ணும்
பாசம் ஆறாம் சொந்தம்

தன் வீடு விட்டு
பெண் வீடு செல்லும்
மறு வீடு ஏழாம் சொந்தம்

எட்டு வைத்து நெற்றி
பொட்டு வைத்த வாசலில்
நிறை நாழி கால் தட்டுவது
எட்டாம் சொந்தம்

வகிறார உண்ட பின்
வாயாடும் நலுங்கில்
நயம் பிறக்கும் புன்னகையில்
ஒன்பதாம் சொந்தம்

நீ வேறு நான் வேறு
என்றில்லாமல்
நாம் ஒன்றே என்றது
பத்தாம் சொந்தம்

பத்தும் சொத்தாகும்
பருவங்கள் கூடும்
கட்டில் பந்தம்
பதினொன்றாம் சொந்தம்

முப்பதும் அறுபதும்
முடிந்த பின் முழு
நிலவாய் வளரும் குழந்தை
பன்னிரெண்டாம் சொந்தம்

பன்னிரெண்டு ராசிகளையும்
பதபடுத்தும் பக்குவமும்
பொறுமையும் கடமையும்
பதிமூன்றாம் சொந்தம்

பால் வாடை பெற்ற பின்
மேலாடை அலங்கரிக்கும்
தாய் மாமன்
பதினான்காம் சொந்தம்

வரவு செலவு வாழ்க்கையில்
வறுமை போக்கி
பெருமை காண்பது
பதினைந்தாம் சொந்தம்

இவை எல்லா சொந்தங்களையும்
பெற்ற பின் தங்கள்
ஆயுள் காலத்தை
அதிகரிக்கும் தலைமுறை சொந்தமே
பதினாறாம் சொந்தம்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...