முழு நிலவு...!


திரும்புகிறேன் இத்தருணத்தில் என்
திமிரை வென்ற திருமதி செல்வனின்
ஒரு முக கனவுகளை காண....

அன்று ...
என் கால் கொலுசு ஓசை கேட்டு நீ
என் கண் பேசும் மொழியை தந்தாய்
என் கை பேசும் வளையல் ஓலி கேட்டு நீ
என் கைக்குட்டையின் வெக்கம் தந்தாய்
என் மலர் வீசும் வாசம் கேட்டு நீ
என் மனம் பேசும் ஓசை தந்தாய்

இன்று...
என் முகம் பேச துடிக்கிறது
உன் முன்னே நின்று நீயோ
அகம் பேசும் உயிராய் முகம்
காட்டி மறைகிறாய் என்
முன் விழி கனவில் என்றும்
தேயா முழு நிலவாய்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

எழுவாய் பயனிலை  இருந்தும்  ஏதுமற்று கிடக்கிறது  நம் காதல் இலக்கணம்