குறுங்கவிதைகள்...!


கரைந்த நீரிலும் 
காதலை தேடுகிறேன் 
கண்ணா வருவாயோ 
காதல் தருவாயோ 


உதிர்ந்த மலரிலும் 
உன் முகம் தேடுகிறேன் 
நான் வாடும் முன் 
உன் வாசம் சூடிக்கொள்ள 

காலை சூரியன் 
மாலை தென்றல் 
முடிந்தாலும் முடியவில்லை 
என் அகக் கண்களில் 
உன் முக கனவுகள் 


ஆசை பாசம் அறியும் 
வாயிப்புகள் தந்தாய் 
நீ 
என்னை கண்டுகொள்ளாமல் 
போகும் ஏக்கத்தில் 

யாரு என்று என்னை 
நினைக்கும் போது 
நானே உன் உயிர் 
என்று சொல்ல துடிக்கிறது 
இதழ்கள் 


யாரும் பார்க்கும் முன் 
நான் பார்த்துவிட்டேன் 
உன் இதயத்தின் 
ஆழம் நான் தான் என்று 

சொல்லிப் புரியாத 
ஆசைகள் 
நீ 
தள்ளி சென்ற போது 
தாகமாகிறது 
என் 
தேகத்தில் வியர்வைகளாய்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...