வீசுதடா விஷக்காற்று..!


காரில் செல்லும் நண்பா நலந்தானா நீ
காற்றில் விஷத்தை கலப்பது சரிதானா

புஞ்செய் விலையும் பூமியிலே நீ
பொல்லாத உரத்தை புகுட்டுவது சரிதானா

ஆலைகள் சிந்தும் கழிவு நீரில் நீ
அணைகளை நிரப்புவது சரிதானா

மக்கி மறையா பிளாஷ்டிக்களை நீ
மௌசுக் காட்டி புதைப்பது சரிதானா

பேசும் தென்றல் காற்றினிலே நீ
பெட்ரோல் புகையை கலப்பது சரிதானா - இதனால்

வாழும் உயிர்கள் அழிந்துவிடும் நல்
வாழ்க்கை அங்கே முடிந்துவிடுமே

கரியமில வாயுக்களால் நம் காலக்
கண்கள் அங்கே இருண்டுவிடுமே

சுவாசமுள்ள தேசத்திலே எங்கும்
சுடுகாடாய் மாறி அழித்திடுமே - அதனால்

காடு மலைகளை காத்திடுவோம்
காற்றின் நன்மை சேர்த்திடுவோம்

இயற்கை வளங்களை பயன்படித்தியே நம்
இதயம் செழிக்க வாழ்ந்திடுவோம் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

புரிதலின்றி பிரிதல் ...!

ராமூ சோனா இருவரும் நல்ல நண்பர்கள் ஒரு நாள் சோனாவிற்கு எதோ தெரியத எண்ணில் இருந்து ஒரு குறுந்செய்தி (காதல் என்ற வார்த்தையை உபயோகித்து ...