சினிமா - கவிதை

எட்டுகுள் அடங்கும்‌ வாழ்க்கையை
எவ்வளவு அழகாக சித்தரித்தது
சினிமா - அங்கே

எத்தனையோ வேடங்களை
கத்தை கத்தையாய் நோட்டுகள்
அடைத்துவிட்டது - அது மட்டுமா?

வாலிப போட்டியில் பந்தாட
வர்ண ஜாலமாய் அழகிகள்
வாய்ப்புகள் தேடி வந்து குவிகிறார்கள்

குவிந்த நொடியில் கொள்கை பரப்போடு
கோடிகள் முதல் தெருக் கோடிகள் வரை

தேவலோக மனிதர்கள் போல்
தேன் கனவில் வலம் வருகிறார்கள்
தேகங்கள் காட்டும் மோகங்கள் கூட்டும்
இசைக் கோவிலில் இதயங்கள் பரிமாறும்
இன்பத்தேரில்

துன்பங்கள் தாண்டி துணிச்சலுடன்
தூவானமாய் துளிக் குதிக்கிறார்கள்
இயக்குனர்கள்
அதை அள்ளிப் பருகுகிறார்கள்
கவிஞர்கள் அதற்கேற்ப

நவரச மூட்டும் சிரிப்பலைகளும்
நந்திபோல் வழிகாட்டும்
குணச் சித்திரங்கள்

ஆகாக "சினிமா "
இனிமா கொடுக்காமலே இன்னொரு
பிரசவ உலகம்

இங்கே ஜாதி மத பேதமில்லா
சமத்துவ குடும்பத்தில் சாதித்தவர்கள்
ஆரசியல் வட்டத்திலும்
அணையாத விளக்காய்
ஆண்டுவருகிரார்கள்...!

வணக்கம்!!!

2 comments:

 1. // ஆக "சினிமா "
  இனிமா கொடுக்காமலே இன்னொரு
  பிரசவ உலகம் ///

  ரசிக்க வைத்தது...

  ReplyDelete
 2. அன்பு நன்றிகள் அண்ணா

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...