ஒவ்வொரு மூச்சிலும் நீ...!


ஒவ்வொரு மூச்சிலுமே நீ வசிக்கின்றாய் - உயிர்
மூச்சொன்று நின்றாலே வாழவில்லை

ஒவ்வொரு நொடியிலுமே தொடர்கின்றாய் - என்
உயிர் மூச்சில் உறவொன்று தொடர்கிறதே

ஒவ்வெரு இரவிலுமே ரசிக்கின்றாய் - உன்
நிலவொன்று நடந்தாலே ஒளி வந்து மறைகிறதே

நல் காற்றுகள் இங்கு வேண்டும்
நம் வாழ்வில் அதில் வயதுகள் கூடும் பல நாளில்

கனிகளின் மூச்சு விதைகள் வெடித்தாலே
மீண்டும் கனியாக பிறக்கிறது

மரங்களின் மூச்சு இலைகள் உதிர்ந்தாலும்
மீண்டும் இலையாக தளிர்கிறதே

காதலின் மூச்சு தோல்வியில் முடிகிறதால்
மீண்டும் காதலில் பூக்கிறது....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கவிச்சூரியன் - 2018 சூலை மாத மின்னிதழ்

குழி விழுந்த கன்னம் வந்து குவிகிறது முத்த மழை பச்சிக்காத கடவுள் முன் பல வகையான நெய்வேத்தியம் ...