ஏழாம் அறிவு நாயகன்...!


ஆறாம் அறிவில் ஆண் மகனாய்
ஈன்ற தாயின் தலைமகனே நீ

அகரத்தின் சேவையில் சிகரமாய்
சிரிக்கும் ஏழை கல்வியின் கரையே

உன் திரை பெருமையில்
கரம் இசைக்கும் ரசிகர்களின்

உள்ளத்தில் கஜினியாய் மாறி
காதல் வெள்ளத்தில் காக்ககாக்கவென

கலக்கும் சிங்கமாய் மக்கள்
மனதில் அங்கம் பதித்த நீ

வெண் முகிலில் நனைத்து
பொன் முகிலாய் நடிக்கும்

கலையில் கைதேர்ந்த பொக்கிசத்தை
அள்ளி அனைக்கும் ஜோவின் அரசனாய்

அறிய பல படங்கள் தந்து பெரிய
பெரிய வேசங்கள் கொண்டு

ஏழாம் அறிவில் எழுதுகோலாய்
எட்டி பிடிக்கும் வான் மகனே நீ

தட்டி தட்டி எழுப்புகிறாய்
நம் தமிழ் கண்ட கலையை இனி
நம் தமிழர் கண்டு சிறக்க

பாடமாய் வந்த சூரியனே உன்
புகழ் கண்டும் வாழ்த்துகிறேன் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

இப்படிக்கு தழிழ் ...!

என் காதலை உன்னிடம்  சொன்னதை விட என்னிடம் சொன்னவை  தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)